உலகிலேயே இந்தியாவில் தான் திருமணம் காதல் உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறும் கொலைகள் அதிகம்.அதுவும் சாதி உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்தப்படும் கொலைகளே அதிகம்.இந்து-முஸ்லீம் விரோதம் புரையோடிப் போயுள்ள இந்தியாவில் மதம் சார்ந்த கொலைகளும் அவ்வப்போது நடந்து வருபவைதான்.
கர்நாடக மாநிலம் விஜயபுரா அருகில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஒருவரை அவரது குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்துள்ளனர்.
ரவி நிம்பரகி என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணும் கடந்தமூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய உறவினர்கள் முயன்றனர். இதை அறிந்த ரவி தனது பெற்றோருடன் சென்று பெண்ணின் உறவினர்களிடம் தனது காதல் பற்றி பேசியுள்ளார்கள். பெண்ணின் உறவினர்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் ரவியும் அப்பெண்ணும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் ரவியை சமீபத்தில் பேச வருமாறு அழைத்துள்ளனர். அவரை கடுமையாகத் தாக்கி யுள்ளார்கள்.
கடந்த 23-ஆம் தேதி ஊருக்குப் ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் ரவி பிணமாக மிதந்த நிலையில், ரவி கழுத்து நெறிக்கபப்ட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ரவியின் பெற்றோரும் முஸ்லிம் பெண்ணும் கொடுத்த புகாரின் பேரின் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.