எதிர்க்கட்சியற்ற பாராளுமன்றமே இன்று இலங்கையில் நடைமுறையிலுள்ளது. பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சியாக வேடமிட்டுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசை மறந்தும் விமர்சித்தது கிடையாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நடத்தும் எம்.ஏ.சுமந்திரன் என்ற அமெரிக்க அரசின் உள்ளூர் முகவர் இலங்கை அரசின் நடவடிக்கைகளால் தமிழர்கள் மகிழ்ந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் 26ம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் முன்மொழியப்படவிருக்கும் அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக வட-கிழக்குத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் திருப்தியடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுயநிர்ணைய உரிமை அல்லது பிரிந்து செல்லும் உரிமை என்பது தேசிய இனமொன்றின் அடிப்படை ஜனநாயக உரிமை.
மூன்று தசாப்த இழப்பும் நெருப்பும் இலங்கை அரசின் எலும்புத் துண்டுகளுக்காகக் காத்திருப்பதில் முடிவடைந்திருக்கிறது.
இன்று இலங்கையில் நிலவும் தற்காலிக அமைதி, இராணுவ நடமாட்டமற்ற வெற்றிடம் என்பன நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கப் போவதில்லை என்பதை மக்கள் வரலாற்று அனுபவங்களிலிருந்து உணர்ந்திருக்கிறார்கள்.
சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கையைக் கூட முன்வைக்க மறுக்கும் சுமந்திரனும் தமிழ்த் தலைமைகளும் ஒன்றிணைந்து இதுவரைகால தியாகங்களையும் இழப்புக்களையும் கொச்சைப்படுத்தியிருக்கின்றன.
காலனியத்திற்கு பிந்திய காலம் முழுவதுமான தேசிய இன ஒடுக்குமுறைக்கு அதிகாரப் பரவலாக்கல் தீர்வாகாது. சிங்கள பௌத்த சிந்தனைகொண்ட அதிகாரத்தைப் பரவலாக்குவது நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக மற்றொரு அழிவிற்கே அழைத்துச்செல்லும்.
What is wrong with you? Criticizing every thing will only satisfy your ego and fool the people and will not bring any benefits. This was what Federal Party under SJV did for decades. Learn from the past mistakes and see whether we can get any benefits from the govt as the way GG
Ponnambalam got in 60s. Since then no development in the north and east be’cos we failed to be a part of the system.
we can get any benefits//
development in the north and east //
our Rights are our Rights not benefits/gifts/ or freehand outs., We are not “ONLY” looking for developments. Let us get our Rights, We know how to develop our Land.
Kumar
என்னைப்பொறுத்தவரை நீங்கள் ஒரு விளப்பம் கெட்ட ஆழ்போல் தொிகிறது குமாா் என்று உங்களுக்கு பெயா் இருப்பதில் தவறிருக்க முடியாது ஆனால் இன்னொருவா் அதே பெயாில் பின்னூட்டம் இடும்போது வாசகா்ளுக்கு குழப்பமாக இருக்காதா?
இனியொரு தயவுசெய்து இதை கவனிக்கவும்.நீங்களாவது பெயரை மாற்றிவிடுங்கள் சிலவேளை நான் தமிழில் வேண்டுவதால் புாியாமல் போகலாம்.
இன்றைய நிலையில் மக்கள் மீள குடியமர்த்தல் முக்கியமானது. உரிமை கேட்டு போராடி பேரழிவை சந்தித்த மக்கள் மூச்சுவிட ஒரு இடைவெளி தேவை. நாம் பாதுகாப்பாய் இருந்து கொண்டு எதையும் பேசலாம் எழுதலாம் ஆனால் யதார்த்தம் வேறு. எமது பிரதேசங்களின் அபிவிருத்தி பற்றி அன்றே முயன்றிருந்தால் தென் இலங்கையில் வியாபாரம், தொழில் செய்து கலவரங்களின் போது கப்பல்களில் வடக்கு திரும்பி இருக்க வேண்டிய நிலை வந்திராது.