தமிழகத்தில் அப்பாவி மீனவர்கள் கோரமாகப் படுகொலைசெய்யப்படுவதற்கு எதிரான உணர்வுகள் பல்வேறு தளங்களில் அரசியல் வியாபரமாக்கப்படுகின்றது. முற்றிலும் வேறுபட்ட இரண்டு வகையான பிரச்சனைகளை ஒருங்கிணைத்து இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி மிகவும் அபாயகரமானது.
1. இலங்கை இந்திய அரசுகளின் இணைவில் இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்படும் வறிய அப்பாவி மீனவர்கள் குறித்த பிரச்சனைகளும் அதற்கு எதிரான அரசியலும்.
2. தமிழ் நாட்டு மீன்பிடிப் பெரு முதலாளிகளின் நவீன -ட்ரோலர் முறை மீன் பிடியால் பாதிக்கப்படும் குறிப்பாக இலங்கைத் தமிழ் மீனவர்களும் பொதுவாக ஏழை மீனவர்களும்.
இந்த இரண்டு வேறுபட்ட நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும், தொடர்புபடுத்தியும் இலங்கை இந்த்திய அதிகார வர்க்கங்களும் அதன் அடிவருடிகளும் அபாயகரமான அரசியல் சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
நான்கு வகைப்பட்ட அதிகாரவர்க்க அரசியல் நிகழ்ச்சி நிரலில் பின்னணியில் இயங்கும் இலங்கை இந்திய அரசுகளினது அவற்றின் ஊதுகுழல்களினதும் செயற்திட்டம் வீதிக்குக் கொண்டுவரப்பட்டு அம்பபலப்படுத்தப்பட வேண்டும்.
1.ஈழத்தமிழ் மீனவர்களுக்கு ஆதரவாக இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைப் படுகொலை செய்கிறது என்ற கருத்தை உருவமைக்க முயலும் இலங்கை அரச ஆதரவாளர்கள்.
2. அப்பாவி மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கான உணர்ச்சி அரசியலை முன்வைத்து இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்கும் உரிமையை எதிர்பார்ர்கும் பன்னாட்டு பெருமுதலாளிகள்.
3. பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகத்திற்கு வசதியாக கடற்பரப்பை சூனியப்பிரதேசமாக்கும் இலங்கை, இந்திய தமிழ் நாட்டு அரசுகளின் திட்டம்.
4. இந்த இரண்டு வேறுபட்ட பிரச்சனைகளை ஒருங்கிணைத்து இலங்கை இந்திய மீனவர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயலும் இலங்கை இந்திய அரச ஆதரவாளர்களும் அதன் அடிவருகளும்.
இந்த அபாயகரமான அரசியல் வியாபாரிகளை பகுத்தறிந்துகொள்வதும் அவர்களின் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்வதும் இன்று அவசியமானது.
இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் அரசியல் இரண்டு நோக்கங்களைக் கொண்டது.
1. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழகத்திலிருந்து எழும் எதிர்ப்பியங்களை அழித்தல்.
2. பல் தேசிய நிறுவனங்களின் சுரண்டலை ஊக்குவித்தல்.
மீன்பிடி வர்த்தகத்தின் உலகச் சந்தை வியாபாரிகள் இலங்கை இந்திய மீனவர்களை தமது பொருளாதாய ஆதிக்கத்திற்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டவர்கள். கூலி மற்றும் வறிய மீனவர்களின் நாளாந்தத் உழைப்பு மூலதனத்தை சுரண்டும் இவர்கள் கடற்பரப்பை சந்தைக்கு உவந்த பிரதேசமாக மாற்ற முனையும் நடவடிக்கைக்கு இந்திய இலங்கை அரசுகள் துணை போகின்றன. தமிழக மீனவர்களின் கொலைகள் ஊடாகப் பய உணர்வை ஏற்படுத்தி அவர்களை அரச பின்பலம் கொண்ட பெரு முதலாளிகளிடம் சரணடையச் செய்கின்றது.
தவிர, மேற்குறித்த வகைப்படுத்தல்களைப் புரிந்து கொள்ளாத எழுந்தமானமான தமிழ் உணர்வுப் போராட்டங்கள் பல் தேசிய நிறுவனங்களுக்கு எதிர்ப்பின்றிய மக்கள் ஆதரவைத் தோற்றுவிக்கிறது. இந்த நிறுவனங்கள் இந்திய மீனவர்களுக்கு மட்டுமல்ல இலங்கை மீனவர்களுக்கும் எதிராவையே.
ஆக, இந்திய அரசின் திரை மறைந்த ஆதரவுடன் அப்பாவி வறிய மீனவர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்தும் மனிதப் படுகொலைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பியக்கங்களும் இலங்கை, இந்திய மற்றும் பல் தேசிய நிறுவனங்களுக்கு எதிரானதாக நடத்தப்பட வேண்டும்.
தேர்தலுக்காகவும் கனி மொழி போன்ற வாக்குக் கட்சி அரசியல் வாதிகள் நடத்துகின்ற போராட்டங்கள் அடிப்படையில் பல் தேசிய நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்குடனேயே நடத்தப்படுகின்றன. வன்னிப் படுகொலை அவலங்களை இனப்படுகொலை என்றும் ராஜபக்ச போர்க்குற்றவாளி என்றும் கூறத்துணியாது, அவருக்குப் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்த கனிமொழியின் மீனவர்கள் மீதான காதல் எல்லை கடக்கும் இந்தியப் பெரு முதலாளிகளின் மூலதனத்திற்கானது.
இலங்கைக் கடல் எல்லைக்குள் நவீன உபகரணங்களோடு மீன்பிடித்த மீனவர்களின் கைதிற்கு எதிரான போராட்டங்கள் பல்தேசிய நிறுவனங்களின் நலனுக்கானதாக அமையும் அதே வேளை தமிழ் நாட்டு வறிய மீனவர்களின் படுகொலைகளிற்கு எதிரான போராட்டங்கள் இந்திய இலங்க அரசுகளின் ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உருவாகும் தன்மைகளைக் கொண்டிருகிறது.
புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில்ருந்து உருவாகவல்ல ஈழ ஆதரவு அரசியலை அழிப்பது தமது நோக்கங்களில் ஒன்றாக அமையும் என நாராயணன் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த காலத்தில், வன்னிப் படுகொலைக்களுக்குச் சற்றுப் பின்னான காலப்பகுதியில் பாதுகாப்புப் படை உயரதிகாரிகளின் மாநாட்டில் குறிப்பிட்டிருந்தார்.
கே.பியை மையமாகக் கொண்டு இலங்கை அரசின் ஆதரவுத் தளம் புலம் பெயர் நாடுகளில் உருவமைக்கப்பட்டது. புலிகளின் ஆதரவாளர்களிலிருந்து தன்னார்வ நிறுவனங்கள் வரைக்கும் விரிந்த வலைப்பின்னல் ஒன்று இலங்கை அரச நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வெற்றிகரமாகத் தயாராகிவிட்டது.
புலம் பெயர் நாடுகளை விட மிகவும் உன்னிப்பாகக் கவனம் செலுத்தப்பட்ட மற்றொரு ஆதரவுத்தளம் தமிழ் நாட்டிலிருந்தது. விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பிலிருந்து இன்றைய மீனவர் பிரச்சனை வரைக்கும் தமிழக மக்கள் மத்தியில் ஈழத் தமிழர்கள் மீதான வெறுப்பையும் இவர்களிடையே முரண்பாட்டையும் ஏற்படுத்தும் நாடகத்தை இலங்கை இந்திய அரசுகள் திட்டமிட்டு நிறைவேற்றி வருகின்றன.
தமிழ் நாட்டின் மீது உச்ச பட்ச கவனம் செலுத்தப்படுவதற்கு ஈழ ஆதரவுப் போக்கு மட்டும் காரணமல்ல. இதன் மறுபக்கத்தில் இந்திய, தமிழ் நாட்டு அரச அதிகாரங்கல் மீதான எதிர்புணர்வு தமிழ் நாட்டின் ஒரு தொகுதி இளம் சமூகத்தின் மத்தியில் அதிகரித்திருந்தது. ஈழப் பிரச்சனையை முன்வைத்து எதிரிகளை அடையாளம் காண்கின்ற இவர்கள், இடதுசாரி இயக்கங்களை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கஷ்மீர் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவான பல எதிர்ப்பியக்கங்கள் தமிழ் நாட்டில் உருவாகின. பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் இராணுவ அடக்குமுறைக்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் வெற்றிகண்டன. இந்திய அரச அதிகாரத்திற்கு இவைகள் புதிய நெருக்கடிகளைத் தோற்றுவித்தன.
மினவர் பிரச்சனையை முன்வைத்து ஈழ ஆதரவளர்களையும் அவர்களின் எழுச்சியையும் கையாள்கின்ற “அரிய சந்தர்ப்பம்” இந்திய அரசிற்கு கிடைத்திருக்கின்றது. இந்திய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் இவர்களைத் தனிமைப்படுத்தவும், ஈழம் சார்ந்த முரண்பாடுகளை உருவாக்கவும் இந்திய இலங்கை அரசுகள் மீனவர் பிரச்சனையை ஆயுதமாகப் பயனபடுத்திக்கொள்கின்றன.
வன்னிப் படுகொலைகளின் சற்றுப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட அதிகார வர்க்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் இப்போது பிரதான கட்டத்தை அடைந்துள்ளது. நேபாளத்திலிருந்து வெளியாகும் ஹுமால் பத்திரிகையில் கடந்த ஆண்டு ஜூலை மாத இதழில் புலம் பெயர் தன்னார்வ நிறுவனமான சிறிலாங்கா ஜனநாயக முன்னணியின் முதன்மை உறுப்பினரான அகிலன் கதிர்காமர் நீண்ட கட்டுரையையும் யாழ்ப்பாண மீனவர் தன்னார்வ நிறுனம் ஒன்றின் தலைவரின் நேர்காணைலையும் வெளியிட்டிருந்தார். சாராம்சத்தில், போர் முடிந்துவிட்டது, அமைதிச் சூழலில் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தமிழக மீனவர்கள் எதிராகச் செயற்படுகின்றனர் என்று அக்கடுரையும் நேர்காணலும் கூற எத்தனிக்கின்றன.
ஆக, இலங்கை இந்திய அரசுகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் ஒரு தொடர்ச்சியக் கொண்டதாக அமைகிறது.
1. தமிழக மீனவர்கள் – வறிய மீனவர்கள் உட்பட – இலங்கை மீனவர்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை உருவாக்குதல்.
2. ஈழ மீனவர்களைப் பாதுகாக்க இலங்கை அரச படைகள் தமிழ் நாட்டு மீனவர்களைக் கொலைசெய்கின்றன என்ற சிந்தனையைத் தோற்றுவித்தல்.
3.ஈழத் தமிழ் மீனவர்கள் மத்தியில் இலங்கை அரச ஆதரவுப் போக்கைத் தோற்றுவித்தல்.
4. இதனூடாக ஈழத் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையேயான பகையுணர்வை ஏற்படுத்தல்.
5. ஈழ ஆதரவாளர்களைத் தனிமைப்படுத்தல்.
6. இதனூடாக இந்திய எதிர்ப்புப் போராட்டங்களைத் தமிழ் நாட்டில் பலவீனமடையச் செய்தல்.
இலங்கை இந்திய அரச ஆதரவாளர்கள் இந்த நிகழ்ச்சி நிரலின் பின்புலத்தில் அணிதிரண்டுள்ளனர். அபாயகரமான இவர்கள் எதிர்கொள்ளப்பட வேண்டும்.
1. இந்திய இலங்கை மீனவர்களின் அடிப்படை எதிரிகள் பல் தேசிய நிறுவனங்கள் என்பதன் அடிப்படையில் இரண்டு மீனவர் சமூகங்கள் மத்தியிலும் போராட்டங்களும் இணக்கப்பாட்டிற்கான பேச்சுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. முரண்ப்ட்டடுகளை திட்டமிட்டு உருவாக்கும் இவ்விரு அரசுகளின் சூழ்ச்சி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.
3. வறிய மீனவர்களின் கொலைகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கட்டுரையின் இறுதிப் பகுதி சில நாட்களில் வரும்..
இன்று இந்தியப்பரப்பில் மீன்வளம் குறைந்துள்ளது. இதற்குக்காரணம் பெருமுதலாளிகளும் சிறு முதலாளிகளும் தடைசெய்யப்பபட்ட மீன்பிடி முறைகளைப் பாவித்ததேயாகும். இன்று அங்கு மீன்பிடிக்கான வாய்ப்புக்கள் குறைந்துள்ள நிலையில் சாதாரண தொழிலாளர்களைப் பயன்படுத்தி இலங்கைப் பரப்பைக் கபிளிகரம் செய்ய இந்திய முதலாளிகள் முனைந்துள்ளனர். (இதுவரை அவர்கள் யுத்தத்தைப் பயன்படுத்தி இதனைச் செய்துவந்தார்கள்)
இவ்விடயத்தில் இலங்கை விட்டுக்கொடுப்பது வடபகுதி மீனவத் தொழிலாளர்களைப் பாதிக்கும். அத்தோடு கடைசியில் பயன் பெறப்போவது இந்திய முதலாளிகளே. இந்திய மீனவத் தொழிலாளர்களல்ல
தாயும் பிள்ளயுமாய் பழகியவரிடையே பகைமை ஏற்படுகிறது என்றால் அது வாழ்வதற்கான அச்சமே. தமது பிழைப்பு பறீபோய் விடுமோ எனும் அச்சம் வாழ்வதற்கான போராட்டம், எனது கடல் எனது எல்லை எனும் உரிமைப் போராட்டமாக மாறூம் போது தமிழர் என்பதும் மறக்கப்படும் இது இலங்கைத் தமிழருக்கு ஆபத்தானது.
தமிழக கடற்றோழிலாளர்களை ஈழக்கடற்றொழிலாளரே சிறைப்பிடித்ததாக இந்தியாவுக்குக் கூறப்படுகின்றது. உண்மையில் நடந்தது என்ன? எப்படி இது சாத்தியமாகின்றது. சிங்களக் கடற்றொழிலாளர்கள் வேறிடங்களிலிருந்து வந்து பலவந்தமாகக் கடற்றொழிலில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வருகின்றன. அதனைக் கண்டும் காணாதது போல் செய்வதறியாது இருப்பதாக அறிகின்றோம். ஆனால் தமிழகக் கடற்றொழிலாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை சுற்றிவளைத்துப் பிடித்ததகாகச் செய்திகள். அப்படியானால் ஏற்கனவே திட்டமிட்டே இது நடந்திருக்க வேண்டும். எது எப்படியோ சிங்கள அதிகாரபீடம் ஆளுமையும்> ஆற்றலும் உள்ளவர்களால் வழிநடத்தப்படுகின்றது என்பதும் தமிழர் பக்கம் பதவி> புகழ் தேடும் வெற்றுப்பேச்சு வீரர்களால் நிரம்பியுள்ளது (ஆங்காங்கு ஒருசிலரைத் தவிர)
நடிகர் கமல் இலங்கைத் தமிழனை தனது படங்களீல் மட்டம் தட்டுவது போல அல்ல மீனவர் பிரச்சனை.இது வாழ்வாதாரப் பிரச்சனை.அதிலும் எப்போதும் உணர்ச்சி வசப்படும் ஒரு வர்க்கத்தின் பிரச்சனை.இது மீன் சாப்பிடுவதற்காக கறூப்புச் சட்டை போட்டு பிராமணன் காட்டும் காட்சி அல்ல அடக்கி வைக்கப்பட்டுள்ள உணர்ச்சிகளீன் எரிமலை.அரசியல்வாதிகள் பூச்சாண்டி காட்டாது பிரச்சனைகளீன் அடிப்படையை புரிந்து கொண்டால் மட்டுமே இத்ற்கான தீர்வைக் காண முடியும்.
தமிழக ஏழை கடல்தொழிலாளர்களை மகிந்தாவின் பாசிச அரசு கொலை செய்கிறது. ஆம் உண்மை. ஆனால் அவர்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் வாழ்வை பலி கொடுப்பது யார்? தமிழ்நாட்டு பெருமுதலாளிகள். வன்னி மக்களை கொன்றது இலங்கையின் பாசிச அரசு. பலி கொடுத்தது புலிகள். பெருமுதலாளிகளின் நவீன அழிவு முறைகளிற்கு எதிராக பாரம்பரிய இயற்கையோடு இணைந்த கடல்தொழிலார்களின் போராட்டமிது. இதை தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது, தமிழ்நாட்டு கடல்தொழிலாளர்களிற்கு எதிரானது என்று இனியொரு கயிறு திரிப்பது அயோக்கியத்தனம்.
மீண்டும் ஒரு நல்ல கட்டுரையொன்றினை எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடுகிற அபாயகரமான நிலைமைகள் குறித்து போதிய கவனம் செலுத்தாவிட்டால் நிலைமைகள் மேசாமடையும்-இரு நாட்டு மீனவர்களிற்கும் பாதிப்பை ஏற்படுத்தவதாக அமையும். உமா குறிப்பிடுகிறவாறு பல்வேறு பிரச்சினைகளை மறைக்க இந்த விடயம் பயன்படுத்தப்படுகிறது. புலம்பெயர் சமூகத்திலிருந்து இவ்விடயம் குறித்து மேற்கொள்ளக்கூடிய – அது சிறியதாயினும் மேற்கொள்ள முயற்சிக்கலாம்.
இந்திய மீனவர் பிரச்சினை குறித்து எழுதிய கட்டுரை தெளிவான ஓர் கருத்தை முன்வைத்துள்ளது. இது அவசரமாக பரவலாக்கப்பட வேண்டும். பிரச்சினை நீங்கள் குறிப்பிடுகிற வகையிலே நகர்த்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் திட்டமிட்ட செயற்பாடு இருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. டக்ளசும்-வட பகுதி மீனவர் சங்கம் என்ற அமைப்பும் இப்போது இதில் முனைப்புக் காட்டி வருகிறது.
ஈழத்து மீனவர்கள் என்ற போர்வையில் பெட்ரோல் குண்டுகளை வீசியது ஈ பி டி பி யின் குர்நகர் மீனவர் சங்க பிரதிநிதியும் அவர் நண்பர்களுமே. தமிழக மீனவர்கள் மற்றும் தமிழீழ மீனவர்கள் உணர்ச்சிவசப்பட்டு மொத விட்டு திலக அரசியலையே ஈழ விடுதலைக்கு எதிராக திசை திருப்பும் ஒரு பெரும் திட்டத்தின் தொடக்கம் மட்டுமே இது .
தமிழ் இணையதளங்கள் பொறுப்போடு உண்மையை அறிந்து செய்திகளை போடவேண்டும் ! பெட்ரோல் குண்டு வீசினார்கள் என எழுத முன் அவை எங்கு இருந்து வந்தன , இலங்கை கடற்படை மீதோ இராணுவம் மீதோ இதுவரை வீசபடாத இந்த குண்டுகள் ஏன் திடீர் என்று தமிழக மீனவர்கள் மேல் பாச்சபடுகின்றன ?
தயவு செய்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உடனடியாக தலையிட்டு டக்ளசின் போதனையில் இருந்து யாழ் மீனவர்களை விடுவிக்க வேண்டும். ஈழ கடலும் தமிழக கடலும் தமிழனின் கடல் என்னும் உணர்வை வளர்க்க வேண்டும்.
மீனவா்கள் இலங்கைக்கரைக்கு வந்தது தற்செயலாக நடந்த ஒரு விடயமாக தெரியவில்லை இந்த நாடகங்கள் மூலம் இரண்டு பக்கங்களிலும் நடக்க இருக்கும் தோ்தல்களை குறி வைத்து காய்களை நகா்த்த முனைவதும் தமிழ் நாட்டு தமிழா்கழுக்கும் இலங்கைத்தமிழா்கழுக்கும் இடையில் கசப்புணா்வை ஏற்படுத்துவதும் இதில் முக்கியம் பெறுகிறது.
இதில் இலங்கை அரசியலுக்கு இந்திய அரசாங்கம் தமது ஊழல் பயிற்சி வழங்கும் திட்டத்தில் ஒருபகுதியாகவும் எச்சரிக்கும் பகுதியாகவுமே . காரணம் ஈழத்தை அழித்து வெற்றியை நிலைநாட்ட முடியாத நிலையில் இருநாட்டின் கொள்கைக்கு மாறன காரியங்களுக்கு மாற்றுத்திட்டமாக மக்களை திசைதிருப்பி மோத வைத்து அதில் அரசியல் வளர்க்கின்றது . தமிழினம் விளிக்க வேண்டிய நேரம் என்பதை தமிழினம் புரிந்தால் தமிழ்நாட்டில் தமிழினத்தின் உரிமைபற்றிய அரசியல் அமைதியை நிலைநாட்ட தமிழீத் தமிழ்மக்களின் தீர்வை இந்தியா முன்வைக்க வேண்டும் . அத்தனைக்கும் என்னால் முடியும் என தன்னை முன்னிலைப்படுத்தும் இந்தியா அல்லது விலகிப் போகும் தன்மையை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் . அதனை முன்னிலைப்படுத்தி மக்கள்எழுச்சி பெறவேண்டும் .