யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவஞ்சலி நிகழ்த்தப்பட்டுள்ளதனை அறிந்த ராஜபக்ச பாசிசப் படைகள் பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கொன்றுபோடப்பட்டவர்களின் நினைவு நாளைக்கூட மீட்ட உரிமை வழங்க மறுக்கும் உலகின் கிரிமினல் அரசுகளில் ஒன்றான ராஜபக்ச பேரினவாத அரசு தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களைப் போராடத் தூண்டுகிறது. அமைதிவழியான அஞ்சலி நிகழ்வு கூட ஆயுத முனையில் அடக்கப்பட்டு மக்களின் உணர்வுகளில் ஆயுதங்களைத் திணிக்கிறது ராஜபக்ச அரசு.
மறுபுறத்தில் மனிதர்களைக் கொன்று போட்டதை வெற்றியெனக் கொண்டாவதற்கு பேரினவாதிகள் அவமானப்படவில்லை.