இனியொரு இணையத்தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கடந்த நான்கு நாட்களாக முடக்கப்பட்டிருந்தது. தொலைபேசி மற்றும் நேரடி மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது தொடர்பாக பிரித்தானியக் காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மீட்கும் முயற்சியில் 05.03.14 இலிருந்து 05.04.14 வரையான கட்டுரைகள் செய்திகள் உட்பட்ட தரவுகள் அழிந்து போயுள்ளன. இவற்றை மீட்கும் முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. இதுவரை மாதம் ஒருமுறையே தரவுகளைக்(Data) காப்புச்(Backup) செய்து வந்துள்ளோம். இப்போது நாளாந்த காப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தரவுகள் தொலைந்து போகக் காரணமாகவிருந்தமைகாக எழுத்தாளர்களிடமும் வாசகர்களிடமும் மன்னிப்புக் கோருகிறோம்.
தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே தொலைபேசி ஊடாகவும், மின்னஞ்சல் வழியாகவும், சமூக வலைத்தளங்களிலும் நடந்தவற்றைப் பரவலடையச் செய்த ஊடகவியலாளர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நன்றிகள்.
ஊடகங்களுக்கு எதிரான தாக்குதல்களை அரசுகளும், மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட குழுக்களும் நடத்துவது வழமை. நிழல் உலக யுத்தமாக மாறிவிட்ட தமிழ் அரசியலில் இன்று வியாபாரிகளின் பிடிக்குள் சிக்கியுள்ளது. தொடர்ச்சியான சம்பவங்களை தொகுத்துப் பார்க்கும் போது இனியொரு மீதான தாக்குதல் என்பது தமிழர்களால் நடத்தப்படும் பல்தேசிய தொலைபேசி வியாபார நிறுவனம் ஒன்றைச் சார்ந்ததாகவிருக்கலாம் என சந்தேகிக்க இடமுண்டு.
இனிவரும் காலங்களில் இவ்வாறான தாக்குதல்கள் இனியொரு மீது மட்டுமன்றி ஏனைய ஊடகங்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் நடத்தப்பட வாய்ப்புக்கள் உண்டு. இவற்றை எதிர்கொள்ள மக்கள் சார்ந்த பொதுவான வேலைத்திட்டம் அவசியமானது.
இனியொரு பரபப்பையோ அனுதாபத்தையோ மூலதனமாக்கிகொள்ளாது கருத்தை உருவாக்கும் தனது பயணத்தை முன்பைப் போன்றே தொடரும். சமரசத்திற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பால் எழுத்தாளர்களதும் வாசகர்களதும் ஆதரவோடு இனியொரு தொடரும்…
சந்தேகத்திற்கிடமற்ற “BARBARISM”. இன்யொருவிற்கு எமது ஆதரவு எப்போதும் உண்டென்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்.
“கத்தி” குத்திலிருந்து இனிஒரு மீண்டது…
………………………………………………………………………………………………………………………………………………. தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே தொலைபேசி ஊடாகவும், மின்னஞ்சல் வழியாகவும், சமூக வலைத்தளங்களிலும் நடந்தவற்றைப் பரவலடையச் செய்த ஊடகவியலாளர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் நன்றிகள்.// good on you mates..
……………………………………………………………………………………………………………………………………….
“”இனிவரும் காலங்களில் இவ்வாறான தாக்குதல்கள் இனியொரு மீது மட்டுமன்றி ஏனைய ஊடகங்கள் மீதும் எழுத்தாளர்கள் மீதும் நடத்தப்பட வாய்ப்புக்கள் உண்டு. இவற்றை எதிர்கொள்ள மக்கள் சார்ந்த பொதுவான வேலைத்திட்டம் அவசியமானது.””
//விதேசிய சக்திகள் எதுவும் செய்வார்கள். மிகவும் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது.தமது நலனிற்காக காட்டியும் குடுப்பார்கள்.
இலங்கைக்கு பேசுவதற்கு லைக்கா லிபறா தவிர வேறு என்ன தொலைபேசி அட்டைகள் இருக்கின்றன என யாராவது சிபார்சு செய்யுங்கள். எருமை மாட்டில் மழை பெய்த மாதிரி இருக்க முடியாதல்லவா?
லைக்காவோ லிபர்வோ, ,யாருடனும், என்னவும், எப்படியும் செய்யட்டும், அதற்கான/ இவர்களின் சேவைக்கு மாற்றீடான எமது தேசிய சேவை வரும் வரை உபயோகியுங்கள். ஆனால் சரியோ தவறோ கருத்து சுதந்திரந்தை மறுக்கும் உரிமையை இவர்களிற்கு தயவு செய்து கொடுக்க வேண்டாம். வக்காலத்து வாங்க வேண்டாம்
கருத்து சுதந்திரமுன்னா எல்லாவற்றையுமல்லவா பிரசுரிக்க வேண்டும்.
டௌக்லஸ்,கருணா ஒரு மலிவான தொலைபேசி அட்டையை உங்களிற்கு தருவார்கள் ஆயின் நீங்கள் அதனையும் பாவிப்பீர்கள் தானோ ?
சமூக சேவையாளர்களின் ஐக்கியம் என்பது உடனடி அவசியம் என்றதை இது உணர்த்தியுள்ளது.
மீண்டு வந்த இனி ஒரு
இனியொருவின் கருத்து யாரை வலிமையாக தாக்குகிறதோ அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தொடுக்கும் தாக்குதல் தான் இது.பல்தேசிய நிறுவனங்களின் தாக்குதல்களை எதிர்கொள்வது இன்யொரு மட்டுமல்ல.இனி வரும் காலத்தில் மாற்றுக் கருத்தை முன் வைக்கும் எல்லோரையும் இது தாக்கும்.
39 தமிழ் இணையங்களை ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள //AND 16 தமிழ் அமைப்புகளை இலங்கை தடைசெய்தமையை GTAJ அமைப்பு கண்டிக்கிறது ! ///இதே அமைப்பு (GTAJ) லைக்கா( ஆதரவுடன் ) இனிஒரு மீதான தடை /முடக்கப்பட்டமை பற்றி ;ஆக குறைந்தது பத்திரிகை சுதந்திரம் ,கருத்து சுதந்திரம் பற்றி தமது வாயை திறக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ? இவர்கள் இனிஒருவின் முடக்கத்தை கண்டித்தார்களா?இவர்களிற்கும் லைக்கவிட்கும் உள்ள தொடர்பு என்ன ?……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………தமிழ் அமைப்புகளை இலங்கை தடைசெய்தமையை GTAJ அமைப்பு கண்டிக்கிறது .//GOOD>>.. லைக்கா இனிஒருவை தடை செய்தது பற்றி GTAJ இன் நிலைப்பாடு என்ன ?why do you keep quite on INIORU GTAJ?
GTAJ// do you know the meaning of freedom of speach/media/expression? how could you represent freedom of media/speach? GTAJ plz note Anna( VP) marugaiya.means more freedom to press.
இலங்கைத்தமிழர்.
அவர்களின் உருமைக்காக ஆயுதமேந்தி உயிரை அர்ப்பணித்தவர்கள்.
புலம்பெயர்நாடுகளிலிருந்து ஆதரவளித்தவர்கள்.
இவர்கள் யாருமே இனியொரு மீது தாக்குதல் நடத்தியிருக்க மாட்டார்கள்.
அப்போ யார்? தமிழரின் உருமைக்கான போராட்டத்தை சர்வதேச
ரீதியில் பயங்கரவாதமாக மாற்ரியவ்ர்கள்தான் இதற்கு காரணம்.
இலங்கைவாழ் தமிழர் பயங்கரவாதிகளா?
போரில் அழிந்தவர்கள் பயங்கரவாதைகளா?
ஆயுதமேந்திய தமிழர் அனைவரும் பயங்கரவாதிகளா?
இதற்கான விடையை தமிழ் சமூகம் காணும் வரை இலங்கைத்தமிழரை கடவுளாலும் காக்க முடியாது.-மன்னன்
இவர்களின் சேவைக்கு மாற்றீடான எமது தேசிய சேவை வரும் வரை உபயோகியுங்கள். எங்கேயிருந்து மாற்றீடான சேவை வரப் போகிறது?
1.இவர்களின் சேவையை உபயோகியுங்கள் . ………………………………………………………………………………………………………………………………………………………………… 2. ஆனால்
சரியோ தவறோ கருத்து சுதந்திரந்தை மறுக்கும் உரிமையை இவர்களிற்கு தயவு செய்து கொடுக்க வேண்டாம். வக்காலத்து வாங்க வேண்டாம்.
……………………………………………………………………………………………………………………………………………இவர்களை உபயோகிக்க வேண்டும் என்பதற்காக, இவர்களின் இனிஒரு மீதான செயல் சரியென்று கூற முற்படுவது சரியா? எருமை மாட்டில் மழை பெய்த மாதிரி இருக்க முடியாதல்லவா?
Rajan! ஏனைய இணையங்களும் ‘இனிஒரு’ மீதான தாக்குதலுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும், அதனைத்தொடர்ந்து GTAJயும் கண்டிக்கும் என்ற உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.
‘இரண்டு’ குமாரு………புதிய திசைகளைத் தவிர வேறெந்த அமைப்பும் , இணையங்களும் ‘இனிஒரு’ மீதான தாக்குதலுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை.
நேற்று உதித்த GTAJ , ஏன் கண்டிக்கவில்லை எண்டு கவலைப்படுறீங்க குமாரு.
தீயா வேலை செய்யணும் குமாரு…தேசத்தின் விடுதலைக்கு.
Rajan! ஏனைய இணையங்களும் ‘இனிஒரு’ மீதான தாக்குதலுக்கு தமது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும், அதனைத்தொடர்ந்து GTAJயும் கண்டிக்கும் என்ற உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.
RAJAN paapa!! GTAJ இல் அங்கம் வகிக்கும் ஆக குறைந்தது ஒரு இணையத்தின் இனிஒரு மீதான தாக்குதலிற்கான கண்டனத்தை உங்களால் பெற முடியும், அல்லது பிரசுரிக்க முடியுமாயின் நீங்கள் ராஜா தான். இல்லையேல் நீங்களும் என்னுமொரு ****. இயலுமாயின் முயற்சி செய்து பாரும்….
லைக்காவின் இத்தகைய தாக்குதலுக்கு காரணமே அதன் இலாப வெறிதான். அவர்களுக்கு கிடைக்கும் லாபத்தில் தமிழ் மக்களினதும் கணிசமான பங்கு உள்ளது. தமிழ் மக்களின் விரோதியான மகிந்தவோடு கூட்டு சேர்ந்து கொண்டு கொள்ளையடிக்கும் லைக்கா குழுமத்தின் சேவையை நாம் பயன்படுத்தி அவர்களை பலப்படுத்துவதா? லைக்கா கம்பனியை நிராகரிப்பதன் மூலமும் நாம் அவர்களின் அத்து மீறலை ஆதரிக்கவில்லை என வெளிக்காட்டலாமே. இங்கு யார் சரியென்று லைக்காவிற்கு வக்காலத்து வாங்குகிறார்கள்? ஏன் திரும்ப திரும்ப வக்காலத்து வாங்க வேண்டாம் வக்காலத்து வாங்க வேண்டாம் என எழுதுகிறீர்கள்?
sakivara “””
மன்னிக்கவும் : “இலங்கைக்கு பேசுவதற்கு லைக்கா லிபறா தவிர வேறு என்ன தொலைபேசி அட்டைகள் இருக்கின்றன என யாராவது சிபார்சு செய்யுங்கள்.” அதனுடன் ” இவர்களின் சேவைக்கு மாற்றீடான எமது தேசிய சேவை வரும் வரை உபயோகியுங்கள். எங்கேயிருந்து மாற்றீடான சேவை வரப் போகிறது?” போன்ற உங்கள் பதிவுகள் நீங்கள் லைக்கா லிபறா போன்றவற்றை நியாயப்படுத்துவதாக தவறாக புரிந்து கொண்டைமைக்கு. இருந்தும் உங்கள் “இலங்கைக்கு பேசுவதற்கு லைக்கா லிபறா தவிர வேறு என்ன தொலைபேசி அட்டைகள் இருக்கின்றன என யாராவது சிபார்சு செய்யுங்கள்” என்ற கூற்றையும் ” இவர்களின் சேவைக்கு மாற்றீடான எமது தேசிய சேவை வரும் வரை உபயோகியுங்கள். எங்கேயிருந்து மாற்றீடான சேவை வரப் போகிறது?” என்ற கூற்றையும் தெளிவு படுத்துவீர்களாயின் உங்களை புரிந்து கொள்ளவதில் பெரும் சிரமம் இருக்காது என்று நம்புகிறேன் .
உங்கள் மேலே கூறிய இரு கூற்றுகளின் அர்த்தங்களை தயவு கூர்ந்து விளக்கமாக தெளிவு படுத்தவும் .
இதுவரை உலகில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் பெரும் மக்கள் தொகையால் வாசிக்கப்படும் டப்லோயிட்டு ஊடகவியலாளர்கள் அல்ல. இலங்கையில் லசந்த விக்கிரம சிங்கவின் ஊடகம் சிறிய வட்டத்தாலேயே வாசிக்கப்பட்டது, அதே போல பிரகீத் எக்னெலியகொட மாஸ் மீடியா ஊடக நபர் இல்லை.இந்தியாவிலும் அப்படித்தான், தாக்கப்படுபவர்களின் வட்டம் சிறிது, அதனைப் பெருப்பித்துக் கொள்வதும் பல கோடி வாசகர்களை சேர்த்துக்கொள்வதும் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்கு வழிகளில் ஒன்றாகும்.
Even a high school kid can infiltrate and mess up a web site like that of Inioru, you don’t need a corporation to do it. If at all it was them they will have to face the consequences. It is not easy for corporations to do such things and get away with it. Mind you they are not operating in a third world country. Corporations have paid fines totaling billions of dollars for illegal business practices. If you have the proof take it to the local police and file a case with them first instead of whining here. It is laughable that you did not back up your system on a daily basis. Even an owner of a pc has tools to back up important data files as and when they get modified.