முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள அரசிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்பாட்டக் காரர்கள் கேரள எல்லையை நோக்கி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் வரை மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். குமிழி எல்லைவரைக்கும் சென்ற ஆர்ப்பாட்டக் காரர்கள் கேரளாவிற்குள் நுளைய முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாக கடைகளை அடைத்தும், கேரளாவுக்கு ஒரு பொருளையும் அனுப்பாமலும், வாகனப் போக்குவரத்தை முற்றிலும் தடுத்து வைத்தும் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுயாரும் எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 15,000 பேர் திரண்டு கேரளாவை நோக்கி பேரணி நடத்தியதால் கேரளாவிலும் பதட்டம் ஏற்பட்டது. இந்தப் பேரணிக்கு யாரும் ஏற்பாடு செய்யவலில்லை.
மக்கள் தன்னெழுச்சியாகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்தியதாகத் தெரியவருகிறது.
கேரளத்தில் வாழும் தமிழர்களின் சொத்து பத்துக்களை சில மலையாள அமைப்புக்கள் கணக்கெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி ஆராய்ந்து செய்தி வெளியிட்டால் பெரிய உபகாரமாக இருக்கும். மேலும் தமிழக பெண் கூலி தொழிலாளர்களிடம் மலையாள வெறியர்கள் காம சேட்டை செய்ததாகவும் செய்திகளில் படிக்கிறோம். இது பற்றியும் புலனாய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும்.