சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நேற்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடந்தது. இம்மாநாட்டில் தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி உட்பட 28 நாடுகளின் தூதர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச முதலீடுகள் என்ற பெயரில் ஏழை நாடுகளில் எஞ்சியிருக்கின்ற வளங்களையும் ஒட்டச் சுரண்டிக்கொண்டு செல்வதே பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் நோக்கம். இந்த நிறுவனங்கள் இப்போது அரச தலைவர்களின் ஆசீர்வாதத்தோடு நேரடியாகக் கொள்ளையிடுகின்றன. இக்கொள்ளையை வேலை வாய்ப்பு, அபிவிருத்தி என்ற பல்வேறு பெயர்களில் அழைத்துக்கொள்கிறார்கள்.
மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘மேக் இன் இந்தியா’ என்ற பெயரில் இந்தியாவில் உற்பத்தியை பெருக்குவோம் இந்தியாவை உலகளாவிய தயாரிப்பு மையமாக மாற்றுவதுதான் இதன் நோக்கம். இந்தியாவில், ஜப்பான், சீனா, அமெரிக்காவில் இருந்து 100 பில்லியன் டாலர் (சுமார் ரூ.6 லட்சத்து 10 ஆயிரம் கோடி) முதலீடு செய்வதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
இவர்கள் கேட்கும் அனுமதி நாட்டைச் சுரண்டுவதற்கானது. இவ்வாறு முதலீடு என்ற பெயரில் அடித்த கொள்ளையில் உலகின் பணக்காரர்கள் உலகைத் தமக்கு வேண்டியவாறு மாற்றிக்கொள்கிறார்கள். நரேந்திர மோடி போன்ற அடிமைகளை அவர்களே நியமிக்கிறார்கள். உலகின் 100 பணக்காரர்கள் இணைந்தால் உலகம் முழுவதில் நான்கு தடவைகள் மீண்டும் மீண்டும் வறுமையை நிறுத்த முடியும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாய்ப்பை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்வது மாநிலங்களின் கைகளில் தான் இருக்கிறது. அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும். இதில் அரசியல் கிடையாது. பொருளாதார வளர்ச்சிதான் இலக்கு. இந்த தருணத்தில், இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை உலகத்துக்கு நாம் ஏற்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த உலகத்துக்கு நான் கூறுகிறேன் என்று மோடி மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் பத்தாண்டுகள் ஆசிய நாடுகளைச் சுரண்டுவதற்குரிய காலம் என் அமெரிக்காவே தெரிவித்திருக்கிறது. அதனை மோடி உள்வாங்கிக்கொண்டு மானில அரசுகளுக்குச் சொல்கிறார்.
a foolish article ever… totally biased.. and also get some brains on investment before putting out something irresponsible
இனியொருவில் நான் பெரிதும் மதிக்காத பதிவுகள் சிலதைக் கண்டுள்ளேன் அனால் இது ஒரு பாராட்டத்தக்க பதிவு. இனியொருவுக்கு நன்றி.
இப்போ மாநில ஊர்வலம் போகத்தொடங்கியிருப்பது ஒன்றும் புதிய விடயமில்லை. இப்போ பல வருடங்களாக குஜராத்தில் இதே முதலீட்டு முதலைகள் ஒருவரின் முதுகை ஒருவர் சொறியும் ‘வைப்ரன்ட் குஜராட்’ நிகழ்வின் தொடர்ச்சியே என்பதையும் அம்பானி கள்ளக்கூட்ட சகோதரர்களின் பேச்சுக்களிலிருந்து எப்படு மோடி பல்தேசிய நிறுவனங்களின் ஆட்டப்பொம்மையாக வளைக்கப் பட்டமையையும் பார்த்து அறிய:
http://www.vibrantgujarat.com/testimonials.htm
ஜெயலலிதாவவின் அதிகாரப்போக்கு ஆளுமைக்கு நேரம் பார்த்து ஒப்பீட்டளவில் குரூரமான தண்டனை மூர்க்கத்தனமாக அறையப்பட்டதன் பின்புலமும் இந்த மாநிலஞ் சார்ந்த வியாபரப் போட்டியே.
Actually the comrades will be happy if all States follow West Bengal (pre-Mamata); the whole country will be red; all factories, manufacturing units will be sent out of the country; the workers’ union offices only will remain in Industrial estates. Ambani, Adani, Bajaj, Birla, et al will shift their manufacturing units to Africa or even China. India will be WestBengal magnified.