மூழ்குகிறது காங்கிரஸ் கப்பல், குதித்து தப்பி விடுங்கள்: ஐ.மு.கூட்டணிக் கட்சிகளுக்கு பிரகாஷ் காரத் வேண்டுகோள்

சென்னை

“காங்கிரஸ் கட்சி இப்போது மூழ் கிக் கொண்டிருக்கிற கப்பல். அது முழுவதுமாக மூழ்குவதற்குள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள மற்ற ஜனநாயக – மதச்சார்பற்ற கட்சி கள் வெளியே குதித்துவிட வேண் டும்,” என்று பிரகாஷ் காரத் வேண்டு கோள் விடுத்தார்.

விலைவாசி உயர்வை எதிர்த்தும் இந்திய – அமெரிக்க அணு சக்தி ஒப் பந்தத்தைக் கண்டித்தும் சென்னை யில் புதனன்று (ஜூலை 16) மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் இணைந்து இக்கூட் டத்தை நடத்தின. சென்னை புல்லா அவென்யூ பகுதியில் நிற்கவும் இட மின்றி நிரம்பியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் நிறை வுரையாற்றினார். அவரது உரையின் சில முக்கிய பகுதிகள் வருமாறு:-

காங்கிரஸ் தலைமையிலான ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அர சுக்கு இடதுசாரி கட்சிகள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்ட தற்கான கடிதத்தை நாங்கள் குடிய ரசுத் தலைவரிடம் அளித்தபோது, அதற்கு இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டிருந்தோம். ஒன்று, இந்த சிறுபான்மை அரசு நாடாளுமன்ற ஒப்புதலையோ, மக்களின் ஒப்பு தலையோ பெறாமலே இந்திய – அமெரிக்க அணுசக்தி உடன் பாட்டை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங் கியது. இரண்டு, இந்த அரசு கடுமை யான பணவீக்க பிரச்சனைகளையும் விலை உயர்வுப் பிரச்சனைகளையும் சமாளிப்பதில் தோல்வியடைந்து விட்டது என்று அக்கடிதத்தில் கூறியிருந்தோம்.

ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இருவருக்கும் இடையே ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டம் உருவானது. அதனை செயல்படுத் துவதில்தான் இந்த அரசு அக்கறை யும் வேகமும் காட்டியதேயன்றி இந்த தேசத்தின் மக்களுக்கு வாக்க ளித்த தேசிய குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை செயலாக்க தயாராக இல்லை.

இன்றைய விலைவாசி உயர்வுக் கொடுமைக்கு மன்மோகன் சிங் அரசின் கொள்கைகள்தான் கார ணம். இது உலகளாவிய பிரச்சனை என்று அவர்கள் சொல்லிக் கொள் கிறார்கள். ஆனால், நம் நாட்டில் போதுமான உணவு தானியங்கள் இருப்பு இருக்கும் நிலையில் எதற் காக கடந்த 2 ஆண்டுகளாக மிக அதிகமான விலை கொடுத்து இறக்கு மதி செய்ய வேண்டும் என்ற கேள் விக்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு கடந்த ஓராண்டு காலமாக நாங்கள் ஐந்து ஆலோசனைகளை வலியுறுத்தி வந்திருக்கிறோம். ஆனால் அவற்றில் ஒரு ஆலோச னையைக் கூட இந்த அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

அமெரிக்காவில் (மற்ற நாடுகளு டனான உடன்பாடுகளை கட்டுப் படுத்தும்) ஹைடு சட்டம் இருக்கும் வரையில் இந்த அணுசக்தி உடன்பாட்டில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என தொடக்கத்திலிருந்தே தெளி வாகச் சொல்லி வந்திருக் கிறோம்.

ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு காங்கிரஸ் தலைமை இடதுசாரிகள் பாஜக-வுடன் இணைந்து செயல்படுவதாக குற்றம் சாட்டுகிறது. இந்தக் குற்றச் சாட்டை நாங்கள் அடி யோடு நிராகரிக்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வந்த மாநிலங்களில் எங் கெல்லாம் தேர்தல் வந்ததோ அங்கெல்லாம் அக்கட்சி படுதோல்வி அடைந்த தோடு, அங்கெல்லாம் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கொள்கைகளால் மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்திகளை பாஜக அறு வடை செய்திருக்கிறது.

மதவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் எவராலும் மறுக்க முடியாத வரலாறு படைத்தவர்கள் இடதுசாரி கட்சிகள். இடதுசாரிகளின் தலைமையில் உள்ள மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங் களில் நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஒரு இடம் கூட பாஜக-வுக்கு கிடைத்ததில்லை. ஆகவே, மதவெறியை எதிர்த்து எப்படிப் போராட வேண்டும் என்பதை காங் கிரஸ் கட்சி எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும்.

அணுசக்தி உடன்பாடு விஷயத்தில் இடதுசாரி களையும், நாட்டு மக்களை யும் இந்த அரசு அப்பட்ட மாக ஏமாற்றியிருக்கிறது. முதலில், நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகுதான் பன்னாட்டு அணுசக்தி ஆய்வு முகமையோடு (ஐஏ இஏ) அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று சொன்னார்கள். ஆனால் அப்படிச் சொன்ன அதே நாளில் இந்த அரசு ஐஏஇஏ இயக்குநர்களோடு அடுத்த கட்ட நடவடிக்கை யை தொடங்கிவிட்டது. அவர்களிடம் அளித்த ஆவ ணம் பாதுகாப்பு ரகசியம் சார்ந்தது, அது வெளியே காட்டக்கூடாத ரகசியம் என ஐஏஇஏ நிபந்தனை விதித் திருப்பதாக கூறினார் கள். ஆனால் அது ரகசிய ஆவணம் அல்ல என்று ஐஏஇஏ அறிவித்தது. இப்படி மக்க ளிடம் பொய் சொல்லி உடன்பாட்டை நிறைவேற்ற முயல்கிறது இந்த அரசு.

ஜூலை 22 நம்பிக்கை வாக்கெடுப்பில் மன் மோகன் சிங் அரசு வெற்றி பெறுகிறதோ இல்லையோ மக்களின் நம்பிக்கையை அது ஏற்கெனவே இழந்து விட்டது. ஆட்சியை காப் பாற்ற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய் வார்கள். 1993ல் பி.வி.நர சிம்ம ராவ் தலைமையி லான சிறுபான்மை காங் கிரஸ் அரசு, நாங்கள் கொண்டு வந்த ஒரு நம்பிக் கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக எம்பி-க்களுக்கு லஞ்சம் கொடுத் தது. லஞ்சக் குற்றச்சாட் டுக்கு உள்ளான முதல் பிரத மர் அவர்தான். அதேபோல் இப்போதும் நடக்கலாம். ஆனால், நாங்கள் அணு சக்தி உடன்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் ரீதியான எங்களது போராட் டத்தை தொடர்ந்து மேற் கொள்வோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் எங்களு டைய சில நண்பர்கள் இருக் கிறார்கள். அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். காங்கிரஸ் இப்போது மூழ்கிக் கொண் டிருக்கிற கப்பல். அது முழு வதுமாக மூழ்குவதற்குள் வெளியே குதித்து தப்பி விடுங்கள். மதவெறி சக்தி களையும், காங்கிரஸ் பொரு ளாதாரக் கொள்கைகளை யும் வீழ்த்துகிற ஒரு புதிய அணியாக நாம் உருவாகலாம்.

இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார். அவரது ஆங்கில உரையை கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர். உ.ரா.வரதராசன் தமிழாக் கம் செய்தார்.