தமிழகத்தின் புழல் சிறைக்கு எதிரில் இலங்கை புலம் பெயர் பெண்ணொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயற்சித்துள்ளார் காவாங்கரை பிரதேசத்தில் உள்ள முகாமில் இருந்த 6 அகதிகளை புழல் காவற்துறையினர் நேற்றிரவு கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அந்த பெண் தீக்குளிக்க முயற்சித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பெண், காவற்துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்ற புலம் பெயர் அகதி ஒருவரின் மனைவியாவார்.
காவற்துறையினர் தனது கணவரை கைதுசெய்து அழைத்து வந்தமை குறித்து, அந்த பெண் காவற்துறையினரிடம் விசாரித்த போது, தாம் அவ்வாறு எவரையும் அழைத்து செல்லவில்லை என காவற்துறையினர் தெரிவித்ததை அடுத்தே அந்த பெண் தீக்குளிக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டதை அடுத்து, தாம் 6 பேரை கைதுசெய்துள்ளதாக புழல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழின விரோத ஜெயலலிதா அரச அதிகாரமும் இந்திய உளவுத்துறையும் புலம் பெயர் ஈழத் தமிழ் அகதிகளுக்கு எதிரன யுத்தம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இனவாதிகளின் அருவருக்கத் தக்க ஆதரவுடனேயே ஜெயலலித்தா ஆட்சிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா
தரும் அரிசி
தமக்கான
வாய்கரிசி என்று
அறியமுடியாத
அப்பாவி ஆடுகளே,
அவர்கள்
உங்களுக்கான
சவப்பெட்டிகளை
தயாரித்த பின்தான்
சலுகைகலேயே
அறிவித்தார்கள்-என்று
அறிவீர்ளா
I hope this catches the attention of Ms. Navi Pillay the United Nations High Commissioner fro Refugees.