Sunday, May 11, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மூன்று தெய்வங்கள் : யமுனா ராஜேந்திரன்

இனியொரு... by இனியொரு...
08/30/2009
in அரசியல்
0 0
25
Home அரசியல்

1.

மூன்று தெய்வங்கள் என்று சொன்னேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி அல்ல, அவரை விடவும் நடிப்புக் கில்லாடிகளான தமிழகத்தின் மூன்று தெய்வங்கள் பற்றிச் சொல்லப் போகிறேன்.

முதல் தெய்வம் ஜெயமோகன். இரண்டாவது தெய்வம் சாருநிவேதிதா. மூன்றாவது தெய்வம் எஸ்.ராமகிருஷ்ணன்.

தமிழ் இலக்கியவாதிகளுக்குப் பொதுவாக அரசியல் ஈடுபாடு என்பது இருப்பதில்லை. அவர்கள் வெளிப்படையாக அரசியல் நிலைபாடுகள் எடுப்பதும் இல்லை. தமிழ் இலக்கியச் சூழலில் ஜெயகாந்தன் ஒருவரே நானறிந்தவரை ஒரேயொரு விதிவிலக்கு. ஒப்பமுடியாத அவரது அரசியலுக்கும் அப்பால், தான் சரி எனக் கருதியதை வெளிப்படையாக எழுதியும், கட்சி மேடைகளில் கர்ஜனையுடன் பேசியும் வந்தவர் அவர்.

அவரது பார்ப்பனிய சார்புகளையும் இந்துத்துவ வேர்களையும் தற்போது நிறையக் கட்டுடைப்பு செய்கிறார்கள். அதற்கான அரசியல் காரணங்கள் தமிழ் கலாச்சாரச் சூழலில் உண்டு என்றாலும், ஜெயகாந்தன் ஒரு போதும் இடதுசாரிகளுக்கு எதிராகவும், மார்க்சிய புரட்சிகர மரபு தொடர்பாகவும் இழிவாகப் பேசியவரோ, எழுதியவரோ, அல்லது இவற்றுக்கு எதிராக நிற்பதை ஒரு அரசியலாக ஏற்றவரோ இல்லை. இன்றைய கட்டுடைப்பு விமர்சகர்கள் ஜெயகாந்தனை நிராகரிக்கவும் செய்யலாம்.

எவ்வாறு தமிழ் திரைப்பட வரலாற்றில் எம்.ஜி.ராமச்சந்திரன் வழி விளிம்புநிலை மனிதர்கள் தமிழ்த்திரைக்குள் பிரவேசித்தார்களோ, அதுபோல ஜெயகாந்தன் வழிதான் விளிம்புநிலை மனிதர்கள் வெளிப்படையாகத் தமிழ் இலக்கியத்திற்குள் பிரவேசித்தார்கள். இந்தத் தமிழ்க் கலாச்சார வரலாற்றை எந்தக் கொம்பனும் புறந்தள்ள முடியாது.

சுஜாதாவின் அடியொற்றியபடி இனிவருகிறார்கள் தமிழ் இலக்கிய வானின் மூன்று தெய்வங்கள். மரணத்திற்குச் சில மாதங்கள் முன்பாகச் சுஜாதா பார்ப்பனர் சங்க மாநாட்டு மேடையில் முழங்கினார். அசோகமித்திரன் தமிழகப் பார்ப்பனர்களின் நிலைமையை இரண்டாம் உலகப் போர்க்கால யூதர்களின் துயரநிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார். அசோகமித்திரன் அவரது கதைமாந்தர்கள் போலவே அமைதியானவர். ஆனாலும் என்ன, அமைதியின் பின்னால் பேரழிவின் தடங்களும் இருக்கவே செய்கிறது.

சுஜாதா மரணமுற்றபோது திடும்மென்று சாருநிவேதிதா சுஜாதா எனது ஆசான் என்றார். எஸ்.ராமகிருஷ்ணன் வாத்தியார் என்றார். இலக்கியத்தில் எவரும் கதை அளந்து கொண்டே இருக்கலாம். அரசியலில் மனோரதியத்திற்கோ உணர்ச்சிவசமான கொந்திப்புகளுக்கோ எந்தவிதமான அர்த்தமும் இல்லை. உணர்ச்சிகரமாக்கப்பட்ட அரசியலின் பின்னிருப்பது கூட, உணர்ச்சி ஊட்டுபவரினது அதிகார அபிலாஷைகளும், அவர்தம் பிரபலம் நோக்கிய நடவடிக்கைகளுமாகத்தான் இருக்கிறது.

உணர்ச்சியூட்டும் சாதுரியமான அதிகார நோக்கு கொண்டவராக ‘வாழும் தமிழ்’ கலைஞர் கருணாநிதியை நாம் சுட்டு முடியுமானால், பிரபலத்தை முன்வைத்து முக்கியத்துவம் பெறுவதற்கான எடுத்துக்காட்டாக ‘உணர்ச்சி எழுத்தாளர்’ சாநி, ‘எல்லோர்க்கும் நல்லவர்’ எஸ்ரா, ‘இந்துத்துவக் கும்பமுனி’ ஜெமோ போன்ற மூவரையும் குறிப்பிடலாம்.

இவர்கள் மூவருக்கும் நிறைய பொதுத் தன்மைகள் இருக்கிறது. மூவரும் தமிழ்வெகுஜன சினிமாவை அதில் ஈடுபட்டவர்களினுடனான உறவுக்காக விதந்தோதுபவர்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்கு உள்ள எல்லாக் கல்யாண குணங்களும் இவர்களுக்கு உண்டு. உணர்ச்சி அரசியல் தமிழக அரசியல். தடாலடியாக உணர்ச்சிவேகமாக உரைகளை வீசினால் நீங்கள் தமிழகத்தில் அதிகம் கவனம் பெறுவீர்கள். ஜெயமோகனும் சாநியும் இப்படியான அதிஉணர்ச்சிகரமான தடாலடி அரசியல் அபிப்பிராயங்ளை அவ்வப்போது வெளிப்படையாக எழுதுவார்கள்.

2.

தெருப் புழுதியில் கட்டிப் புரண்டு ‘ங்கோத்தா அம்மா’ ரேஞ்சுக்குச் சண்டை போடுகிற, பரஸ்பரம் வன்மத்தைத் தமது சொந்த வாழ்வில் நிறைத்துக் கொண்டிருக்கிற ஜெமோவும் சாநியும்தான் காந்தி பற்றியும் அகிம்சை பற்றியும் பிறருக்குப் போதிக்கிறார்கள். வன்முறை தோற்றுப் போனது பற்றியும் காந்தியம் வெல்லும் என சாநி தீர்க்கதரிசனங்களைச் சிந்தியபோது, ஜெமோ அதனைத் தனது குழிந்த உள்ளங்கையில் பிடித்து புனித தீர்த்தமென அருந்தியபடி ‘ஜெய்ஹிந்த்’ என்று சிலிர்த்துக் கொண்டார்.

இருவரும் தொடர்ந்து வன்முறை,குவேரா, கியூபா, சுதந்திரம், ஈழம், ஆயுதப் போராட்டம், காந்தியஅகிம்சை என கதாகாலட்வேபம் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

என்னாவானாலும், சாநி ‘மம்மி ரிட்டர்ன்’ பிரகடனத்துக்குப் பிறகு ஜெமோவுடன் சமரசத்திற்குத் தயாரில்லை.

இந்த இடத்தில் கொஞ்சம் பிளாஸ்பேக்குக்குப் போவோம். சாநிக்கும் ஜெமோவுக்கும் இடையில் என்ன நடந்தது? சாநியின் எழுத்துக்களை விமர்சித்து ஜெமோ ஒரு ஒண்ணரைப் பக்கம் எழுதினார். சாநி ‘லபோ திபோ’ என்று 45 பக்கத்துக்குப் புத்தகமே எழுதி உலகெங்கும் மின்னஞ்சலில் சுற்றுக்கு விட்டார்.

தனக்கு மாரடைப்பே வந்து உயிரே போயிருக்கும் என்ற ரேஞ்சுக்குப் புலம்பித் தீரத்துவிட்டார் சாநி.

தனக்கென்று வருகிறபோது இப்படித் ‘தாம் தூமென்று’ உணர்ச்சிவசப்படும் சாநி பிறரைத் துன்புறுத்துவதையும், சக எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதையும், தன்னுடன் முரண்படும் எழுத்தாளர்களுக்கு ‘பூணா சூணா’ என்று தூசனத்திலேயே கடிதம் எழுதுவதையும் தன்னுடைய வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்த அறச்சீலர்.

ஜெமோவின் கழிசடை மனதுக்கு திகசி, மனுஷ்யுபுத்திரன், எம்.ஜி.ஆர் குறித்த அவரது வக்கிரமான தாக்குதல்களே போதும். இயற்கையாக நேர்கிற முதுமையையும் உடல் ஊனத்தையும் முன்வைத்து தனது அரிப்பைத் தீரத்துக் கொள்கிற வக்கிர மனம் கொண்ட நபர் ஜெமோ.

இவர்கள் இருவரும்தான் அகிம்சை குறித்துப் பேசுகிற மகான்கள்.

ஜெமோ சாநி விளையாட்டு பரஸ்பரம் இருவரதும் அங்கீகாரம் நோக்கிய எலி பூனை விளையாட்டு. சாநியின் உடல்நலம் குறித்து ஜெமோ விசாரித்த கொஞ்சநாளில் கருணாநிதி-ஜெமோ விவகாரத்தில் சாநி ஜெமோவுக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதுவார். பிற்பாடு என்ன கெட்ட காலமோ ஜெமோவுக்குச் சனிபிடித்து சாநியை விமர்சிக்க மறுபடி சாநிக்குச் சாமி வந்து ஜெமோ எதிர்ப்புச் சன்னதம் ஆடுவார்.

‘நான் கடவுள்’ என்கிற பாசிஸ்ட் படத்துக்கு அதனது வசனத்திற்காக ஜெமோவுக்குச் சாநி புகழ் மாலை சூடுவார். மனுஷ்யபுத்திரனிடம் போய் எனது விமர்சனத்தில் ‘என்னமோ’ தவறுகிறது, என்னவெனத் தெரியவில்லை என்பார். ‘இட்லரும் ஊனமுற்றவர்களைக் கொன்றான். அகோரியும் கொல்கிறான். இது பாசிஸ்ட் படம்’ என மனுஷ்யபுத்திரன் சொல்ல, அப்போது, அந்த நிமிசம் தான் இவருக்கு ஞான திருஷ்டி வந்து தனது விமர்சனத்தில் தவறிய ‘என்னவோ’ ஞாபகம் வந்ததாம். அயோக்கித்தனம். பாசிசம் என்கிற மனித விரோதம் ‘என்னவோ’ ஆக, வசனம் மட்டும்தான் தனக்கு மனதில் நிற்கிறது என்கிற நேர்மையாளன்தான் சாநி.

சாநியை நான் ஏன் ‘உணர்ச்சி’ எழுத்தாளர் எனக் குறிப்பிடுகிறேன் என்பதை அவர் எழுத்துக்களைக் கொஞ்சமேனும் வாசித்தவர் அறிவர். மழித்த அல்லது மழிக்கப்படாத ‘உலகு தழுவிய அல்குல்’ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அவர், திபுக்கென்று உலக புரட்சிகர இயக்கங்களின் ஞாபகத்திலீடுபட்டு, கியூபாவில் (கியூபா இல்லை கூபா – சாநி) சுதந்திரம் பற்றியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் மீதான மனிதஉரிமை மீறல் பற்றியும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் வன்முறை பற்றியும், திடும்திக்கென்று அதிர்ச்சிகரமாக எழுதுவார்.

ஈழத்தில் வன்முறை தோற்றுவிட்டது எனக் கூறும் சாநி, காந்தியமே இனி உலகு இருளுக்கான அகல்விளக்கு எனவும் எழுதுகிறார். சாநியின் புரமவைரி ஜெயமோகன் சாநியின் இந்தப் பொன்மொழிக்காக அவரை வாழ்த்தியும் இருக்கிறார். கடன் திருப்பிக் கொடுத்து ஆயிற்று. ‘நான் கடவுள்’ வசனத்திற்கு சாநி போட்ட ‘சபாசு’க்கு, ஈழ வன்முறை குறித்து சாநி எழுதிய கட்டுரைக்கு ஜெமோ ‘சபாசு’ போட்டிருக்கிறார்.

சாநியும் சரி ஜெமோவும் சரி கதை விடுவதில் மன்னர்கள். சாநியின் ‘நான் கடவுள்’ கட்டுரையைப் படியுங்கள். சாநி எவ்வளவு அண்டப் புழுகன் என்பது அப்போது தெரியும். அகோரியின் பாத்திர வளர்ச்சியை அவனது கொலைச் செயல்பாட்டை சாநி அளவு ஜெமோ கூட தர்க்கபூர்வமாக நியாயப்படுத்தி டெமான்ஸ்ரேட் செய்திருக்க மாட்டார்.

‘நான் கடவுள்’ பட விமர்சனத்தில் அகோரிக்கு கடவுள்தன்மையை வழங்குகிற சாநியின் கருத்தாக்கத்தை உருவிவிடுங்கள். அந்தக் கட்டுரையில் மிஞ்சுவது வெங்காயம். பின்னால் சாநி ஏற்கிற பாசிசக் கூற்றை வைத்துக் கொண்டால், சாநியின் கட்டுரை ஒரு தன்வயமான மோசடிக் கட்டுரை. எப்படி ஒரு எழுத்தாளன் ஒரே சமயத்தில் பாசிஸ்ட்டாகவும் பாசிச எதிர்ப்பாளனாகவும் இருக்க முடியும்?

இதுதான் சாருநிவேதிதாவின் அரசியல் தரிசனம். புல்ஷிட்.

வேலுபிரபாகரன் படங்களின் வசனத்தை விட என்ன புண்ணாக்கு ஜெமோவின் நான் கடவுளில் இருக்கிறது என்பது இன்று வரையிலும் எனக்குப் புரியவில்லை. கடவுளை நிந்தனை செய்யும் திராவிட மரபைத் தனதாகக் கோரிக்கொள்கிற அயோக்கியத்தனம்தான் ஜெமோவின் நான் கடவுள் வசனங்கள்.

இந்த வசனங்களைப் புகழ்கிற சாருவுக்கான நன்றியைத் திருப்பிச் செலுத்தும் செயல்தான் ஈழம் பற்றிய சாநியின் கட்டுரைக்கான ஜெமோவின் புகழ்மாலை. அதைச் சாநிக்குத் தனியே மின்னஞ்சல் செய்யாமல் வலைத்தளம் மூலம் எட்டச் செய்ததூதன் சாநிக்கு ஜெமோ மேல் உள்ள கோபத்திற்கான காரணமாக இருக்கும்.

அது கிடக்கட்டும் சனியன். பிரச்சினை என்னவென்றால், வேறு எந்த தத்துவ மசிர் மாறுபாடுகளும் இருவருக்குள்ளும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்வதுதான்.

3.

எஸ்.ரா, ஜெமோ, சாநி மூவருக்குமே எதிர்ப்பு அரசியல் பற்றிப் பேச எந்தவிதமான அடிப்படைத் தகுதிகளும் இல்லை.

இன்குலாப் போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் தமது சொந்த வாழ்வில் ஒடுக்குமுறைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்ட எத்தனையோ தமிழக எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வேறு வேறு காரணங்களுக்காக நான் அதனை இங்கு விரிவாக எழுதாமல் தவிர்க்கிறேன்.

தமது எழுத்துக்கள் தமது பிழைப்பைக் கெடுக்கும் என்றால் எத்தகைய சமரசத்திற்கும் தயாரானவர்கள்தான் இந்த மூன்று தெய்வங்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி பற்றிய கட்டுரைகளை அதன்மீது வந்த விமர்சனங்களை அடுத்து தனது வளைத்தளத்திலிருந்து அகற்றியவர்தான் ஜெயமோகன்.

‘மன்னிப்புக் கோராவிட்டால் திரைத்துறையில் பணியாற்ற முடியாது’ என்ற திரைப்படத் துறையினரின் தடையைக் கடந்து, நான் கடவுளுக்கும், அங்காடித் தெருவுக்கும் எவ்வாறு ஜெமோ வசனமெழுத எப்படி முடிந்துது என்பதை ஜெமோ எப்போதும் வெளிப்படையாகச் சொன்னதில்லை. என்ன சமரசத்திற்கு அவர் ஆட்பட்டார் என்பதும் ரகசியம் போல் பாதுகாக்கப்படுகிறது.

கட்டுரைகள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டது. இதுதான் ஜெமோவின் எதிர்ப்புக் குணாம்சம்.

எஸ்.ரா. மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ பற்றி ஒரு கடுமையான விமர்சனம் எழுதினார். ‘அமரோஸ் பெரோஸ்’ உள்பட பல படங்களின் பாதிப்பினை அக்கட்டுரையில் அவர் சுட்டிக் காட்டினார். கொஞ்ச நாட்களில் அக்கட்டுரை அவரது வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டது. இதுதான் எஸ்.ராவின் விமர்சன ஆளுமை.

எஸ்.ரா நிஜத்தில் ஒரு தனிரகம். காம்ரேட் என விழித்து ஜெயகாந்தனுக்கு ரெட்சல்யூட் அடிப்பார். திரைப்பட இயக்குனர் லிஞ்குசாமி நல்ல இலக்கிய வாசகர் என விளித்து, அவருக்கு அறிவுஜீவி வேசம் கட்டுவார். ஜெயமோகன் இவருடைய ‘யாமம்’ நாவலுக்கு விதந்து விமர்சனம் எழுதினால், தனது வலைத்தள முகப்பில் அதனைப் போட்டுக் கொள்வார். எஸ்.ரா முன்பு சொன்ன, விஷ்ணுபுரம் ஜெமோவின் இந்துத்துவச் சாயம் கொண்ட நாவல் எனும் கூற்றை நீங்கள் மறந்து போய்விட வேண்டும்.

எஸ்.ரா.எல்லோர்க்கும் நல்லவராக விரும்புகிறவர். தடாலடி வேலைகளை அவர் செய்வதில்லை. இருந்தாலும் என்ன ‘பிறமலைக் கள்ளர்’ கோபமோ பா. வெங்கடேசனின் ‘காவல்கோட்ட’த்தை மட்டும் அவர் கடாசித்தள்ளிவிட்டார். முக்குலத்து மாணிக்கம் முத்துராமலிங்கத் தேவர் குறித்த திரைப்பட வசனகர்த்தாவான எஸ்.ராவுக்கு இப்படிக் கோபம் வருவதிலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

எஸ்.ரா. ஈழ இலக்கியம் எனும் அளவிலோ அல்லது ஈழஅரசியல் எனும் அளவிலேயோ அக்கறையுடன் எழுதிய எதுவும் என் கண்ணில் தட்டுப்படவில்லை. முக்கியமான தனக்குப் பிடித்த நாவல்களின் பட்டியலில் கோவிந்தனதும், ஷோபா சக்தியினதும் நாவல்களைப் பட்டியலிட்டிருந்தார்.

எஸ்.ராவின் பட்டியல்களின் மீது எனக்கு எப்போதுமே அவ்வளவாக மரியாதையில்லை. எடுத்துக் காட்டுச் சொல்கிறேன் பாருங்கள் : 2008 ஆம் ஆண்டு வெளியான முக்கியமான படங்கள் என அவர் சில படங்களை 2009 ஆரம்பத்தில் தனது வலைத் தளத்தில் வரிசைப்படுத்துகிறார். அதில் சோடர்பர்க்கின் ‘சேகுவேரா’ படத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

இப்படி ஒருவர் தனது ரசனை அடிப்படையில் எதனையும் வரிசைப் படுத்துகிறபோது, புத்தகமானால் வாசித்த அனுபவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்து வேண்டும், திரைப்படம் என்றால் திரைப்படம் பார்த்த அனுபவத்தில் வரிசைப்படுத்தவேண்டும். ‘சேகுவேரா’ திரைப்படம் முதலில் பிரான்ஸ் கேன் திரைப்படவிழாவில் 2008 பிற்பகுதியில் திரையிடப்பட்டது. பிற்பாடு 2009 ஆரம்பத்தில்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வெளியாகியது. குறுந்தகடு 2009 மத்தியில்தான் வெளிவந்தது. அமெரிக்கா ஐரோப்பா தவிர அந்தத் திரைப்படம் வேறு எந்த நாடுகளிலும் திரையிடப்படவில்லை.

இந்தியாவிலோ தமிழகத்திலோ அல்லது குறுந்தகடிலோ அல்லது இணையத்திலோ இத்திரைப்படத்தினைப் பார்ப்பதற்கான வாய்ப்பேயில்லை. இந்தத் திரைப்படத்தினை அவர் கேன் திரைப்படவிழாவில் மட்டுமே பார்த்திருக்க முடியும். அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எஸ்.ரா. எந்த அடிப்படையில் சேகுவேரா படத்தை 2009 ஆரம்பத்தில், தான் படம் பார்த்த பாவனையில் வரிசைப்படுத்துகிறார்?

அவரது முன்வைப்பு முற்றிலும் நம்பகத்தன்மையற்றது, போலித்தனமானது.

சாநியை பாரிசுக்கு அழைத்த எதிர்ப்பிலக்கியம் பேசச் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. charu1சாரு நிவேதிதா எதிர்ப்பிலக்கியவாதியென்றால், தமிழின் முதல் எதிர்ப்பலக்கியவாதி பெங்களுர் சரோஜாதேவிதான். முதல் எதிர்ப்பிலக்கியப் பிதாமகன், பதிப்பாளர், தமிழில் முன்முதலாக பரந்த விநியோகக் கட்டமைப்புடன் மஞ்சள் பத்திரிக்கை நடத்திய அன்றைய அதிமுக ஜேப்பியார்தான்.

‘இந்தியா டுடே’ வெளியிடுகிற செக்ஸ் புள்ளிவிவர இதழ்களை எதிர்ப்பு அரசியலின் அங்கமாகக் கொள்வோமாயின், சாருவும் எதிர்பிலக்கியவாதி என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பாலுறவு இலாபகரமான சந்தைக்குரிய பண்டமாகிவிட்ட இன்றைய உலகமயச்சூழலில் ஆண் பெண் குறிகளைச் சரக்கு விளையாட்டுப் பொருள்களாக்கி, பாலுறவை வெளிப்படையாக எழுதுவதற்கு எந்தவிதமான எதிர்ப்புத் தன்மையும் இல்லை, அது புரட்சியும் இல்லை.

இந்தியாவிலும் தமிழகத்திலும், ஈழப் பிரச்சினை, சாதியப் பிரச்சினை, காவல்துறையின் ஒடுக்குமுறை, தூக்குத் தண்டனைக்கு எதிரான இயக்கம் என எத்தனையோ வெகுமக்கள் போராட்டங்கள் நடந்திருக்கிறது. எத்தனையோ கருத்தரங்குகளை எழுத்தாளர்கள் முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். இப்படியான எந்த நிகழ்வுகளிலும் பங்குபற்றாதவர்கள் தான் இந்த மூன்று தெய்வங்கள்.

இவர்கள்தான், இப்போது, மிகப் பெரும் மானுடப் பேரழிவு ஈழத்தில் நடந்திருக்கிற சூழலில், ஒடுக்குமுறையின் குரூரம் குறித்துப் பேசவேண்டிய கூறைப் பின் தள்ளிவிட்டு, காந்தியம் பற்றியும் அகிம்சை பற்றியும் பேசுகிறார்கள். கியூபா பற்றியும் சேகுவேரா பற்றியும் பொறுக்கித்தனமாக எழுதுகிறார்கள். உலகப் புரட்சிகர அனுபவங்களை முற்றிலும் கொச்சைப்படுத்துகிற வேலையை இவர்கள் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பொறுக்கித் தனத்தின் உச்சம் என்னவென்றால், ஜெயமோகனுக்கு அரசியலிலும் சினிமாவிலும் இலக்கியத்தின் அளவு அக்கறை இல்லையாம். இதை எந்தச் சந்தர்ப்பத்தில் சொல்கிறார்?

ஈழும் கொழுந்து விட்டெறிகிற நேரத்தில், தமிழகத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறபோது, ஓட்டுப் போடப் போகாமல், சினிமாப்பட வசன வேலையில் சென்னையில் இருக்கிறபோது பேசுகிறார்.

உம்மை எந்த மடையன், தமிழகத் தேர்தல் பற்றியும், ஈழம் பற்றியும் எழுது எழுதெனக் கேட்டான்? ஓட்டுப் போடப் போகாமல் தமிழகத் தேர்தல் அரசியல் பற்றி எழுதும் ஜெமோ, தனக்கு அதிகமும் ஈடுபாடில்லாத சினிமா வேலை இருந்ததால்தான் ஓட்டுப் போடப் போவில்லையாம். சினிமா வசனம் எழுதுகிறவேலை என்னய்யா இலக்கியச் சேவை? கன்றாவி, வசந்தபாலன் எல்லாம் உம்மைக் காட்டி பின்நவீனத்துவம் என்றெல்லாம் பேசுகிறார். காலம் சாமி எல்லாம் காலம்.

ஜெமோ தான் இப்படியென்றால் எஸ்.ராவும் அதைத்தான் சொல்கிறார். அரசியலில் தனக்குப் பெரிய அறிவோ ஈடுபாடோ இல்லை என்கிறார். பெத்தாம் பெரிய அரசியல்வாதி முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு வசனம் எழுத நியமிக்கப்பட்டவர், காவல்கோட்டத்துக்குப் பின்னணியான வரலாறு-அரசியல் பற்றியெல்லாம் நுண்தளத்தில் வெளுத்துக் கட்டியவருக்கு, ஈழப்பிரச்சினை என்று வரும்போது மட்டும் பெரிதாக அறிவில்லையாம்.

எவனப்பா உம்மை ஈழப்பிரச்சினை பற்றி எழுது எழுது எனக் கேட்டவன்?

கேரளா பற்றின அரசியல் கட்டுரை எழுதும்போதே சாநி பாடிய புராணமும் இதுதான். தான் அடிப்படையில் எழுத்தாளன், இப்போது அரசியல் பற்றி எழுத நேர்ந்திருக்கிது என்கிறார். அடிப்படையில் படுகேவலமான வேடதாரிகள் இவர்கள்.

ஈராக் யுத்தத்தைக் கடுமையாக எதிரத்த காலஞ்சென்ற ஹெரால்ட் பின்ட்டரோ, உலக அளவிலும் இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக வெளிப்படையாக அரசியல் நிலைபாடுகள் எடுக்கிற அருந்ததி ராயோ ‘உங்களை’ மாதிரி ஒரு போதும் பேசமுற்படமாட்டார்கள்.

அரசியல் கோடிக்கணக்கான மக்களது உரிமைகள் தொடர்பான, அவர்களது உயிர்வாழ்தல் தொடர்பான பிரச்சினை. உங்களுக்கு அக்கறையோ ஈடுபாடோ அறிவோ அல்லது இவைகளைத் தேடிச் செல்லும் மனமோ இல்லையானால், எவரும் உங்களை அதுபற்றி அபிப்பிராயம் சொல்லுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்க மாட்டார்கள்.

நீங்கள் மூன்றுபேரும் உங்களுக்கு அடிப்படை ஈடுபாடோ அக்கறையோ நுண்அறிவோ இல்லாத துறை பற்றி அதிரடியாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

4.

சாநியும் ஜெமோவும் ஈழப் பிரச்சினை குறித்து, அரசியல் மற்றும் கலாச்சாரம் என முன்பாக ஏதும் எழுதியிருக்கிறார்களா?

சாநி இரண்டு மாஸ்டர் பீஸ்கள் எழுதியிருக்கிறார். முதலாவது மாஸ்டர் பீஸ் பாரிஸ் சின்னக் கதையாடல்-சாநி வகை எதிர்க்கதையாடல் ‘கோ-புரடக்ஸனான’ சிறுகதை ‘உன்னத சங்கீதம்’.

இரண்டாவது ‘தமிழகச் சஞ்சிகையில் வரமுடியாத’ புரட்சித்தன்மை கொண்ட( சாநியின் இணையத்தில் வந்திருக்கிற) ‘கலாகௌமுதி’க் கட்டுரை.

கலாகௌமுதிக் கட்டுரையை விடவும் கடுமையான ஈழத்தமிழர் குறித்த கட்டுரைகளை தமிழகத்தில் உயிர்மையும், காலச்சுவடும் நெஞ்சுரத்துடன் வெளியிட்டிருக்கிறது. எந்தவொரு மதிமுக, திமுக பத்திரிக்கையிலும் வந்திருக்கக் கூடிய கட்டுரைதான் அது. கோரிக் கொள்கிற மாதிர%E

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தேசம் கடந்த தமிழீழ அரசு - ஒரு அரசியல் அபாயம் : சபா நாவலன்

Comments 25

  1. msri says:
    16 years ago

    ஐமுனா:
    எதிர்ப்பு அரசியல் பேச இம் மும்மூர்த்திகளுக்!கும் எவ்வித அடிப்படைத் தகுதியும் இல்லை என்பது முற்றிலும் உண்மையே! இவர்களுடன் அ. மார்க்சையும் சேர்க்கலாம்! சாரு! ஓர் மஞசல் பத்திரிகை எழுத்தாளனே! இதனிடம் போய் நாம் சமூக விஞ்ஞானம் பற்றி எதிர்பார்க்கலாமா? இது நிற்க கட்டுரை மிக நீண்டதாகி விட்டது! இரண்டு தலைப்பிற்குள் உட்படுத்தியிருக்கலாம்!

  2. இளைய அப்துல்லாஹ் says:
    16 years ago

    என்ன யமுனா பலநாள் மனதில் இருந்ததை பல வருடங்கள் கழித்து கொட்டி விட்டீர்கள் போல உண்மைகள் உறங்க மாட்டாதவைதான் பார்ப்போம் மரம் காய்த்துவிட்டது

  3. arul says:
    16 years ago

    yamuna,
    wonderful article. i dont agree with waht u say on jeyakanthan. he always supported indian armies killings in eelam.
    arulventhan

  4. srinivasan says:
    16 years ago

    enakku tamizh typying theriyadhu mannikkavum.Aanalum ungal kadumaiyana indha vimarsanathirkku (nijamai irundhalum) padhil anuppa vizhaivadhal ippadi tamilingsh-l anuppugiraen. vegujana ezhuthalargalai kury vaithu comment seivadhu nammaiyum avvattarathil inaithukolvadharkkana oru first step eana palar ennugindranar(bush mael veesina seruppu).Thangal eppadiyo nanariyaen.Moovarum cinemavukku ezhudha vandhadhuthan ungal sinathirkku kaaranamo? Appadiye sangam vaithu ezhuthalargalai pirithu arasil nadathum arivujeevigalayum oru pidi pidikkalamay…!

  5. Gopinathan says:
    16 years ago

    அருமயான கட்டுரை. சில முரன்பாடுகல் இருப்பினும் மிக்க நன்ரு.

  6. Murugan says:
    16 years ago

    A well written criticism for all three writers, especially the aricle is little long could have been two versions.. anyway a true honest writers and true politician dead in tamilnadu long back…now whoever writers in tamilnadu all are writing to gain some name in writing some nonsense. Expect few who are true writers rest of everybody wanted to beg for something from people. All bloody swines. People who have no knowledge about elam people they talk about LTTEs and they write all kinds of nonsense comments and comparing their blind views with the no use of Ghandhi s ahimsha…as you said they should work hard to read all fundamental truth before writing some ariticls.
    All the best

  7. Karthikramas says:
    16 years ago

    பதிக்கப் படவேண்டியவைகளை பதித்தமைக்கு நன்றி.

    சன்னாசியின் இதையும் பாருங்கள்.
    http://dystocia.weblogs.us/archives/325

  8. Kaarthikeyan says:
    16 years ago

    மூவரின் முகத்திரையை கிழித்தத யமுனா யமுனா ராஜேந்திரன் வரிகள் சம்பந்தப்பட்டவர்களின் சுயத்தைச் சுட்டும் என நினைக்கிறேன்.

  9. பொன்னிலா says:
    16 years ago

    நல்ல கட்டுரை மனதில் தோன்றீயதை அழகாக எழுதியுள்ளீர். நன்றி ஆனால் ஜெயகாந்தன் பற்றிய உங்கள் பார்வை மிகவும் தவறு…ஜெயகாந்தன் எழுத்துக்களும் காலவதியாகிவிட்டது. அவரும் குரைக்கிற இடத்தில் குரைத்து மகனுக்கு வெலை, வீடு என்று வாங்கிக் கொணடு கருணாவைப் போன்ற இலக்கிய கிழட்டு நரியாக மாரிவிட்டார்.

  10. raju says:
    16 years ago

    நல்ல கட்டுரை மனதில் தோன்றீயதை அழகாக எழுதியுள்ளீர். நன்றி ஆனால் ஜெயகாந்தன் பற்றிய உங்கள் பார்வை மிகவும் தவறு…

    நாம் சமூக விஞ்ஞானம் பற்றி எதிர்பார்க்கலாமா? இது நிற்க கட்டுரை மிக நீண்டதாகி விட்டது! இரண்டு தலைப்பிற்குள் உட்படுத்தியிருக்கலாம்!

  11. kicha says:
    16 years ago

    ந‌ல்ல‌ க‌ட்டுரை. சாரு நிவேதிதா, த‌ன்னை விம‌ர்சிப்ப‌வ‌க‌ளை த‌ர‌ம் தாழ்ந்து வ‌சை பாட‌ ப‌திவுல‌கில் ஆட்க‌ள் வைத்திருக்கிறார். க‌வ‌ன‌ம்

  12. tamilnathy says:
    16 years ago

    அருமையான கட்டுரை என்று மேலோட்டமாகப் படித்ததில் தெரிகிறது. வெளியூர் கிளம்பிக்கொண்டிருக்கும் அவசரத்திலும் ஆர்வத்தை அடக்கமுடியாமல் ஒரு பின்னூட்டம் போடுகிறேன். நாளை முழுவதும் வாசித்துவிட்டுக் கதைக்கிறேன்.

  13. Sarvachitthan says:
    16 years ago

    எழுத்து விபசாரிகளைப் பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்.நீங்கள் என்ன எழுதினாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை, இவர்களுக்கு “ஜால்ரா” போடும் பேர்வழிகளும் மாறப்போவதில்லை.
    சுய தம்பட்டமடிக்கும் இவர்கள் பிறருக்குச் செய்யும் உபதேசங்களில் சிலவற்றைத் தாங்கள் கடைப்பிடித்தால் அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் உபயோகமாயிருக்கும்.

  14. நாதாரி says:
    16 years ago

    இக்கட்டுரையில் நிறைய முரண்கள் இருப்பினிம் இலகுவாக உள்ளது

  15. nagarathinam krishna says:
    16 years ago

    உண்மையையைச் சொல்லியிருக்கிறீகள் .

    அரசியலில் எப்படி இன்றைக்கு மூளை மழிக்கப்பட்டிருக்கிறதோ, தமிழ்நாட்டில் அது இலக்கியத்திலும் நடக்கிறது. ஜெயகாந்தன் எழுத்தாளர், அரசியல் சார்பு உண்டு. அரசியல்வாதியல்ல. இவர்கள். அரசியல்வாதிகள். தமிழ்நாட்டில் இலக்கியவாதிகள் இருந்தால்தான் ஆச்சரியம். உங்களைப்போன்றவ்ர்கள் அவர்களை எழுதுவதால்தான் தங்களுக்கு நோபல் பரிசு ஒரு ஓட்டில் குறைந்துவிட்டதென கூச்சமில்லாமல் சொல்லமுடிகிறது.

  16. : kandasamy says:
    16 years ago

    நன்று, கட்டுரை படித்தேன்.

  17. madhiyalagan Subbiah says:
    16 years ago

    வணக்கம் யமுனா,
    உங்கள் கட்டுரை பல இடங்களில் நியாயமானதாகவும் பல இடங்களில் முரண்பாடாகவும் இருக்கிறது. நீங்கள் எழுதியுள்ளவைகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. சாரு ஜெமோவைத் திட்டுகிறார், ஜெமோ சாருவை திட்டுகிறார், எஸ் ரா ”காவல்கோட்டம்” போன்ற கடின உழைப்பைத் திட்டுகிறார். நீங்கள் இந்த மூவரையும் திட்டுகிறீர்கள்… பாவம் வாசகர்கள்…
    உங்களின் அழமான அறிவார்ந்த, ஆய்ந்து எழுதப் படும் கட்டுரைகளை வாசிக்க என்னைப் போன்று பலர் ஆவலாய் இருக்கிறோம். உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

    நிறைய அன்போடு,
    மதியழகன் சுப்பையா,
    மும்பை

  18. nagasundaram. says:
    16 years ago

    மிக சரியான விமரிசனம்.இந்தமுன்று தெஇவஙகலும் தஙகளை த் தாஙகளாகவெ
    உச்சாணிக் கொம்பில்நிற்பதாய் பாவித்துக் கொள்பவர்கள் இவர்களை இப்படி விமரிசப்பது வாசகர்களுக்கு அவசியம். நன்றி

  19. yamuna rajendran says:
    16 years ago

    கட்டுரையில் உள்ள உள் முரண்கள் தவிர்க்க இயலாதவை. உலக அரசியல் மதிப்பிடுவதற்கு மிகச் சிக்கலாகி வருகிறது.இந்தப் பிளவுவண்ட கருத்துநிலை எனது எழுத்துக்களிலும் வெளிப்படுகிறது.இன்னும் எனது நம்பிக்கை மார்க்சில்தான். தமிழர் பிரச்சினையில் கியூபா மீது எனக்குத் தீராத வெஞ்சினம் உண்டு. ஆயினும் கியூபாவை நான் புரிந்துகொள்ள முயல்கிறேன். முரண்களைக் கடந்து போகும் முயற்சியாகவும் தேடுதலாகவுமே வாசிப்பையும் எழுத்தையம் தேர்கிறேன. யமுனா ராஜேந்திரன்

  20. தாராபுரத்தான் says:
    16 years ago

    அன்பின் ராஜேந்திரன், நீங்கள் தமிழ்நாட்டில் தாராபுரத்தைச் சேர்ந்தவர் அல்லவா?

  21. தேவ அபிரா says:
    16 years ago

    உலகளாவிய ஆசிய மற்றும் இலத்தீனமெரிக்க நாடுகள் நோக்கிய மூலதனப்பெயர்வுகாரணமாக உலக மற்றும் பிராந்திய வல்லரசுகளுக்கிடையில் போட்டிகளும் சமரசங்களும் ஏற்பட்டு வருகின்றன.இந்தப் போட்டி மற்றும் சமரச அரசியலுக்குள் தமிழர்கள் கைவிடப்படுச் சகதியாக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் மட்டுமல்ல ஒடுக்கப்படுகிற சகல பிரிவினருமே இந்த புதிய உலக ஒழுங்கெனும் அரசியல் இராணுவ சகதிக்குள் சிக்கியுள்ளனர். தமது பலம் பலவீனமறிந்து யதார்த்தமாக முடிவுகளை எடுக்காமை . போராட்ட ஆரம்பத்திலிருந்தே உருவாகி வந்த வலிமையான சனநாயக மறுப்பரசியல் போன்றவை காரணமாக விடுதலைப்புலிகள் அடைந்த அரசியற்தோல்வி தமிழ்மக்களின் மீது பெரும் சூனியத்தைக் கவிழ்த்திருக்கிறது. இது புரியாமல் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொச்சப்படுத்தி வரும் எந்த இலக்கிய வாதிக்கும் உங்கள் கட்டுரை நல்ல பதில்.சற்றே எனக்கு நெருடுகிற விடையம் உங்கள் கட்டுரையில் தமிழில் எழுதப்பட்டுள்ள சில ஆங்கிலச்சொற்கள்.அவற்றையும் வழக்கில் உள்ள தமிழில் எழுதியிருக்கலாமே எனத்தோன்றியது பெயர்ச்சொற்களை இங்கு நான் குறிப்பிடவில்லை. வாசிப்போட்டத்திற்கு இடையூறாக இருந்தது.இது எனது ஆதங்கம்.

    தேவ அபிரா

  22. yamuna rajendran says:
    16 years ago

    அன்புள்ள தேவ அபிரா-இனி தஙகளின் ஆலோசனையின்படி எழுத முயல்கிறேன். பிற நண்பர்களுக்கு- பல பின்னூட்டங்கள் தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் காரணிகளால் திரும்பப் பெறமுடியாத அளவு அழிவுபட்டுவிட்டன எனத் தெரிவித்திருக்கிறார். அதற்காக அந்த நண்பர்களிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அன்புடன் யமுனா ராஜேந்திரன்

  23. திலகபாமா says:
    16 years ago

    யமுனா
    காவல் கோட்டம் எழுதி யிருப்பது சு.வெங்கடேசன். பா.வெங்கடேசன் என்பவர் எழுதிய நாவல் ” தாண்டவராயன் கதை.”. தகவல் பிழையை திருத்திக் கொள்ளவும்
    கிலகபாமா

  24. yamuna rajendran says:
    16 years ago

    நன்றி திலகபாமா. நான் கோவையிலிருந்த வேளை காவல்கோட்டம் விமர்சன நிகழ்வுக்கும் சென்றிருந்தேன்.தோழர்.வெஙகடேசனையும் சந்தித்தேன். பிழையைத் திருத்திக் கொள்கிறேன்.அன்புடன் ராஜேந்திரன்

  25. meganathan says:
    16 years ago

    யார்ரா இந்த சீனிவாசன்? இப்படியும் சிலர் வாசிக்கத் தொடங்கியிருப்பது கலக்கமாய் இருக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...