பொருளாதார நெருக்கடி துவங்கிய 2009 ஆம் ஆண்டிலிருந்து கிரீஸ் நாட்டில் தற்கொலைகளும், தற்கொலை முயற்சி களும் பெரும் அளவில் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார நெருக் கடி, ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதில் முதல் பலி கிரீஸ் நாடாகவே இருந்தது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் தற் கொலை செய்து கொள்வது மற்றும் அதற் காக முயற்சிகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. 2009 ஆம் ஆண்டோடு ஒப்பிடு கையில் 2010 ஆம் ஆண்டில் இவர்களின் எண்ணிக்கை 22.5 விழுக்காடு அதிகரித் துள்ளது என்று அதிகாரபூர்வமாக வெளியான புள்ளிவிபரங்களே தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய குடிமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டோஸ் பாபோட்சிஸ், நெருக்கடி துவங்கிய 2009 ஆம் ஆண்டிலிருந்து 1,727 தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் நிகழ்ந்துள்ளன. 2009 ஆம் ஆண்டில் 507 ஆக இந்த எண்ணிக்கை இருந்தது. 2010ல் 622 ஆக அதிகரித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி வரையில் கிடைத்த புள்ளிவிபரங்களின்படி இந்த எண்ணிக்கை 598 ஆக இருந்தது.
தற்கொலை மற்றும் தற்கொலை முயற் சிகள் பற்றி 2009 மற்றும் 2010 ஆம் ஆண் டுகளில் அரசு கவலைப்படவில்லை. 2011 ஆம் ஆண்டில் புரோகோபிஸ் பாவ்லோ போலஸ் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தான் இது பற்றிக் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவங்கள் தொடர்பான புள்ளிவிப ரங்களை நாடாளுமன்றத்தின் முன் வைக்கு மாறு அவர் அரசை வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடிக்கு முன்பாக, தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிக ளில் கிரீஸ் நாடுதான் ஐரோப்பிய நாடுகளி லேயே மிகவும் குறைவான சம்பவங்கள் நடந்த நாடாக இருந்து வந்தது. ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து நெருக்கடியில் சிக்கியிருப்பதால் மற்ற நாடுகளைவிட அதிகமான தற்கொலைகள் மற்றும் தற் கொலை முயற்சிகள் நடக்கும் நாடாக கிரீஸ் மாறி வருகிறது