வங்கக் கடலில் உருவான யாஷ் புயல் ஒடிஸ்ஸா, மேற்குவங்கம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கடும் சேதங்களை உருவாக்கியிருக்கிறது. புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடச் சென்ற பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தின் பூர்பா மெடினிபூரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்.பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை மதியம் 2:30 மணி முதல் 3:30 மணி வரை பாசிம் மெடினிபூர் மாவட்டம் கலைகுண்டாவில் திட்டமிடப்பட்டது. மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மோடிக்கும் முதல்வர் பானர்ஜிக்கும் இடையிலான முதல் நபர் சந்திப்பு இதுவாகும். அதனால் இச்சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாக கவனிக்கப்பட்ட நிலையில் யாஸ் புயலின் தாக்கம் தொடர்பாக நடந்த கூட்டத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக வந்த மம்தா பானர்ஜி. இக்கூட்டத்திற்கு பாஜகவின் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியை மத்திய அரசு அழைத்ததால் எதிர்ப்பு தெரிவித்த தாமதமாக வந்த மம்தா பானர்ஜி பின்னர் அங்கிருந்து வெளியேறினார். ஆனால் பின்னர் தனியாக மோடியைச் சந்தித்து மேற்குவங்க மாநிலத்திற்கு இருபதாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கோரினார். நான் கூட்டத்தில் இருந்து அவரது அனுமதியோடுதான் வெளியேறினேன். புயல்சேதங்களை பகுப்பாய்வு செய்வதற்காக வெளியேறினேன்” என விளக்கம் கொடுத்துள்ளார் மம்தா பானர்ஜி.