இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை நீத்த அமரர் கே.முத்துகுமாருக்கு சிலை வைப்பதனை எவராலும் தடுக்க முடியாதென இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தனியார் காணியொன்றில் சிலையொன்றை அமைப்பதனை தடுக்க முடியாதென மெட்ராஸ் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமரர் முத்துக்குமாருக்கு சிலை வைக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவத்து உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அரசாங்கம் தேவையற்ற வகையில் அதிகாரத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக வழக்கை விசாரணை செய்த நீதவான் சந்துரு தெரிவித்துள்ளார்.
முத்துக்குமாரு, நீ எரிந்து சாம்பலாகித்தான் இங் கெல்லாம் எரிமலை எரிந்தது ஆனாலும் நீ அவசரப்பட்டு விட்டாய் என்றூதான் என் உள்ளம் சொன்னது.சிலையாகிப் போனவனே உன்னை வணங்குவதற்கும் எனக்குத் தகுதியில்லை.
நிச்சயம் மரியாதை செலுத்தப்படவேண்டியவர்களில் மிக உன்னதமானவர்.
இளமை பருவத்தில் நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்யும் இளைனர்களுக்கு மத்தியில் தனது மக்களை சதா சிந்தித்து அவர்களுக்கு நம்மால் உதவ முடியவில்லையே
என்று வருந்தி தந்து உயிரை கொடையாக கொடுத்த வீர தமிழா , உனது கட்டுரை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய பொக்கிஷம்.
முத்துக்குமாருக்கு கவலைப்பட்டு அனுதாபப் படும் இவ்வேளையில் முத்தக்குமாரின் இந்த கோளைதனமான முடிவை இனியொவரும் நாடக்கூடாது. சிலை
வைத்தால் அது மதிப்புக்குரிய சின்னமாக மாறிவிடும்.இந்த காரியம் நாளை உயிரோ
இருப்பவரையும் சிலையாக மாறத்தூண்டும். பிறகென்ன..? மண்ணென்னையும் தீபெட்டியும் தான். வாழ்க்கை வாழ்வதற்கே!. தொழிலாளர்களே! அரசியல் ரீதியில்
ஆயுததாரியாகுங்கள்.இது உங்களுக்குரிய காலம் வந்துகொண்டிருக்கிறது.
முத்துக்குமாரின் செயல் பல வழிகளில் தவறனதும், சிலரால் தவறாகப் பயன்படுத்தக் கூடியதுமாகும். அது மெச்சத்தக்க முன்னுதாரணமல்ல எனலாம்.
அது கோழைத்தனமானது என்று சொல்லி அவரை நிந்திப்பது, சொல்லப்படும் கோழைத் தனத்திலும் கேவலமான கோழைத்தனம்.
உன்னைக் கொல்ல உனக்கு நச்சு-ஆலோசனை ஊட்டியவர்கள் தான் உனக்கு சிலை வைக்கிறார்கள்.இந்த சூக்குமத்தை புரிந்தால் மட்டுமே! இனியொரு முத்துக்குமாரை
நாம் இழக்காமல் பாதுகாக்க முடியும். இதுவே நான் உனக்கு செய்யும் அஞ்சலி.
முத்துக்குமாருக்கு நச்சு ஆலோசனை ஊட்டிவிட அவர் ஒன்றுமே அறியாத பால்குடி குழந்தையுமல்ல, தன் தாய் மொழி பேசும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒட்டுமொத்தமாக கொன்றுஅழிக்கப்படுவதைத் தடுக்க வேறு வழியேதும் இல்லை, தனது மரணத்தினாலாவது அரசியல் லாபம் தேடிக்கொண்டு வாய்ச்சவாடல்விடும் கோழைகளை அடையாளம் காட்டி ஒரு பெரும் மக்கள் எழுச்சியொன்றை உண்டாக்கலாமென்று எண்ணிய மனிதநேயன் ஒரு கோழையுமல்ல.
அவரின் இறப்பு தமிழ்மக்களுக்கு ஒரு உண்மையான போராளியை இழந்த பேரிழப்பு. இவருக்கு சிலை வைப்பது பிணங்களுக்குமேல் அரசியல் செய்யும் ஏமாற்றுக்கூட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை.
சூரியா,நாட்டுக்காக தாங்களும் சாகமாட்டார்கள், மரணித்தவர்களையும் சும்மா விட மாட்டார்கள். உயிரைக் கொல்வது பாவம் என்று சொல்பவர்கள், இதுவரை என்னத்தை உண்டு இந்த உலகில் உயிர் வாழ்கிறார்கள். தாவரங்களுக்கு வாய் இல்லை என்பதனால், அதற்கு உயிர் இல்லை என்று அர்த்தப்படுத்தி விடமுடியுமா. நாம் நடக்கும் போது கால்களுக்கடியில் எத்தனை உயிர்கள் , மிதிபட்டு இறக்கின்றன, அதற்காகநாம் நடக்காமல் இருக்க முடியுமா. அல்லது அந்தக்காலத்து கண்டிய பெளத்த துறவிகள் போல், விளக்குமாறால் முன்னால் கூட்டிக்கொண்டே நடக்கின்றோமா. தலைவரை ஊரார் வீட்டு பிள்ளைகளை பலி கொடுத்தார் என்று சொன்னார்கள். முத்துக்குமார் தனையே நாட்டுக்காகக் கொடுத்தையும் மனநோய் என் கிறார்கள். உண்மையில் இவர்களைத்தான் ஒரு விதமான கொடூர மன நோய் பிடித்து ஆட்டுகிறது<< மாவீரர் யாரோ என்றார்… மரணத்தை வென்றுள்ளோர்கள்<<
இப்படிச் சொல்லிச் சொல்லியே இருந்த சொத்தை எல்லாம் இழந்து நிற்கிறான் தமிழன் இனியாவது வித்தியாசமாய் சிந்திப்போம்.
அப்போது கோழைத்தனமான முடிவை எடுத்தார் என்றீர்கள்.
இப்போது நச்சு-ஆலோசனை ஊட்டப்பட்டார் என்கிறீர்கள்.
அஞ்சலி எதற்கு?
அப்போது சொன்னது போல் கோழைத்தனத்துக்கா?
அல்லது இப்போது சொல்வது போல் முட்டாளாக்கப் பட்டதற்கா?
ஒரு மனிதன் தற்கொலை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் முத்துகுமாரினது
செயலை ஒரு எழுச்சி தீயாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. ஈழதமிழனுக்காக இன்னொரு ஏழை தமிழன் சாக தேவையில்லை. லண்டனில் நடந்த ஊர்வலமொன்றில் 50,000 மேற்பட்ட மக்கள் அவன் பதாகையுடன் தெருவில் இறங்கியிருந்தார்கள். தமிழ் நாட்டில் 30 வ்ருடமாக இவ்வளவு அரசியல்வாதிகளும் சாதிக்க முடியாத ஒரு எழுச்சியை ஏற்படுதியனை கோழை என்று மட்டும் சொல்லாதீர்கள். அவன் செயல் மூலம்தான் மக்களை அணிதிரட்ட வேண்டிய வெற்றிடத்தை விட்டு வைத்த நீங்களும் நானும்தான் கோழைகள்.
தில்லைவாழ் அந்தனர்க்கு அடியார்க்கும் அடியேன் என்ற அடிமை நிலையறுத்து, வீரத்தமிழனாக, மறத்தமிழனாக எவனொருவன் தோற்றம் பெறுகிறானோ, தோற்றம்பெற முயற்சிக்கிறானோ அவன் தமிழர்களாலேயே முதலில் அழிக்கப்படுவான். இதனைத்தான் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை நீத்த அமரர் கே.முத்துகுமாரின் சிலை வரும்காலத்திற்கு உணர்த்தப்போகிறது.
பாவலர் தணிகைச்செல்வனின் கவிதை ஒன்றை இங்கு மறுபதிவு செய்வது பொருத்தமாக இருக்கும். அவருடைய கவிதை:-
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள் – என் தாய்.
பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம் அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள் – என் தாய்.
ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள் – என் தாய்.
இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுழையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள் – என் தாய்.
டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி
என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட – என் தாய்
அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!
தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி
ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை
சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை
அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
நான்
பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!
பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!
இன்று நான்
இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!
நான்
சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!
ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்
அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்
அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை
தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி
செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
mahendra,
நன்று உங்கள் மனக்குமுறல், சிந்திக்கவைக்கின்றது.
முதுக்கள் பதித்து வைத்த ஆபரணம் போலல்ல இந்தக் கவிதை இது சொற்கள சேர்த்துக் கோர்த்த புதிய பூமாலை.அற்புதம்.இதுதான் தமிழன் நிசர்தனம்…….ஒன்ற மறந்து விட்டோம் அதிதான் ஒற்றூமை இருந்தால் நாம் இங்கிலாந்தில் அண்ணா,இலங்கையில் பறத்தெமிழ எனவும் இருக்க மாட்டோம்.
கையாலாகதவா்களாக தமிழ் இனம் ஏங்கி நின்ற வேளையில் ஒரு ஏழை இழையனால் தன்னை அழித்து எல்லோர் உணா்வையும் தூண்டுவதைத்தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
இவா் பின்னால் சுயநல அரசியல் கழுகுகள் இருந்திருக்கலாம் ஆனால் அந்த இழைஞனில் எந்தத்தவறும் இல்லை,முக்கியமாக ஒரு ஆரோக்கியமான சமுதாயம் பின்பற்றக்கூடிய செயலாக நாம் அவருடய முடிவை கருதமுடியாது.
உலகை காப்பதற்காக சிவன் நஞ்சுண்டது ஆரோக்கியமானதா?… அவனையே பரம்பொருளாக வழிபடும் மக்களை அதிகமாகக் கொண்டது தமிழ்நாடு. சிவன் செயல் ஆரோக்கியமானது எனில் அந்த இளைஞனின் செயலும் ஆரோக்கியத்தில் எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இங்கு திரு. குமார் அவர்களால் தெரிவிக்கப்பட்ட ஆரோக்கியம் என்பது மனிதன் மனிதத்தோடு வாழ்விற்கு மிகவும் அவசியமானது. ஆனால் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதுபோல் ஆரோக்கியமான ஒரு தலைமையை தமிழ்நாடு கொண்டிருந்தால் முத்துகுமார் என்ற இளைஞனும் ஆரோக்கியமான சமுதாயத்தில் ஒரு வைரமாக ஒளிர்ந்திருப்பான். இதற்கு பதில்கூற கடமைப்பட்டவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களே.