முஷாரப்பின் நிலை மஹிந்தவுக்கு : ரணில் எச்சரிக்கை

மக்கள் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்காவிட்டால் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பின் நிலைதான் மஹிந்தவுக்கு ஏற்படுமென எதிரிகட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். மக்களின் வாக்குரிமையை ஜனாதிபதி பலவந்தமாக பறிக்க முற்பட்டால் முழு இலங்கை வாழ் மக்களினதும் எதிர்ப்பலையை சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு ஒருபோதும் சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாதென அவர் தெரிவித்துள்ளார். படைவீரர்களுக்காக வாக்களிக்க வேண்டுமாயின் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் புலிகளுடன் இருந்த பிள்ளையானுடன் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கப்படாதென ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.