2004- தென்கிழக்கில் சுனாமிக்குப் பிறகு, மிகப்பெரிய அனர்த்தனம் என்று சொன்னால் நாம் வன்னிப் படுகொலைகளைச் சொல்லலாம். பயங்கரவாத இலங்கை அரசு ஈவிரக்கமற்ற முறையில் ஐம்பதாயிரம் மக்களையும் போராளிக் குடும்பங்களையும் கொன்றொழித்த அனர்த்தனம். இதில் அரசியல் அற்ற போராட்டங்களோடு, ராணுவத்தந்திரமும் இல்லாமல் தாமும் அழிந்து, மக்களையும் பலி கொடுத்த புலிகளின் இயலாமை. இன்னும் கடுமையான வார்த்தைகளில் சொன்னால் கையாலாகாதத்தனம். இதுதான் போர் பற்றிய எனது குரல். புலம்பெயர் தன்னார்வக்குழுக்களின் குரலோ போர் என்பதே புலிகள் மக்களுக்கு எதிராக நடத்தியதாகவும், இராணுவம் மக்களைக் காப்பாற்றியது போலவும் இருக்கிறது என்பதோடு அங்கு நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மௌனமே இவர்களிடம் நிலவுகிறது.
.
போருக்குப் பின்னரான அணுகுமுறையில்தான் இவர்கள் தன்னார்வக்குழுக்கள் என்பதே தெரிய வந்திருக்கிறது. சுனாமிக்குப் பின்னர் தன்னார்வக்குழுக்கள் தமிழக கடலோரங்களை குறிவைத்தார்கள். கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான குழுக்கள். பத்து கோடியில் தொடங்கி நூறு கோடி இருநூறு கோடி வரை வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்ற குழுக்கள் எல்லாம் இதில் உண்டு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகப் போகிற நிலையில் தமிழக கடலோரங்களை சுற்றிப்பார்த்தால் இடிந்தவை இடிந்தவைகளாக இருக்கின்றன. தன்னார்வக்குழுக்கள் பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
நிரந்தரமாக மக்களை முகாம்களுக்குள் முடக்குவதுதான் இந்த தன்னார்வக்குழுக்களின் இருத்தலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இவர்கள் தமிழர்களின் பிரச்சனையை நிவாரணப் பிரச்சனையாக மாற்றுகிறார்கள்.
ஈழ மக்களுக்கு என்ன வேண்டும்? அவர்களுக்கு படுக்க பாய், உடுத்த துணி, நல்ல ஆகாரம், கழிப்பறை இதெல்லாம் வேண்டும். இதை எல்லாம் நாங்கள் கொடுக்கிறோம். அதற்கு நிதி வேண்டும்.
இன்று புலம் பெயர் நாடுகளில் இலங்கை அரசநிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தம்மை சமூக சேவர்கர்களாக வெளிக்காட்ட முயலும் இந்தக் குற்றவாளிகள் மக்கள் முகாம்களிலேயே வாழவேண்டும் என்று விருப்புக் கொண்டவர்களாக உள்ளனர்.
புதுக்குடியிருப்பு என்ற இடத்தைச் சேர்ந்த புத்திசாதுரியமாகத் தப்பிச் சென்னைக்கு வந்தவரை நேர்கண்ட போது அவர் சொல்கிறார் “யாழ்ப்பாண நகரில் பிச்சைக் காரர்களைப் பார்த்திருக்கிறேன். கொழும்பில் நிறையவே பார்த்திருக்கிறேன். ஆனால் வன்னி மண்ணில் முதல் தடவையாக முகாம்களில் தான் பார்க்கிறேன்” என்று. முகாம்களில் வைத்திய நிபுணர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என்று எல்லாப் பிரிவினருமே மந்தைகள் போல துப்பாக்கி வைத்திருக்கும் சிங்கள வெறிகொண்ட ராணுவத்தால் கட்டி மேய்க்கப்படுகின்றனர்.
நிதி ஏகாதிபத்திய நிறுவனங்களினூடாகவும் இலங்கை அரசின் மூலமாகவுமே இவர்களுக்குக் கிடைக்கிறது. இதெல்லாம் ஈழ மக்களுக்கான தீர்வா? இவைகள் நிவாரணங்கள் மாற்றுத் துணி கூட இல்லாத அம்மக்களுக்கு துணியும் உணவும் தேவைதான். அதைச் செய்ய வேண்டிய கடமை இலங்கை அரசினுடையது தன்னார்வக்குழுக்களினுடையதல்ல மக்களை கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்திருப்பதே மிகப் பெரிய போர்க்குற்றம். கம்பி வேலிகளுக்குள் அடைபட்டிருக்கும் மக்களை அந்த வாழ்க்கைக்கு பழக்கப்படுத்துவது போல போர்வையும், உண்வும் கொடுப்பது இலங்கை அரசின் குற்றச் செயல்களுக்கு சற்றும் குறைவில்லாத இன்னொரு வகையான போர்க்குற்றம்தான்.
நீங்க? என்ன மக்களுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்கிறீர்களா? என்று நீங்கள் கேட்டால் நான் உங்களுக்குச் சொல்வேன். நீ மக்களை அவர்கள் வாழ்ந்த பூர்வீக இடங்களுக்குக் கொண்டு விடு. அவர்களின் விவசாய நிலங்களை அவர்களிடம் ஒப்படை. அவர்களை முகாம்களில் அடைத்து வைத்து அரசியல் உரிமைகளைப் பிடுங்கி, சிவில் உரிமைகளை சூறையாடி, நிராதரவானவர்களாக ஆக்கி விட்டு, உப்பும்,புளியும், மிளகாயும் கொடுப்பதல்ல தமிழர் பிரச்சனைக்கான தீர்வு. நிவாரணங்களை தீர்வாக மாற்றாதே. நீண்டகால இனப்பிரச்சனைக்கு தீர்வு காண். தமிழர்களின் தாயகப்பகுதிகளின் அரசியல் உரிமைகளை மக்களுக்கு வழங்கு. இப்படியான ஒரு சூழல் வரும்வரை ஈழப் போராட்டத்திற்கான நியாங்கள் இருக்கவே செய்யும்.
இதே ஈழ மண்ணில் இன்னொரு ஆயுதப் போராட்டம் வெறு அரசியல் வடிவங்களில் உருவாகாது என்பதற்கோ எவ்வித உத்திரவாதமும் இல்லை.
இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் அறிவுஜீவிகள், ஊடகக்காரர்கள், கலைத் துறையினர் என அனைவருமே ஆளும் வர்க்கங்களின் சார்பினராக மாறிப் போயினர். முற்போக்கு என்பது தன்னார்வக்க குழுக்கள் அளிக்கிற பரிசு என்றாகிப் போனது. இன்னொரு சுனாமி வாராதா? மக்கள் வீடுகளை இழந்து தெருவில் நிற்க மாட்டார்களா? என்று ஒரு ப்ராஜக்ட் எழுதி பல கோடி ரூபாய்களை வசூலித்து விட்டு கொஞ்சப் பணத்தை மக்களுக்கு பிச்சை போட்டு விட்டு மீதிப்பணத்தை ஸ்வாகா செய்து விட்டு அதையே முற்போக்கு முகமூடியாகவும் போட்டுக் கொள்ளலாம் என்று அலைகிற இவர்கள்தான் இன்றைய நவீன உலகின் சமூக சேவகரர்கள். அல்லது மனித உரிமைப் பணியாளர்கள். முழு நேர சமூக சேவகர்கள். என்று இந்த தனனர்வ அறிவு ஜீவிகள் பல் வேறு வகையாக அறியப்படுகிறார்கள்.
”நிரந்தரமாக மக்களை முகாம்களுக்குள் முடக்குவதுதான் இந்த தன்னார்வக்குழுக்களின் இருத்தலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இவர்கள் தமிழர்களின் பிரச்சனையை நிவாரணப் பிரச்சனையாக மாற்றுகிறார்கள்.” என்பது மிக முக்கியமான விடயம்.
தம்மை அரசியல் கட்சிக்காரர்கள் இல்லையென வாய்கிழிய சொல்லித்திரியும் பத்திரிகையாளர்கள் தேசத்தில் மக்கள் முகாம்களில் வாழ்வது மகிழ்ச்சியான விடயமாக்க முயல்வது தற்செயலல்ல. மிகப்பெரிய நிதி மோசடிகள் இந்த தன்னார்வ குழுக்களின் பின்னால் நின்று கும்மியடிக்கின்றன.
‘A lie is halfway round the world before the truth has got its boots on’
மக்களின் அவலவாழ்வில் பிழைப்பு நடாத்த புறப்பட்டுள்ள புலம்பெயர் கூட்டம் விரைவில் நல்லபாடம் படிக்கும்.
தம்பி அவர்களின் கட்டுரை உன்மைகள் பல சொல்கின்ற்ன. தன்னர்ர்வத் தொண்டு நிறுவனஙகள் என்ட்ர பெயரில் பலவிதமான மொசடிகள் செயும் நபர்கள் எஙகும் உண்டு. மனிதம் அவர்கள் எடத்தில் எதிர்பர்ர்ப்பது தவறு.
திஸ்ஸ வித்தாரணவின் உரையும் லண்டனில் ஏற்பட்ட குளறுபடியும் ‐ சிங்கள ஊடகம் அம்பலப்படுத்தி உள்ளது
திஸ்ஸ நாயகத்தின் பிரச்சினையானது ஊடகப் பிரச்சினையல்ல. அது பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினை. இதுகுறித்து நாங்கள் அமைச்சரவையில் கலந்துரையாடினோம். இது பயங்கரவாத செயற்பாடாக இல்லாவிட்டால் இதில் தனக்கு தலையிட முடிந்திருக்கும் என ஜனாதிபதி கூறினார் என அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தக் கருத்தரங்கு ஈ.பி.டி.பி அமைப்பின் துணைச் சங்கமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் பிரதான விரிவுரையாளராக திஸ்ஸ வித்தாரண கலந்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய திஸ்ஸ வித்தாரணவின் உரையானது, படுகொலையை நியாயப்படுத்துவதற்காக அவரினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் இடதுசாரி தலைவர் ஒருவருக்குப் பொருத்தமற்ற மிகவும் அறுவறுப்பானதாக அமைந்திருந்தது.
இந்த நிலைமையானது எந்தவொரு யுத்தத்திலும் தவிர்க்க முடியாதது. இது இன்று நேற்று நடந்தவையல்ல. 1971ம் ஆண்டு, 89ம் ஆண்டுகளிலும் இவை இடம்பெற்றன. இதற்காக அரசாங்கத்தை சாடுவதால் பயனில்லை. யுத்தங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பயங்கரவாதம் இல்லாமல் போவதன் மூலம் நாட்டிற்கு அதனைவிட நன்மை ஏற்பட்டுள்ளது.
திஸ்ஸ வித்தாரணவின் இந்த உரை காரணமாக ஆத்திரமடைந்த கூட்டத்தில் இருந்தவர்கள் தொடர்ந்தும் அவரிடம் கேள்வியெழுப்பியதுடன், உரைக்கு இடையூறு செய்ததன் காரணமாக அவர் தனது உரையை இடைநடுவில் நிறுத்த நேர்ந்தது. இந்தக் கேள்வியை எழுப்பியவர்களில் இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் முன்னாள் ஏற்பாட்டாளர் உவிந்து குலகுலசூரிய மிகவும் சுருகு;கமாக திஸ்ஸ வித்தாரணவிடம் கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். நீங்கள், காலஞ்சென்ற கலாநிதி எம்.என்.பெரேராவின் உண்மையான உறவினரா?|| எனக் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு மறுநாள் பிரித்தானிய நாடாளுமன்றக் குழு அறையில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சமுகமளிப்பதையும் நிராகரித்திருந்த திஸ்ஸ வித்தாரண, உவிந்து வராவிட்டால் மாத்திரமே நான் அந்தக் கூட்டத்திற்கு வருவேன் என நிபந்தனை விதித்தப் பின்னரே அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு உவிந்து வந்திருப்பதைக் கண்ட ஏற்பாட்டாளர்கள் அவர் அருகில் சென்று, திஸ்ஸ வித்தாரணவை அசௌகரியத்திற்குள்ளாக்கும் எந்தக் கேள்விகளையும் கேட்கவேண்டாம் என வாக்குறுதியைப் பெற்று அதனை திஸ்ஸ வித்தாரணவிடம் தெரிவித்ததை அடுத்து அவர் அந்தக் கூட்டத்தில் நீண்ட நேரத்திற்குப் பின்னர் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் உவிந்து அமைதியாக இருந்த போதிலும், கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனையோர் திஸ்ஸ வித்தாரணவிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து நன்கு உணர்ந்துள்ளார். ஜனாதிபதி மிகவும் சரளமாக தமிழைப் பேசி, தமிழ் மக்களின் மனதை வென்றெடுப்பதைப் பாருங்கள் என அமைச்சர் கூறியதை அடுத்து கூட்டத்தில் பாரிய சிரிப்பொலி ஏற்பட்டது. இதுதான் வருடத்தின் சிறந்த நகைச்சுவை என அவர்கள் கூறியதை அடுத்து திஸ்ஸ வித்தாரண பதிலளிக்க முடியாது திணறியுள்ளார்.
கூட்டத்திற்கு தலைமையேற்றிருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரா என்ரி லாவ், கூட்டத்திலிருந்தவர்களை அமைதிப் படுத்த பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டார். அமைச்சர் திஸ்ஸ வித்தாரண முன்தினமும், அன்றைய தினமும் அமைச்சரிடம் கேள்வியெழுப்பி அமைச்சரை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதைத் தவிர்ப்பதற்காக பிரித்தானியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் அம்சா, தமது பிரதிநிதிகள் பலரை பல இடங்களில் அமரச் செய்து உரைக்கு தடை ஏற்படாத வகையில் கேள்விகளைக் கேட்கச் செய்துள்ளார். இதனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஏனயைவர்கள் அறிந்துகொண்டதன் பின்னர் கேள்வியெழுப்புவதைத் தவிர்த்துக்கொண்டுள்ளனர்.
நன்றி லங்கா நியூஸ் வெப் (globaltamilnews.net)