மூன்றாவது அணிக்காக கருணாநிதிக்கு அழைப்பு

சனி, 16 ஆகஸ்ட்
க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சிக‌ளி‌ன் 3-வது அ‌ணி‌க்கு ‌தி.மு.க. வரவே‌‌‌ண்டு‌ம். இது ப‌ற்‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ப‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌‌ண்டு‌ம் எ‌ன்று மா‌ர்‌க்‌‌சி‌‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் மா‌நில‌ச் செயலாள‌ர் எ‌ன்.வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌‌தி‌ண்டு‌க்க‌ல்‌லி‌‌ல் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், “பா.ஜ.க., கா‌ங்‌கிர‌ஸ்‌ இர‌‌ண்டு க‌ட்‌சிகளுமே ம‌க்க‌ள் ‌விரோத க‌ட்‌சிக‌ள். இ‌ந்த ‌க‌ட்‌சிகளு‌க்கு மா‌ற்றாக மூ‌ன்றாவது அ‌ணி அமைவது எ‌ன்பது கால‌த்‌தி‌ன் க‌ட்டாய‌ம்.

நா‌ட்டி‌ல் மதவெ‌றி வள‌ர்வது ஆப‌த்தை ‌விளை‌வி‌க்கு‌ம் எ‌ன்பதா‌ல் தோழமை க‌ட்‌சிக‌ள் ஒ‌ற்றுமையா இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி வே‌‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சிக‌ளி‌ன் இ‌ந்த 3-வது அ‌ணி‌க்கு ‌தி.மு.க. வரவே‌‌ண்டு‌ம். இது ப‌ற்‌றி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ப‌ரி‌சீலனை செ‌ய்ய வே‌‌ண்டு‌ம்” எ‌ன்று எ‌ன். வரதராஜ‌ன் கூ‌றினா‌ர்.