கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா, நரேந்திர மோடி குஜராத்தில் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்து வருகிறார். ஆட்சியை நல்ல முறையில் நடத்துகிறார். மேலும் நாட்டிலேயே புகழ்பெற்ற மனிதர் என்று அவரை பற்றி ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந் நிலையில் பிரதமர் பதவிக்கு மோடி பொருத்தமானவர், தகுதியானவர்.
எனவே, அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக இப்போது மும்பையில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கட்சியின் மேலிடத்தை கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்
குஜராத்தில் இனப்படுஜ்கொலை நிகழ்த்தி 2 ஆயிரம் முஸ்லிம்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொலைசெய்த நரேந்திர மோடி ‘ராஜபக்சவிற்கு முன் உதாரணமானவர்’ என்பது குறிப்பிடத்தக்கது.







