மக்கள் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட்டு வருவதாக அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரங்கள் ஓர் தேர்தல் பிரச்சார நடவடிக்கையே என எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கந்தளாயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தி அடையாத நிலையில் மக்களை மீள் குடியேற்றுவது உசிதமாகதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் முழுமையாக நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படவில்லை எனவும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சரத் பொன்கோவின் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது.