யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் மோதலான சூழ்நிலைக்கு ஜே.வி.பியும், முன்னிலை சோசலிசக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முழுயைமாக பொறுப்புக் கூறவேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தை அனுஷ்டித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த சில செயற்பாடுகள் மூலம், விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் திட்டமிட்ட வகையில் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதை வெளிகாட்டியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டில் மிண்டும் வன்முறைகள் அல்லது போராட்டங்கள் ஏற்பட்டால், இந்த கட்சிகளின் தலைவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்பார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பௌத்த அடிப்படைவாத பயங்கரவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமய சிங்கள உழைக்கும் மக்களுகளின் அடிப்படை எதிரி. மகிந்த பாசிசத்திற்கு தத்துவார்த்த பலத்தை வழங்கும் இந்த பௌத்த அடிப்படைவாத ஒட்டுண்ணிகளுக்கு குறைந்தபட்ச ஜனநாயகமும் பயங்கரவாதமே.
மறுபுறத்தில் மகிந்த ராஜபகச உட்பட்ட சிங்கள பௌத்த பயங்கரவாதிகளுக்கு புலம்பெயர் புலி அடிப்படை வாதிகள் தமது பிழைப்பிற்காக தீனிபோட்டு வளர்க்கின்றனர். இவர்களின் உச்சபட்ச பொய்களில் ஒன்றாக சிங்கள் சமுகவலைத் தளத்தில் சிங்களப் பெண் ஒருவர் தமிழர்களை வெல்லமுடியாது என்று எழுதியதாக கட்டுக்கதை ஒன்றை அவிழ்த்துவிட்டு பல்கலைக்கழக மாணவர்களைக் காட்டிக்கொடுக்கின்றனர்.
இந்தியாவின் வாலாகத் தொழிற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அன்றி தமிழ் மக்களின் தன்னுரிமையைக் கூட மறுக்கும் அரை இனவாதக் கட்சிகளான முன்னிலை சோசலிசக் கட்சியோ ஜேவிபி யோ இலங்கையில் வாழும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.








கஜேந்திரன் பொன்னம்பலத்தை தவிர வேறுயாரையும் எங்களால் புரச்சியாலனாக ஏற்க்கமுடியாது