முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உயர் அதிகார குழு நிராகரித்துவிட்டது.
ஐவர் குழு கூட்டத்தில் கேரளாவின் கோரிக்கையான 136 அடி நீர்மட்டத்தை 120 அடியாக குறைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ஏற்கெனவே,அணையின் நீர்மட்டம் தற்போது இருப்பது போலவே தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என ஐவர் குழுவினர் தெரிவித்தனர்.