மே மாதம் 18ம் திகதியன்று மத்திய லண்டனில் இனப்படுகொலைக்கு எதிராக அணிதிரளுமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது அதே வேளை இதே நாளில் ஜெனீவாவில் புலம் பெயர் தமிழர்களை அணிதிரளுமாறு நாடு கடந்த தமிழீழம் அறிக்கை விடுத்துள்ளது:
முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் இனவழிப்பு செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு லண்டனின் மத்தியிலுள்ள ட்ரபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) எதிர்வரும் 18ஆம் நாள் நடைபெறவுள்ளது.
மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை இந்த நிகழ்வை நடத்துவதற்கு பிரித்தானிய காவல்துறையினர் எமக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
தமிழர் தாயகத்தில் நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த இனவழிப்பின் உச்சகட்டமாக இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவேந்துவது மட்டுமன்றி, இந்தப் படுகொலைகளைப் புரிந்தவர்களை சட்டத்தின் முன்னிறுத்துவதும் புலம்பெயர்ந்த மக்களின் கடமையாகும்.
மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல், போர்க்குற்றச்சாட்டு, இனப்படுகொலை என கட்டம் கட்டமாக முன்னேறக்கூடிய பின்புலத்தைக்கொண்ட அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் ஒரே சக்தியாகவுள்ள புலம்பெயர்ந்த மக்கள், முள்ளிவாய்க்கால் இனவழிப்பை மூடிமறைக்க முயலும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும், ஏனைய சக்திகளுக்கும் இந்த நாளில் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் மீது நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த இனவழிப்பின் உச்ச கட்டமே முள்ளிவாய்க்கால் என்பதை அனைத்துலகிற்கு இடித்துரைத்து, தொடரும் இனவழிப்பை தடுத்து நிறுத்தி, நீதி கேட்கும் எமது பயணத்தை ஓயாது முன்னெடுப்போம்.
குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், பெண்கள், ஆண்கள் என அகவை, பால் வேறுபாடின்றி கொத்துக் குண்டுகள், எறிகணைகள், எரி குண்டுகள், சுடுகலன்கள் என பல்வேறுபட்ட உலகத்தால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளை அவர்கள் மேல் பொழிந்து கொன்று குவித்தது சிறீலங்கா அரசாங்கம். மேலும் காயப்பட்ட மக்களை உயிருடன் குழிகளில் போட்டுப் புதைத்தும் எரித்தும், எஞ்சிய மக்களை கைது செய்து சித்திரவதை செய்தும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தி அதன் பின் கொன்று புதைத்தது.
18ஆம் நாள் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் தினத்திலே இனவழிப்புப் போரினால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் திருவுருவப் படங்களை வைத்து உறவினர்களுடன் சேர்ந்து அவர்களை நினைவு கூர பிரித்தானிய தமிழர் பேரவை தீர்மானித்துள்ளது.
எனவே இன அழிப்புப் போரினிலே படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் தகவல்கள், திருவுருவப் படங்கள் இருப்பின் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்பு கொண்டு அவற்றினை 14.05.2011 ஆம் திகதிக்கு முன்னர் தந்துதவுமாறும், அத்துடன் காணாமற் போனோர் விபரங்கள் இருப்பின் அவற்றை தந்துதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
உருவப்படங்கள் A5 என்ற அளவுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். படங்களின் மூலப்பிரதியை வைத்துக் கொண்டு படத்தின் பிரதியை கையளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
பின்வரும் விபரங்களை படத்தின் பிற்பகுதியில் தெளிவாக எழுதி கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
1. படுகொலை செய்யப்பட்டவரின் முழுப்பெயர், சம்பவம் நடைபெற்ற இடம், திகதி, எவ்வாறு நடைபெற்றது.
2. தகவல் வழங்குவோர் விபரம்:- முழுப்பெயர், தொலைபேசி இலக்கம், உறவுமுறை.
3. காணாமல் போனவர்களின் முழுப்பெயர், தாயக முகவரி, சம்பவம் நடைபெற்ற இடம், திகதி எவ்வாறு நடைபெற்றது.
4. தகவல் வழங்குவோர் விபரம்:- முழுப்பெயர், தொலைபேசி இலக்கம், உறவுமுறை
அத்துடன் முள்ளிவாய்க்கால் தினமன்று அனைத்து மக்களையும் எழுச்சியுடன் அணிதிரண்டு வந்து இழந்த எமது உறவுகளை உணர்வு பூர்வமாக நினைவுகூருமாறும், இந் நிகழ்வு தொடர்பான பணிகளில் பணியாற்ற விரும்புகின்றவர்கள் உடனடியாக பிரித்தானியத் தமிழர் பேரவையுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
உங்களது விபரங்களை எமது பிரேதேச ரீதியான தொடர்பாளர்களை தொடர்பு கொண்டு அங்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
வழங்க வேண்டிய இடங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:
175 Tooting high Street, Tooting SW17 0SZ
079 0375 0245
432 Alexander Avenue, Rayners lane, Harrow HA2 9TW
079 5895 3394
258 High Street North, Manor Park, E12 6SB078 3295 4281
247 Lewisham Way, Near Lewishan College, SE4 1 XF
078 1396 9192
Walththamstow, Willowfield-school, Clifton Ave, E17 6HL
075 7760 3882
079 6115 8453
079 4034 3935
Out of London (Bermingham, Manchester etc..)
079 2702 3912
079 3921 5177
075 3338 1189
அனைவரும் கருப்பு உடையணிந்து எமது உள்ளக்கிடக்கையை உலகறியச் செய்வோம்.
பேரூந்து ஒழுங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
நிலமேல் தொடருந்து நிலையம்:
Charing Cross (3 நிமிட நடைதூரம்)
மிக அருகிலுள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையம்:
Charing Cross (Bakerloo & Nothern Lines)
சில நிமிட நடை தூரத்திலுள்ள ஏனைய நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள்:
Leicester Square, Piccadilly Circus, Embankment
அனைவரும் ஒன்றுபட்டு அனைத்துலக சமூகத்தை தட்டியெழுப்பி, எமது உறவுகளின் படுகொலைக்கான நீதியினைப் பெறுவோம்.
பிரித்தானிய தமிழர் பேரவை
Tel: +44 (0)208 808 0465, 078 1448 4938
Email:admin@tamilsforum.com








ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வு. இது தமிழர் மட்டும் அல்ல முழு உலகும் தம்மை மறு பரிசீலனை செய்து மீண்டும் ஒரு இனப்படுகொலை உலகில் எங்கும் நிகழாது பார்த்துக் கொள்ள இந்த இனஒழிப்பு வாரம் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
பிரித்தானியத் தமிழர் பேரவையின் முயற்சி வரவேட்கப்படவேண்டியதே,
அதே நேரம்,எமது இனத்திற்கு பேரவலம் நடந்து கொண்டிருக்கும் போது இன்னும் அவலத்தை மோசமாக்கிய புலிகளின் சில தவறுதலான நகர்வுகளிட்கோ அல்லது புலிகளை தவறான நகர்வுகட்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளித்த, தூண்டியதான ஒரு குற்றச் சாட்டையும் இந்த உணர்வு பூர்வமான நேரத்தில், இங்கிதம் கருதி கூறாமல் இருக்க, முடியாதுள்ளேன்.
இப்படியான தமிழ் மக்களிற்கு பொதுவான உணர்வு பூர்வமான நிகழ்வுகளை சரியான நோக்கத்திற்கான
சரியான வழிமுறையூடு நகர்த்திச் செல்ல வேண்டும்.தங்களுடைய தவறுகளை விமர்சிக்காத வரை நாம்
தமிழ் மக்களிற்கு பொதுவான உணர்வு பூர்வமான நிகழ்வுகளை கூட துஸ்பிரயோகம் செய்தவர்களாகிறோம்.
very sorry to say this.I do appreciate BTF’s work but hard work is not only factor to win our goal.
தேவன் 2 கருதைப்படித்து புலிகளே சிரிக்கினறன. என்னிடம்கோபம் வரும்தான்
உண்மை என்று ஒன்று உள்ளது. இறுதிபோரின் போது சிங்கள இராணுவத்தால் கொல்லப்படும் போது தமிழர்களை துடிக்க துடிக்க படமாக்கியவ்ர்கள் யார்? இறுதி நேரம்வரை கப்பல் வருமென்று சொல்லி
ஏமாற்ரியவ்ர்கள் யார்? இவர்களை யாரவது க்ண்டு பிடித்தீர்களா?
இப்போ அந்த அனியாயமாக இறந்தவ்ர்களின் படங்களை காட்டி புலம்பெயர்நாடுகளில் அரசியல் நடத்துபவர்கள் யார்? திரும்பவும் சிங்கள இனத்தை தமிழர் மீது
ஆத்திரமூட்டச் செய்து திரும்பவும் படுகொலைகளைச் செய்ய வைத்து புலிகளின் தடையை நீக்க முயலவது யார்? 30 வருடமாக ஒரே பாணியிலான் நாடகம்.
அன்று எல் ரீ.ரீ .ஈ. இன்று ஜிரிஎவ். திரை ஜிரிவி.-துரை
தேவன் 2 கருதைப்படித்து புலிகளே சிரிக்கினறன. என்னிடம்கோபம் வரும்தான்//
could you please explain what are you trying to say?
I don’t get it.
பிரித்தனியப் பேரவையை ஆதரித்துக்கொண்டு
அதே வேளை போர்காலத்தில் நடந்தவைக்காக புலிகளை விமர்சிப்பது எனக்குப் புரியவில்லை.
பிரித்தானியப்பேரவை புலிகளில்லையென்றால்
புலிகளிற்காக பின்ண்ணியிலிருந்து
யார் செயற்பட்டார்களென்பது கூட தெரியாதவ்ர்களா?
தொடர்ந்தும் தமிழர் தமிழர்களால் ஏமாற்றப்படுகின்றார்கள்.-துரை
மூலோபாயம்:
தமிழின உணர்வாளர்கள், மனித உரிமைக்காக போராடுவோர், தமிழ் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரையும் இணைத்து எமது இலக்குகளிட்கு எதிரான சக்திகள், அதிகாரங்களிட்கு அழுத்தத்தை கொடுத்தல்.
தந்திரோபயதிட்கு வரக் கூடிய தடைகள். 3: குழு வாதத்தை கையாளுதல்:——————————————————–
எம்மிடையே உள்ள மிகப் பெரிய தடை, கவனமாக கையாளப் படவேண்டியது.—————————————— எம் இலக்கு, மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம் போன்றவற்றில் நாம் தெளிவாக இருப்போமானால் , வெவ்வேறு காரணங்களிட்காகவும்,தெரிந்தோ தெரியாமலோ எம் தவறிட்கும்,முதன்மை எதிரிக்கும் ஆதரவுக் கருத்துக் கொண்டோரையும் எம் கருத்துக்கள் மூலம் அவர்களின் குழப்பத்தை போக்கி அவர்களை எம் இலக்கு நோக்கி மட்டும் சிந்திக்கத் தூண்டலாம்.
……………………………………………………………..
இப்படியான தமிழ் மக்களிற்கு பொதுவான உணர்வு பூர்வமான நிகழ்வுகளை சரியான நோக்கத்திற்கான
சரியான வழிமுறையூடு நகர்த்திச் செல்ல வேண்டும்.தங்களுடைய தவறுகளை விமர்சிக்காத வரை நாம்
தமிழ் மக்களிற்கு பொதுவான உணர்வு பூர்வமான நிகழ்வுகளை கூட துஸ்பிரயோகம் செய்தவர்களாகிறோம்.
தவறு செய்யாத மனிதன் உலகிலில் காண்பது அரிது. தவறென்று தெரிந்தும்
தங்கள் சுயநலன்களிற்காக உண்மைகளை மறைத்து பெருந்தொகையான பண்த்தினை பொய்யான பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி தமிழரை தவறான்
வழிகளில் கொண்டு செல்வோரை முதலில் தமிழினம் அடையாளம்காண்வேண்டும். கருத்தாளர் இவர்களை வெளிக்கொண்டு வர முயலவேண்டும்.-துரை