Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மோடியால் வசிகரிக்கப்பட்ட வை.கோ உம் வளர்த்துவிட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும்

இனியொரு... by இனியொரு...
02/09/2014
in இன்றைய செய்திகள்
0 0
23
Home இன்றைய செய்திகள்

vaiko_moodiமத்திய நிதியமைச்சர் சிதம்பரம் குறித்து பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதற்க ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.சென்னையில் நேற்று இரவு மோடியை வைகோ சந்தித்து பேசினார். இது குறித்து ம.தி.மு.க., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உங்கள் குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும், முகமும் வெளிப்படுத்தும் பாவனை மக்களை வசீகரித்து விட்டது. உங்களது உரை உன்னதமானது என வைகோ கூறியதற்கு, மோடி நன்றி தெரிவித்தார். கூட்டாட்சி குறித்த உங்களது கருத்து நாட்டுக்கு மிகவும் அவசியம் என வைகோ கூறியதற்கு, தமிழகத்துக்கு இதுமுக்கியம் என மோடி பதிலளித்தார். சிதம்பரத்தை மறு வாக்கு எண்ணிக்கை மந்திரி என விமர்சனம் செய்தது ஸ்பெஷல் என வைகோ கூறினார். தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., என்ற பரிமாணம் என்ற மாயை உடையும் என வைகோ கூறியதற்கு, அதனை நான் எதிர்பார்ப்பதாக மோடி கூறினார் என ம.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி என்பவர் மனிதகுலத்தின் அவமானம். இந்தியர்களுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கு மட்டுமல்ல மொத்த மனிதகுலத்தினதும் அவமானச் சின்னம் நரேந்திர மோடி. ஆயிரக்கணாக இஸ்லாமியர்களை தனது தலைமையில் கொன்று குவித்து ஒரு லட்சம் முஸ்லீம்களை அகதிகளாக விரட்டியடித்த இனக்கொலையாளி மோடி. ஆ.எஸ்.எஸ் என்ற பாசிச அமைப்பின் நீண்டகால தலைமை உறுப்பினர். இந்தியாவைப் புற்றுநோய் போல அரித்துவரும் அந்த அமைப்பு 1927 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்தாலிய பாசிஸ்ட் முசலினியின் தத்துவங்களால் ஆட்கொள்ளப்பட்டு இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
வெளிப்படையாகவே ஹிட்லரை ஆதரிப்பவர்கள். ஜேர்மனியில் தனது இனத்தைத் தூய்மைப்படுத்தி உலகத்தை ஹிட்லர் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது போன்று நாமும் நடந்துகொள்ளவேண்டும் என்று அவர்களின் நூலில் கூறப்பட்டுள்ளது. அந்த இந்துவ அமைப்பின் முக்கிய உறுப்ப்னரான பாசிஸ்ட் நரேந்திர மோடி குஜராத்தைத் தூய்மைபடுத்திய போதே பெண்களைப் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி எரித்துவிடுமாறு தனது படைகளுக்கு உத்தரவிட்டார். இந்தியாவின் ராஜபக்சவான இவரின் தமிழ் நாட்டு அடியாள் வை.கோபாலசாமி. அதுவும் ஈழத் தமிழர்களின் பேரால். அவர்களது அவலங்களின் பேரால் மோடியின் அடியாளாக வேலைசெய்வதை நியாயப்படுத்துகிறார் வை.கோ.
தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் அடிப்படை ஜனநாயகத்திற்கான நியாயமான போராட்டம். இன்று வரை ஏகாதிபத்தியங்களின் அடிவருடிகளகவும், பிற்போக்காளர்களின் கைப்பிள்ளை போன்றும் ஈழப் போராட்டம் குறித்த விம்பத்தை உலக மக்களுக்கு வழங்கியவர்கள் இலங்கையில் ஒடுக்கபடும் தமிழ்ப் பேசும் மக்கள் அல்ல. வை.கோ போன்ற கேவலமான பிழைப்பு வாதிகளும் புலம் பெயர் அமைப்புக்களும் மட்டுமே. இன்றோ வை.கோ ஈழப் போராட்டத்தையும் இந்து பாசிசத்தையும் இணைத்து ஈழம் பிடிக்கப்போவதாக நாடகமாடுகிறார்.
இந்தப் பேர்வளியின் இழி செயலால் நியாயமான மக்களின் போராட்டத்திற்குக் மேலும் கறைபடிகிறது.
வை.கோ வை வளர்த்துவிட்டதில் புலம் பெயர் அமைப்புகளுக்கே பிரதான பங்குண்டு. புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு வை.கோ சமூகமளிப்பது வழமை. வை.கோ வராவிட்டாலும் அவரது ஒலி நாடா ஒலிபபரப்படும்.
இனக்கொலையாளியின் அடியாள் வை.கோ என்ற அவமானச் சின்னத்தை நிராகரிக்கவும் தம்மை சுய விசாரணைக்கு உட்படுத்தவும் புதிய அரசியலை முன்வைக்கவும் புலம்பெயர் பிழைப்புவாத அமைப்புக்கள் தயாரில்லை.
தமிழ்ப் பேசும் மக்கள் பிழைப்புவாதிகளின் முன்னால் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு இதைவிடச் சான்றாதாரம் தேவையில்லை.
மோடியின் கரங்களில் கருகிப்போன மனிதப் பிணங்களைக் கண்டுகொள்ளாத வை.கோ, அவரின் கரங்களின் பாவனையால் வசீகரிக்கப்பட்டுள்ளாராம்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அமரிக்க ஆசியுடன் ஐரோப்பாவில் உருவாக்கப்படும் ஹிட்லர்கள்:ஓங்கும் கொலைக்கரங்கள்

அமரிக்க ஆசியுடன் ஐரோப்பாவில் உருவாக்கப்படும் ஹிட்லர்கள்:ஓங்கும் கொலைக்கரங்கள்

Comments 23

  1. kaarunya says:
    12 years ago

    வெற்றி வீரன் என்று தம்மைத் தாமே அறிமுகப்படுத்திக்கொண்ட பிரபாகரன் வைகோ, நெடுமாறனிடம் ஆலோசனைக் கேட்க துவங்கும் போதே எமது போராட்டத்தின் தோல்வி உறுதியாகிவிட்து.

    • Sutharsan says:
      12 years ago

      When did you come to know this ? Now or then ?

    • Lala says:
      12 years ago

         30 வருட ஈழப்போராட்டத்தில்  புலிகளும் , புலிகளின்  தலைவரும் பல  வெற்றிகளை குவித்திருக்கிறார்கள் . கடைசியில்  தமிழர்களின் எதிரிகளும் , உலகநாடுகளும் ஒரணியில் நின்று போராட்டத்தை தோற்கடித்தார்கள் . 

      இதற்கு பல காரணங்கள்  ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.

      ஆனால்  உங்களது மேலான  ஆய்வு  புலிகலின் தலைவர் நெடுமாறன் , வைகோ  போன்றவர்களின்  ஆலோசனையை கேட்டதனாலேயே  விளைந்ததென்று புதிய  கண்டு பிடிப்பொன்றை செய்துள்ளீர்கள் .

      உஙகளைப்போல்தான் இந்திய  தேசிய வாதிகளும் , அதன் புலனாய்வு துறையால் சம்பளம்  பெற்று வருபவர்களும்  , இத்தைகைய  கண்டு பிடிப்புகளை  செய்து வருகிறார்கள்.

      உஙகளைப்போன்ரவர்களிடம் ஒரு கேள்வி .

      போராட்டம்  ஆரம்பமான  காலத்திலிருந்து  புலிகள் பல  வெற்றிகளை குவித்திருக்கிறார்கள் . ஆனியிறவில்  ஆரம்பித்து  ஜெசிக்குறு வரை  வெற்றிகளை குவித்து சிங்கள  ராணுவத்தை ஒட ஒட விரட்டயிருக்கிறார்கள் .

      அத்தைகைய   ராணுவ  வெற்றிகளையும் ,நெடுமாறனதும் , வைகோ வினதும்  ஆலோசனையை  பெற்றுத்தான்  சாதித்தார்களா ?

      அப்படியானால் உங்களைப்போன்றவர்கள்  அப்போதெல்லாம் அதைப்பற்றி  மூச்சுக்கூட  விடவில்லயே ?

      வைகோவினதும் ,நெடுமாறனதும் ஆலோசனையைப்பெற்றுத்தான்  புலிகள் இத்தைகைய வெற்றியை பெற்றார்கள் என  அவர்களை தலையில் தூக்கி வைத்து  கொண்டாடியிருக்க வேண்டுமே .

      அப்படி எதையும் உங்களிப்போன்ற  தகிடு தத்திகள்  ஒருபோதும்  மறந்தும் சொன்னதுமில்லை  செய்ததுமில்லை . 
      இப்போது போராட்டம்  தோற்றவுடன்  இஅவ்ர்கள்து ஆலோசனையை  கேட்டுத்தான்  புலிகளின் தலைவர்  போராடினார் .
      அவருக்கு சொந்தமா புத்தியில்லை என உங்கள் புலனாய்வு திறமைகளை அவிழ்த்து  விட  ஆரம்ப்த்துள்ளீர்கள்..

      • Pela says:
        12 years ago

        உலகநாடுகள்  ஒராணியில்  நின்றால்  மட்டும்  போராட்டங்களை தோற்கடிக்க  முடியும் என்றால்  இன்று  உலகில்  போராட்டங்களே இருந்த்திருக்காது..   புலிகள்  இந்தியவிடமும்,  உலகநாடுகளிடமும்  பயிற்சி  எடுத்து  மக்களை    னம்பாமல்  ஆயுதங்களை வைத்தே எல்லாவற்றையும் செய்தார்கள்.  அழிக்கபடக் கூடியநிலையில் இருந்த்தார்கள்.  பிரபாகரனா இயக்கத்தை  னடத்தினார்?  அம்மனுக்கு  விரதமிருக்கவும்  யாராவது  பிரச்சனைப்பட்டால் போட்டுத் தள்ளுவதும் தான்  அந்த அப்பவி செய்த கைங்கரியம், கடைசியாக  முள்ளிவாய்க்காலில்  3 லச்சம் மக்களைப் பணயம் வைத்து  னடத்திய  போராட்டத்தில்   இலங்கை அரசாங்கத்துகு  ஒரு லச்சம் பேரை பலிகொடுத்தார்.   ரெலோ, ஈபி, புளொட், அறிவுஜீவிகள், கல்வியாளர்கள்  என்று எத்தனை பேரை  பிரபாகரன் என்ற முட்டாளை வைத்து 1980 ஆம் ஆன்டிலிருந்து கொன்று போட்டார்கள் தெரியுமா? இதுக்குப் பிறகும்  பிரபாகரனை தூக்கிப் பிடிக்க  எப்படி உங்க்ளால் முடிகிறட்கு?

        • Lala says:
          12 years ago

          அமெரிக்க  இரட்டை  கோபுர  தாக்குதலுக்குப்பின்  தமிழர்களின் போரட்டம் மட்டும் அழிக்கப்படவில்லை . தமிழர்களின்  போராட்டம் அழிக்கப்படு முன்பே உலகில் பல பாகங்களிலும்  செச்சினிய போராட்டத்திலிருந்து  பல போராட்டங்கள் உலக நாடுகளால் அழிக்கப்பட்டுள்ளன .
          உலக போராட்ட வரலாறுகளை தெரிந்து கொண்டு பேசு.
          சும்மா இங்க  வந்து காது குத்தாதை…

          • Pela says:
            12 years ago

            அப்போ, குர்திஷ்தான், பாஸ்க்,  கொலம்பியா, பிலிபைன்ஸ், கஷ்மீர், மவோயிஸ்டு, எல்லாம்  இரட்டக் கோபுர  வட்டாரத்துக்குள்  அடங்கவில்லையோ? அழிக்கப்பட்ட  போராட்டங்கள் எல்லாம் அழிக்கப்படக் கூடியநிலையில் இருந்த்தமையே காரணம். 

          • Lala says:
            12 years ago

             #மக்களைநம்பாமல் ஆயுதங்களை மட்டும் நம்பி அழிக்கப்படக்கூடிய நிலையிலதான் இ
            ருந்தார்கள் #

            அப்படியானால் அவ்வளவு சுலபமாக அழிக்கப்படக்கூடிய  நிலையிலிருந்தவர்களை  சுலபமாக முன்பே அழித்திருக்கலாமே ?

            அரசையும் , வளங்களையும் , வெளி நாட்டு உதவிகளையும்  வைத்துக்கொண்டு  , இவ்வளவு சுலபமாக  அழிக்கப்படக்கூடியவர்களை அழிப்பதற்கு  முப்பது  வருடங்களாக  உங்கள் எஜமானர்கள் எப்படியெல்லாம் திண்டாடிப்போனார்கள் .
            உங்களையும் , உங்கள் எஜமானர்களையும் பார்த்தால்தான் பாவமாயிருக்கிறது.

            # டெலொ ,ஈபி , புளொட், கல்வியாளர்கள் என எத்தனை பேரை கொன்று போட்டார்கள் #

            நல்ல வேளை உங்கள்  எஜமானர்களான  சிங்கள இராணுவத்தினரையும் , புலனாய்வாளர்களையும்  விட்டு விட்டீர்கள். அவர்களையும் சேர்த்திருக்கலாமே ?
            எஜமானர்  கோவிச்சுக்க  போறார் ?

            நீங்கள்  மேற் குறிப்பிட்ட பட்டியலில்  உள்ள்வர்கள் ஒன்றும்  ஆய்தம்  தாங்காநிராயுத பாணிகளுமல்ல  படுகொலைகளை  மேற்கொள்ளாத  உத்தமர்களும் அல்ல .
            குறிப்பாக  சிங்கள  ராணுவத்துடன் , இந்திய ராணுவத்துடன் , அதன் புலனய்வாளர்களுடன்  சேர்ந்தியங்கியபோது நடத்திய  படுகொலைகள் , ஆட்தடத்தலகள் இன்னமும்  தமிழ் மக்கள் மத்தியில் பசுமையாக நினைவிருக்கிறபோது , தாங்கள்  மட்டும் அவற்றையெல்லாம் வசதியாக  மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது.
            அல்லது அவ்வாறு  பாதிக்கப்பட்டவர்கள் மனி உயிர்களே யில்லை எனநினைத்து  விட்டீர்கள் போலிருக்கிறது

  2. Sivarooben says:
    12 years ago

    வை.கோ, சீமான்,நெடுமாறன் ஆகியோர் புலிகளால்  பிரச்சாரம்  செய்வதற்காக  பணத்துக்கு வேலைக்கு   அமர்த்தப்பட்டவர்கள். வை.கோ புலிகளுக்காக  பணப்பதுக்கலிலும்  ஈடுபட்டவர்.   அப்பாவி மக்களின் வியர்வையை காசாக்கி  பதுக்கிக் கொண்ட வைகோ இப்போது  யாரும்  பணத்தை  திருப்பிக் கேட்டால்  பிரபாகரன்  வந்த்தால்  தான்  தருவேன் எஙிறார்.

    • Sutharsan says:
      12 years ago

      Did you go and ask for the money ?

    • Lala says:
      12 years ago

      அடடே! என்ன அநியாயம் !நீங்கள் போய்க்கேட்டு  அவர் பணத்தை  தராமல் உங்களை வெறுங்கையுடன்  திருப்பி  அனுப்பி விட்டாரா ?

      என்ன  இருந்தாலும்  அவர் உங்களுக்கு அப்படி செய்திருக்க கூடாது.

      அது சரி ஒரு சந்தேகம், 
      இந்தியாவில்  , வருமான  வரித்துறை , சி பி ஐ ,  போன்ற துறைகள் சட்டத்துக்கு புறம்பான பணம் , கவாலா பணம் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கும் , அத்தைகய பணம் வைத்திருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவும் இருக்கிறதாமே ?

      உங்களுக்கு அவை பற்றி எதுவுமே தெரியாதா ?

      சரி , உங்களிடம் இல்லாத அந்த புலிகளின் பணம் அவரிடம் மட்டும் இருக்கலாமா ?
      அதனால் இப்போதே வெகுண்டெழுந்து அவை  பற்றிய தகவல்களை  சி.பி .ஐ யுக்கும் , வருமான  வரித்துறைக்கும் . போலிஸுக்கும் அளித்து விடுங்கள் .
      வைகோவிற்கு ஒரு பாடம் படிப்பித்த  மாதிரியும் இருக்கும் ,  புலிகளின் பணம் சரியான இடத்திற்கு ( அதான் இந்திய அரசிடம் )
      போன  மாதிரியும் இருக்கும்..

      • Pela says:
        12 years ago

        //இந்தியாவில்  , வருமான  வரித்துறை , சி பி ஐ ,  போன்ற துறைகள் சட்டத்துக்கு புறம்பான பணம் , கவாலா பணம் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கும் , அத்தைகய பணம் வைத்திருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவும் இருக்கிறதாமே ?//
        தூய்மையான அமைப்புக்கள் போல?  அ.ராசாவின்  தலைமையிலா இயங்குகிறது? மஞ்சள் துணியோடு  சென்னைக்கு  வந்த்த  கருணாநிதியிடம்  கேட்டுச் சொல்லுங்கள்.

        • Lala says:
          12 years ago

           ஆ.ராசா வின் தலைமையில் இயங்குவதால்தான் அவர் திகார் ஜெயிலில் பல மாதங்களாக  களி தின்று கொண்டிருந்தாரா ??

           அதனால்தான் மஞஞள் துண்டுக்காரரின்  மகள் எட்டுக்கு எட்டு தனிமை சிறையில்  வாடினாரா ?

           போங்கடா நீங்களும்  உங்க நியாயங்களும்

          • Pela says:
            12 years ago

            அப்போ  தயநிதி  மாறன், செயலலிதா, எம்ஜாரு  எல்லாமே  னேர்மையா  சொத்து சொகத்தோட வழ்ந்தாப்பில..

          • Lala says:
            12 years ago

            ## தயாநிதி , ஜெயா , எம் ஜீ ஆர் எல்லோரும்நேர்மையா  சொத்து சேர்த்துட்டப்போலை ###

             இந்தியத்தலைவர்கள் பலர் ஊழல்  குற்றச்சாட்டுக்கு உள்ளானபோது அதில் பலர்  விசாரணை வளயத்துக்குள்  கொண்டு வரப்பட்டார்கள் 
             உ/ம்  இந்திரா காந்தி , ஜெயலாலிதா . 

            ஆனால் மிகச்சொற்பமானவர்களெ  தண்டனை  பெற்றார்கள் .
            சமீபத்திய  உ/ம் லாலு பிரசாத்.

            இதற்கு  அரசியற்  காரணங்கள் இருந்தாலும்  போதிய சான்றுகள் ஆவணங்கள்  இல்லாமையுமாகும்.

            பத்திரிககளில் வரும் செய்திகளை  மட்டும்  வைத்துக்கொண்டு ஒருவரை குற்றவாளியென  முடிவு செய்ய முடியாது.

            வைக்கொவைப்பற்றி   இங்கு அள்ளி விடும்போது ,நிறைய  ஆதார்ங்களை  வைத்திருப்பார்கள் என்று நினைத்தேன் .

            அதனால்தான்  தகவல்கள் , மற்றும் ஆதாரங்கள்  இருந்தால் வருமான வரித்துறைக்கும் , சி பி ஐயுக்கும் அதனை தெரிவித்து வைக்கோவை  காட்டி கொடுக்குமாறு  ( அதுதான் உங்களுக்கு  சொல்லிக்கொடுக்க தேவையிலையே } கூறியிருந்தேன் .

            ஆனால் இப்போதுதான் தெரிகிறது ,நீங்கள் வெறும்  வாய்ப்பந்தல் வீரர்கள் என்பது . உங்களிடம்  அப்படி ஏதுமில்லை உங்களுக்கு பிடிக்காத வர்கள்  மீது எந்த  ஆதாரங்களுமில்லாது  சேற்றை  வாரி வீசும் இருட்டு  வீரர்கள்  என்பதை உங்களைநீங்களே  தோலுரித்து  காட்டி விட்டீர்கள் 

  3. Lala says:
    12 years ago

    # வைகோவை வளர்த்து விட்டதில் புலம்பெயர்  தம்ழ் அமைப்புகளுக்கு பெரும் பங்கிருக்கிறது #
     
     ஆமாம் இல்லாவிட்டால் , தமிழ்நாட்டில் அவரை  யாரென்றே  தமிழ் நாட்டில்  யாருக்கும்  தெரிந்திருக்காது. 

    புலம்பெயர் தமிழ் அமைப்புகளால் தான் அவர் தமிழ் நாட்டில் பிரபலமானார் .

    # புலம்பெயர் நாடுகளில் நடை பெறும்நிகழ்வுகளில்  வைக்கோ கலந்து கொள்வது வழமை . வராவிட்டால் அவரது உரை அங்கு ஒலிபரப்படும் #

     பாஸிச   பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தரும்   வைக்கோ வை  அழைர்த்திருக்க கூடாதுதான் .

    அதற்கு பதிலாக   சீன செஞ் சதுக்கத்தில்  போராடிய  மணவர்களை ஆயிரக்கணக்கில்  டாங்கியை ஏற்றி கொன்ற  சீன  பாஸிச தலைவர்களை அல்லவா அழைத்திருக்க வேண்டும் .

    அப்படி  முடியாவிட்டல் செச்சினிய  படுகொலை பாஸிச ரஷ்ய தலைவர்களை அல்லவா அழைத்திருக்க  வேண்டும் .

    புலம்பெயர் தமிழ் அமைப்புளுக்கு  யாரை அழைக்க  வேண்டும் , யாரை அழைக்க கூடாதென்று  தெரியவில்லத்தான்…

    • Pela says:
      12 years ago

      //அதற்கு பதிலாக   சீன செஞ் சதுக்கத்தில்  போராடிய  மணவர்களை ஆயிரக்கணக்கில்  டாங்கியை ஏற்றி கொன்ற  சீன  பாஸிச தலைவர்களை அல்லவா அழைத்திருக்க வேண்டும் .
      அப்படி  முடியாவிட்டல் செச்சினிய  படுகொலை பாஸிச ரஷ்ய தலைவர்களை அல்லவா அழைத்திருக்க  வேண்டும் .//    யாரையாவது  பிடித்துவந்த்து  வயிறு  புடைக்க  சாப்பாடு போட்டு வால்பிடிப்பது தான் உங்கள்  வழி.  மக்களை பற்றி ச்ந்த்திப்பதே கிடையாது/  மக்கள் விட்டில் பூச்சிகள் தானே உங்களுக்கு.   புலம் பெயர்நாடுகளில்  எத்தனை  பேர் இணைந்த்து  போராடுகிறார்கள். உங்களுக்கு தான் வைகோ அல்லது செஞ்சீனம்  வேணும் … போங்கடா….

      • Lala says:
        12 years ago

         ஆமாம் உலகத்தில் எல்லோருமே  கெட்டவர்கள் .நீயும் நீ மாமா வேலை பார்க்கும் ராஜ பக்ஷ  குமபல்கள் மட்டுமே உலக  மகா யோக்கியர்கள் .

         யோக்கியன் வந்துட்டான் சொம்பை தூக்கி உள்ள வை.

        • Pela says:
          12 years ago

          உணர்ச்சிவசப்படாதீர்கள்  கேட்டதுக்கும்  மட்டும்  பதில் சொல்ங்கள்  சாமிகளே!  நான் சொம்ம்பு   தூக்கி….நீங்கள்  கால் வாளி தூக்கியோ?

          • Lala says:
            12 years ago

            நான் உணர்ச்சி வசப்படவில்லை .  சீனத்தைப்பற்றியும் , ரஷ்யாவைப்பற்றியும்  சொல்லியவுடன்  , சீன  ரஷ்ய  இடது சாரி கும்பல்களான உங்களுக்குத்தான் பொத்துக்கொண்டு வந்து விட்டது.

  4. Pela says:
    12 years ago

    //அப்படியானால் அவ்வளவு சுலபமாக அழிக்கப்படக்கூடிய  நிலையிலிருந்தவர்களை  சுலபமாக முன்பே அழித்திருக்கலாமே ?
    அரசையும் , வளங்களையும் , வெளி நாட்டு உதவிகளையும்  வைத்துக்கொண்டு  , இவ்வளவு சுலபமாக  அழிக்கப்படக்கூடியவர்களை அழிப்பதற்கு  முப்பது  வருடங்களாக  உங்கள் எஜமானர்கள் எப்படியெல்லாம் திண்டாடிப்போனார்கள் .//  உங்கள்  எஜமானர்கள்  திண்டாடவில்லை.  வளர்த்துவிட்டார்கள்.  உத்ர் பிரதேஷ்  இல்  ரா  பயிற்சி,   மொசாட்  பயிற்சி,  னார்வே உதவி…  புலியை வைத்து   போராடக் கூடியவர்களைப்  போட்டுத் தள்ளி  பிறகு புலியை  போட்டு தள்ளிவிட்டார்கள்.  உங்கள்  எஜமானர்கள்   புலியை  வைத்து  தான்  அறிவு  சீவிகளை  அழித்து  போராளிகளை அழித்து இப்போ உங்கள் ராஜபக்சவிடம்  ஒப்படைத்திருக்கிறார்கள்.     மக்கள்  ராணுவ  சிறையில் வாழ்கிறார்கள்.

    • Lala says:
      12 years ago

      ## உங்கள் எஜமானர்கள்  வளர்த்து விட்டார்கள் ##

       அடேங்கப்பா 30   வருடங்களாக  வளர்க்து விட்டுக்கொண்டா  இருந்தார்கள்? . இது கொஞஞம்  ஒவராத்தெரியலை ?
       உங்க  கண்டு பிடிப்பு  இப்பவே  கண்ணைக்கட்டுதே ?

      ## உத்தர பிரதேச பயிற்சி , மொஸாட் பயிற்சி ,நோர்வே உதவி ##

      தலிபான் பயிற்சி , அல் கெதா பயிற்சி  யை  சொல்லமல்  விட்டிட்டீங்க போல . பாவம்  அவசரத்தில  மறந்திருப்பீங்க .

        ஆனா பாலஸ்தீன  பயிற்சியை மட்டும்  சொல்லி  வைச்சா மாதிரி   வேண்டுமென்றே  மறந்து விட்டீர்கள் .
      அதானே பாத்தன் , சீனத்தில்  அல்லது ரஷ்யாவில்  பயிற்சி  பெற்றிருந்தால்  பொத்திக்கொண்டிருந்திருப்பீர்கள்.

      # எசமானர்கள் புலிகளை  வைத்து போராடக்கூடியவர்களை போட்டுத்தள்ளினார்கள் ##

      போராடக்கூடியவர்களை அடிக்கோடிடுங்கள் .
      அந்த ப்போராடகூடியவர்கள்  யார் ?  அவர்களுக்கு பயிற்சியும் உதவியும்  வழங்கியவர்கள் யார் ?   புலிகளுக்கு பயிற்சி  வழங்கிய  அதே  எசமானர்கள்தானே நீங்கள்  புகழ்ந்து  கூறும்  போராடக்கூடியவர்களுக்கும்  பயிற்சி வழங்கினார்கள் .

      சரி ,  போராடக்கூடியவர்களை  அழிப்பதற்கு  புலிகளுக்கு பயிற்சி  வழங்கினார்கள் .

       போராடக்கூடியவர்களுக்கு  யாரை அழிப்பதற்கு  அதே எசமானர்கள்  பயிற்சி  வழ்ங்கினார்கள் ???

      அதை  மட்டும் வசதியா மறந்துட்டீங்களே  வாத்தியாரே ?

      அது சரி , உங்களுக்குத்தான் அம்னீஷீயா வியாதி இருக்கிறதே ?

      உங்களுக்கு  வசதிப்படும்போது  அப்பப்போ  சில விஷயங்கள் மறந்துடும்..

  5. Pela says:
    12 years ago

    //நீங்கள்  மேற் குறிப்பிட்ட பட்டியலில்  உள்ள்வர்கள் ஒன்றும்  ஆய்தம்  தாங்காநிராயுத பாணிகளுமல்ல  படுகொலைகளை  மேற்கொள்ளாத  உத்தமர்களும் அல்ல .
    குறிப்பாக  சிங்கள  ராணுவத்துடன் , இந்திய ராணுவத்துடன் , அதன் புலனய்வாளர்களுடன்  சேர்ந்தியங்கியபோது நடத்திய  படுகொலைகள் , ஆட்தடத்தலகள் இன்னமும்  தமிழ் மக்கள் மத்தியில் பசுமையாக நினைவிருக்கிறபோது , // ஈழத்தில் புலிகள் கூட மாற்று இயக்கங்களை அழித்தை தவறு  என்றும் முஸ்லிம் மக்களை இரவோடு  இரவாக வெளியேற்றியது தவறு  என்றும் காத்தான் குடியில்  பச்சைப் பாலகர்களை  வெட்டிக்கொன்று  வீரம் பேசியது தவறு என்றும் ஒத்துக்கொள்ளும்  போது கொலைகாரப் பிறவிகளான உங்களைப் போன்ற சில பீலா விடுவது என்னநியாயம்?  தவறுகளை ஒத்துக்கொண்டல் தான்  இனி    நடக்காமல்  பார்த்துக்கொள்ளலாம். உங்கள் எஜமானர்கள்  சரியான  வழியில் [போராட்டம்நடக்க விடமாட்டார்கள்.

  6. Lala says:
    12 years ago

    முஸ்லிம்  ஊர்காவல் படையினர் கிழக்கில்  சிங்களப்படையினரிடம் ஆய்தங்கள்  பெற்று , அரை குறைப்பயிற்சியும் பெற்று தமிழ் மக்கள் மீது மேற்கொண்டநர வேட்டையின் பின்பே புலிகள் அவரகள்  மீது  தாக்குதல் மேற்கொண்டார்கள். 

    பச்சைப்பாலகனைப்பற்றி நீங்கள் குறிப்பிட்ட சம்பவம்  முஸ்லிம் காடையர்களால் தமிழ் பாலகன் மீது நடத்தப்பட்டது . அது மட்டுமல்ல கோவிலில் இருந்த தமிழ் மக்களை வெட்டியும் கொத்தியும் படுகொலை செய்தபோது  ஒரு 3 மாத குழந்தையை கோவில் சுவற்றில் அறைந்து  கொன்றார்கள் முஸ்லிம் கடை கும்பலகள் .
    அத்தைகைய சம்பவங்களையெல்லாம் அப்படியே மாற்றிப்போட்டுள்ளீர்கள் . பேலா என்று பெயர் வைத்தத்ற்கு பதில் பீலா என்று பெயர் வைத்திருக்கலாம்.
    யாழில்  வெளியேற்றிய  முஸ்லிம்கள்  உயிரோடுதான் இருக்கிறார்கள் . மீள் குடியேரலாம் . அவர்கள் ஊரை விட்டுத்தான் அனுப்ப  பட்டார்கள் .
    ஆனால் கிழக்கில்  முஸ்லிம் காடையர்களால் கொல்லப்பட்ட தமிழ் மக்களால்  மீள் குடியேற  முடியாது . காரணம் அவர்கள் உலகத்தை விட்டே அனுப்பபட்டு விட்டார்கள் .அப்படித்தான் கிழக்கில் இன்று பல தமிழ் கிராம்ங்கள் முஸ்லிம் கிராமங்களாக  மாற்றப்பட்டுள்ளன .
    அத்தைகைய  கெட்டிக்கார கொலை பாதகர்களுக்காகத்தான்  வ்க்காலத்து  வாங்குகிறாய் .

    இதைகைய கொடூரங்கள் புரிந்த  முஸ்லிம்கள்  மீதும் மாற்று இயக்கத்தினர் மீதும் தாக்குதல்நடத்தியமைக்கு    புலிகள் மன்னிப்பு  கோரியுள்ளதாக  தெரிவித்துள்ளீர்கள் .

     பச்சை படுகொலைகளை நிகழ்த்திய  மாற்று இயக்க்கங்கள் மற்றும் முஸ்லிம்  தரப்புகள் இன்று வரை அதற்கு மன்னிப்பு  கோரியதில்லை என்பதை உங்கள் மர மண்டைக்கு  இடித்துரைக்க  விரும்புகிறென்.
    மன்னிப்பே  கே ட் காத கொலயாளிகளுக்காக  வக்காலத்து  வாங்குபவர்கள்  அந்தக்கொலயாளிகளை  விட  மோசமான  பக்கிகள்..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...