உலகம் முழுவதிலும் இரத்த ஆறு ஒடுவதன் பின்னணியில் செயற்படும் ஏகாதிபத்தியங்களின் தலைமை நாடான அமெரிக்கா இலங்கையில் நடைபெற்ற தேர்தலின் பின்புலத்திலும் செயற்பட்டது. தேர்தலில் மைத்திரிபால வெற்றிபெற்ற மறுகணமே அவருடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி அறிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்ட விதம் பாராட்டுக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்கா ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த தமது அரசியல் பொருளாதார அழுத்தங்களை ஆரம்பித்துவிட்டது. தமது நேரடியான அடியாட்களைக் கையாள்வதற்கு ஜோன் கெரி தயாராகிவிட்டார்.







