அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக கருதப்படக் கூடாது எனவும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக அமைச்சர் பதியூதீன் கருத்து வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மன்னார் ஆயருக்கு எதிராக கருத்து வெளியிட்ட அமைச்சு எதிராக மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போரட்டம் நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் மிக நிதானமாக வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூகங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
That is right. This is confined to the Northern Province. They should have had the elections for that Provincial Council by now. International community is watching all the time.