பெண்டாள வந்தவனின் சிண்டு பிடித்திழுத்துவந்து
சங்காரம் செய்யத்துப்பில்லை நீ
வலி தந்தோரை தோற்கடிப்பாயா
அடக்கவந்த அம்பாந்தோட்டை முன்
பெட்டிப்பாம்பாய் அடங்கி கூழைக்கும்பிடு போட்டுவிட்டு
வாசல் வந்ததும் வீராவேசப் பேச்சு
நாய்க்கும் உனக்கும் வேறுபாடில்லைக் காண்
காடுவெட்டிக் கலைத்தவனிடன் நாடுகேட்டாய்
காலைப்பிடித்தாய்
காலில் மிதிபடும் புழுவாய்
கையில் நசிபடும் பூச்சியாய் உருமாறினாய்
வீடு கொளுத்தியவனை விதானையென்றேத்தி வைத்தாய்
காடுவெட்டியதுபற்றி உனக்கென்ன கவலை
நீட்டிப்படுத்தாய் பிள்ளை குட்டி பெற்றாய்
வீடு கட்டவும் அடுப்பெரிக்கவும் உனக்கு விறகானது காடு
புதைந்தவர் என்ன எழுந்தா வரப்போறார்
வந்தென்ன கணக்கா கேட்டுவிடப் போறாரென
அவரவர் அகப்பட்டதை சுருட்டிக் கொண்டனர்
நான்கு வருடங்களாய் நீட்டிப்படுத்திந்தாயே
உனக்காக யார் பேசினார்
தொட்டு ஆறுதல் சொல்ல வேண்டாம்
எட்ட நின்றாவது ஆற்றுப்படுத்தினாரா யாராவது
அழாதே என்று எங்கிருந்தாலும் ஒரு கரம் நீண்டதா
விழுந்ததற்கு ஆயிரம் வியாக்கியானம் சொல்லலாம்
ஒற்றுமையில்லையென்பாய்
சர்வதேச ஆதரவை பெறவில்லையென்பாய்
அரசியலில் கால் பதிக்கவில்லையென்பாய்
ஒருபடி மேலே போய்
சகோதர படுகொலையென்பாய்
கொத்துக் குண்டென்பாய்
கோவணம் அவிழ்ந்ததென்பாய்
விழுந்ததற்கு ஆயிரம் வியாக்கியானம் சொல்வாய்
நான்காண்டாய் நீ
எழுந்திருக்காததற்கு என்ன சொல்லப்போகிறாய்
வருவார் என்றொரு கூட்டம் கால் நீட்டிப் படுத்திருக்கும்
தேர்தல் வென்று தாயகம் காண்போமென்ற கனவுடன் ஒரு கூட்டம்
நீட்டிப்படுத்திருக்கறாரேயொழிய
நாலாண்டுக் கூன் நிமிரும் வழிசொல்வாரில்லை
சோதிப்பிளம்பாய் இரு என்றால்
சூம்பின பழமாய் சோர்ந்து கிடக்கிறாய்
சூரன்போரென்றால் துடித்தெழுந்து ஆறுநாள் தவமிருந்து
முருகன் புகழ்பாடி குளித்து முழுகி
ஆஜானுபாகுவாய் வலம் வந்தாய்
கடவுள் வீரம் போற்றிய நீ மட்டும்
கும்பிடு பூச்சியானாய்
குறவணன் வண்டு போடு குறண்டிப்படுத்துவிட்டாய்
பெண்ணைத் தொட்டவனையே விட்டுவிட்டாய்
மண்ணைவிழுங்கினாலும் மதிகெட்டுக்கிடப்பாய் நீ
விதியென்று வீங்கிக் கிடக்கிறாய்
எழுவதற்கு எந்த முன்மொழிவும் உனக்கில்லை
சிறு அசைவு
சின்னஞ்சிறு தீப்பொறி
ஒரு புகைச்சல்
ஒன்றையும் காணவில்லை
அவர் வருவார்
அவர் வருவர்
அவர் வருவார்
ஏனடா இத்தகைய இழிவு
உடைவாளையும் வேலக்கம்பையும்
வியாபாரியிடம்; பழமிரும்புக்கா விற்றுவிட்டாய்
ரோச நரம்பை அறுத்து வீணைக்கா நாணேற்றிவிட்டாய்
போர்க்களப் புரவிகளை செக்கிழுக்கவிட்டுவிட்டாய்
மணியையும் முடியையும் விற்று
மதிமயங்கித்தான் போனாய்
கொந்தளித்தெழ முடியா உனக்கு
கோவணமெதற்கு
அவிழ்த்தெறிந்துவிட்டு படு
ஆடு மேய்ந்துவிட்டுப் போகட்டும்
அது இருந்தாலென்ன இல்லாவிட்டாலென்ன
அவர் வருவார்
அவர் பார்த்துக் கொள்வார்
அதுவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு படு
உற்றவளை
பெற்ற தாயை
மகளை
பெண்டாள யாரும் வந்தால்
கண்களை இறுக்கி மூடிக்கொள்
காதையும் பொத்திக்கொள்
புத்தூரில் பூநகரியில் நடந்தது
உன் வீட்டிலும் நடக்கும்
நீ போர்த்திப்படு
பழி வந்து சூளுமென்று கிஞ்சித்தும் கலங்காதே நீ
போரில்லைத்தானேயென்று புளுகுவாய் நீ
ஊரின்னும் உறங்காமல்தானே கிடக்கிறது.
கந்தகம்தான் மணக்கவில்லையென்பாய்
வன்புணர்ச்சி தொடர்கிறதே
தனக்கானதை தான் தெரிதலே சுதந்திரம்
உனக்கான சின்னத்தில் போட்டியிடவே உரிமையில்லை
இணங்கிப்போய் என்ன காணப்போகிறாய்
பறந்து திரிந்தே பாதியுயிர்போன நோர்வே சொல்கிறது
புலம்பெயர் தமிழர் போராடுகவென்று
அதுவும் அமைதிவழியென்றும் சொல்கிறார்கள்
அவர்களுக்கோ சோறு உண்ட ஏவறை
எமக்கோ வயிற்றுக்கில்லாதவன் விடும் கொட்டாவி
வேலியடைக்க வந்தவனை வீட்டுக்குள் படுக்கவிட்டு
திண்ணையில் படுத்திருக்கிறோம் நாம்
செம்மண் பரப்பெல்லாம் பலாக்காய் சாகுபடி
கரிசல் பூமியதில் மரவெள்ளிசெடி வைக்க மழை பார்த்து நாம்
முப்பாட்டன் வாழ்ந்த மண்ணில் நம்மை
வேரோடு பிடுங்கி வந்து
வேறோரிடத்தில் பதியன் வைக்கிறானாம்
படலை திறந்து வந்தவர்கள்
உடலைக்கிடத்தி உள்ளே படுத்திருக்க
வாசலில் நாம் தட்டேந்தியபடி
வாழ்வின் அத்தனையையும் போருக்களித்துவிட்டு
ஓரினம் தாழ்வின் படுக்கையிலே
தலைசாய்த்துப் படுத்திருக்கு
தூக்கி நிறுத்துதற்கும்
துவண்ட மனம் ஆற்றிடவும் யாருமில்லை எங்களுக்கு
வீழ்ந்ததற்கு வியாக்கியானம் சொல்லி
வீண் பொழுது போக்கி நின்றோமென்றால்
எழாதது ஏனென்று எம் சந்ததி கேட்கும்
என் சொல்வோம் நாம்….?
ச.நித்தியானந்தன்-யாழ். பல்கலைக்கழகம்
உங்கள் கவலை எங்கள் பலருக்கும் இருக்கிறது . நாங்கள் மக்களுக்கு உணவளிக்கும் சில முயற்ச்சிகளை உருவாக உள்ளோம்
எமது ஆயுதம் துப்பாக்கியல்ல உணவுதான் எமது ஆயுதம்
வெகு விரைவில் நாங்கள் அதை நிறைவேற்றுவோம்
“நான்மூடர்களைக்காண்பதுஇதுமுதல்தடவையல்ல”
உங்கள்கவிதைக்குப்பலவிதமானவிமர்சனங்கள்வரக்கூடும். நீங்கள்அவற்றைப்பெரிதுபடுத்தவேண்டாம்
ஒரு நாள் சுவாமி விவேகானந்தர்ரெயினில் பயணம் செய்து கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் அமைர் ந்திருந்தஇரு ஆங்கிலேயக் கனவான்கள் காவியுடை அணித்திருந்த அவரை ஆங்கில மொழியில் கிண்டல் செய்துகொண்டிருந்தார்கள் .அவருக்கு ஆங்கிலம் தெரிய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் .
ஆனால் விவேகானந்தர்அவர்கள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலசும்மா இருந்தார்
ஒரு தரிப்பிடத்தில் வண்டி நின்றதும்மேடையில் நின்ற ஒருவரிடம் “இங்கு குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்குமா ” என்று ஆங்கிலத்தில் கேட்டார் அவருக்குமுன்னாலிருந்த கனவான்கள் ஆச்சரிய மடைந்தார்கள்
“நாங்களஉங்களைப் பற்றி அவமானமாகப் பேசியதற்கு நீங்கள் எங்களுடன் ஏன் ஆத்திரப் படவில்லை ” என்று கேட்டார்கள்
வி வேகானந்தர் பதட்டப் படாமல்
“நான்மூடர்களைக்காண்பதுஇதுமுதல்தடவையல்ல” என்று பதிலளித்தார்
இந்த “தமிழ் மூடனின் ” பெயரை கிளிக் செய்தேன் அவரது இணையதுக்கு செல்லும் துர்ப்பாக்கியம் கிடைத்தது . அங்கே கண்ட கொள்கை வரிகள் இவை .—
///////”ஆதி தமிழினம் அகிலத்தை ஆளும்!”
.
எதிர்காலத்தில் நடக்கப்போவதை தனது தெய்வீகப் பார்வையில் கண்ட சித்தனின் தீர்க்கதரிசனம்
//////—–உலகத்தை தமிழ் ஆழுமாம் !!!இப்படிப்பட்ட அறிவிலிகளுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை .
/////////எமது ஆயுதம் துப்பாக்கியல்ல உணவுதான் எமது ஆயுதம்
—-தமிழ் மூடன்
//////////—————————————-மூடனே மக்கள் மீது உனக்கு அக்கறை இருந்தால் அறிவைக் கொடு — சிந்தனையை தூண்டு – மக்களிடையே தன்னம்பிக்கையை வளர் – சுய முயற்சியை ஊக்குவி —
மக்களை உன் நலன்களுக்கு பாவிக்க விரும்பினால் உணவை மட்டும் கொடுத்து உன்னில் தங்கி வாழவை
///////உனக்காக யார் பேசினார்
தொட்டு ஆறுதல் சொல்ல வேண்டாம்
எட்ட நின்றாவது ஆற்றுப்படுத்தினாரா யாராவது
அழாதே என்று எங்கிருந்தாலும் ஒரு கரம் நீண்டதா
////———கனடாவின் காமன் வெல்த் புறக்கணிப்பு தீர்மானம் ஐக்கிய நாடுகள் ச்பை நிபுணர் குழு அறிக்கை, சனல் 4 ஆவணத் தொடர் , மனித உரிமைச் சபை தீர்மானம் , சர்வதேச விசாரணை அழுத்தம் , மனித உரிமை ஆணையாளரின் இவ்வார விஷயம், இதெல்லாம் தெரியாதோ அல்லது சனத்ததை விரகதியடைய வைக்க உனக்காக யாரும் இல்லை என்ற கண்ணீர் புகைக் குண்ட்டோ?
You are writing great in Tamil too. Poonakari – Pooneryn. I like that word..
///////அதுவும் அமைதிவழியென்றும் சொல்கிறார்கள்
//////அது சரி ஆயுதப் போரட்ட காலத்தில் அதனை ஆதரித்து அல்லது அதில் மக்களை இணையக் கோரி ஒரு வரியாவது சனி ஆனந்தன் எழுதியதாக தெரியவில்லை ????
Marshal. Ilanthirayan is Karaiyar from Armugathan Kudiruppu in the Batticaloa District. What he said at Pooneryn….to…BBC…
/////////////////மீண்டும் வேதாளம் பூநகரி முருங்கையில் தேர்தல் தேரேறி வலி தந்தோரை வீழ்த்துவோம் : ச.நித்தியானந்தன்//////////// சனித் தியான ஆனந்தனே “தேர்தல் தேரேறி வலி தந்தோரை வீழ்த்துவோம்” என்று தலைப்பு போட்டிருக்கின்றீர்.
தேர்தலில் அவர்களை வீழ்த்தும் கனவை உமது கட்டளைப் பீடமே கைவிட்டு நெடுனாளாச்சு .
டக்ல்ஸ் தெர்தலில் நிற்காமலே ஓட்டம் பிடித்து விட்டான் .
அங்கயன் கும்பல் கடைக்குள் ஓழிகின்றது
இந்த இலட்சனத்தில் ஐயா விக்கினெஸ்வரனையும் ஆனந்தி பொன்றோரையும் தெர்தலில் வீழ்த்த நீர் கனவு காண்பதை நினைக்க அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை .
சந்திரமௌலீசன் நண்பரே ஏன் இந்தக் கோபம் ஏன் இந்த வெறுப்பு
ஒத்த குரலுள்ளவர்களுக்கிடையே ஏனிந்த மோதல்
நட்புடன் இருப்போம் நல்லதை நினைப்போம்
நிச்சயம் எழுவோம் நண்பரே
விக்கினேஸ்வரன் ஐயாவையும் ஆனந்தியையும் தேர்தலில் வீழ்துவோம் என்கிறீர் யாரை அது வெல்லவைக்கும் ? உலகுக்கு அது என்ன செய்தியை சொல்லும் ? சொல்லும் பார்ப்பொம் அதன் பின் நீர் எனக்கு எதிரியா நண்பனா என முடிவு செய்வோம்.
இது வரை நீர் என் எதிரிதான் .
தேர்தல் தேரேறி (வந்தாவது)
வலி தந்தோரை வீழ்த்துவோம்
என்பதே என் கருத்து
இம்சையரசன் வடிவேலு
இப்படித்தான் ஒரு கவிஞருக்கு கருத்து விளங்காமல்
மூக்குப்பொடி தண்டனை வழங்கினார்
புரிந்து கொள்ளுங்கள் மௌலீசன்
////தேர்தல் தேரேறி (வந்தாவது) வலி தந்தோரை வீழ்த்துவோம் என்பதே என் கருத்து /// என்றிருக்கின்றீர் . நித்தியானந்தன். ச============
உமது “கவி”த்துவத்தில் உள்ள கீழே உள்ள வரி அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எண்டா சொல்லுது .
//////தேர்தல் வென்று தாயகம் காண்போமென்ற கனவுடன் ஒரு கூட்டம்////
சனித்தியான ஆனதனே சுத்துமாத்து பண்ணாதையும் . ஒரு கிரிமினலை நீண்ட நெரம் பெச வைத்த்து அடிக்காமல் உத்தைக்காமல் குர்றாவாளியை கண்டு பிடிக்கும் குர்றவியல் துறை இருக்கு என்பது எனக்கும் தெரியும் . ஐயா விக்கிநேஸ்வரனுக்கும் தெரியும் .
சனித்தியான ஆனந்தனே அவர்களின் வெற்றிக்காக நீ எழுதிய ஒரு உரமான கவிதை சொல்லும் !!சொல்லும் !!!. ஏலுமெண்டால் இனியாவது செய்யும் !!!
அதுவரை
உம்மை நம்ப நான் தயாரில்லை
Your comment is awaiting moderation.
///////////////Reply
நித்தியானந்தன். ச
Posted on 08/23/2013 at 09:04
சந்திரமௌலீசன் நண்பரே ஏன் இந்தக் கோபம் ஏன் இந்த வெறுப்பு
ஒத்த குரலுள்ளவர்களுக்கிடையே ஏனிந்த மோதல்
நட்புடன் இருப்போம் நல்லதை நினைப்போம்
நிச்சயம் எழுவோம் நண்பரே
////////////விக்கினேஸ்வரன் ஐயாவையும் ஆனந்தியையும் தேர்தலில் வீழ்துவோம் என்கிறீர் யாரை அது வெல்லவைக்கும் ? உலகுக்கு அது என்ன செய்தியை சொல்லும் ?
read this for further info ,
ஏனெனில் ,
முதலாவதாக, சிறீலங்கா அரசு இந்த தேர்தலை நடாத்துவது , இந்தியாவின் ஆதரவை மட்டும் தேட அல்ல சர்வதேச நாடுகளின் ஆதரவையும் ஈட்ட என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் .
இரண்டாவதாக, கடந்த மார்ச் 2013 இல் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீமானத்துக்கு அமைய நடந்து கொள்கின்றோம் எனப் பிரச்சாரம் செய்யவே தேர்தல் நடத்தப்படுகின்றது , என்பதைக் குறிப்பிட ஏன் மறந்தீர்களோ தெரியவில்லை
மூன்றாவதாக , நாம் ஒரு ஜனநாயக நாடு என முழங்கவே இந்த தேர்தலை சிறீலங்கா அரசு நடத்துகின்றது .என்பதைக் குறிப்பிட ஏன் மறந்தீர்களோ தெரியவில்லை
நான்காவதாக , எதிர்வரும் செப்டம்பர் கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசு சமர்பிக்கும் அறிக்கையின் முதல் பாகத்திலேயே இந்த தேர்தல் நடாத்தியது மாபெரும் ஜனநாயகம் என சிறீலங்கா முழங்கும் . என்பதைக் குறிப்பிட ஏன் மறந்தீர்களோ தெரியவில்லை
ஐந்தாவதாக , மேற்சொன்னவை தான் அரசின் திட்டம் . என்பதைக் குறிப்பிட ஏன் மறந்தீர்களோ தெரியவில்லை
ஆறாவதும் , , மிக முக்கியமான ஆன விடயம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விடும் தவறு தொடர்பானது .
முன்பு சொன்ன செப்டம்பர் ஜெனீவா மகா நாட்டில் சிறீலங்கா அரசு தேர்தல் நடத்திய சாதனையை முழங்கும் அதே வேளை தமக்கு ஆதரவாக பெருந்தொகையான மக்கள் வாக்களித்தனர் . எனவும் எனவே தமக்குத் தான் வட மாகாண மக்கள் ஆதரவாக உள்ளனர் எனவும் திட்டமிட்ட பிரச்சாரம் செய்யவுமே இந்த தேர்தல் நடாத்தப்படுகின்றது .என்பதைக் குறிப்பிட ஏன் மறந்தீர்களோ தெரியவில்லை
வேண்டுமானால் இருந்து பாருங்கள் நான் பந்தயம் பிடிக்கின்றேன் .
சிறீலங்கா அரசு இதைச் செய்யுமா இல்லையா என்று ,
இது நடக்கவேண்டுமா?
இதை நாம் தடுக்க வேண்டாமா ?
பின் வரும் காரணிகளால் தமது வெற்றியை உறுதி செய்ய சிறீலங்கா அரசு முயல்கின்றது .
1) குடியேற்றப்படும்/குடியேற்றப்பட்ட சிங்களவரின் வாக்குகள் .
2) தமிழ் மக்களை அச்சமடைய வைத்து பெறும் வாக்குகள் .
3) ஆசை காட்டி மோசம் பண்ணி பெறும் வாக்குகள் .
4) பகிஸ்கரிப்பால் தமது வெற்றி வீதத்தை அதிகரித்தல் .
rest of it @
http://tmwtmw.blogspot.co.uk/2013/08/blog-post_14.html
சொல்லும் பார்ப்பொம் அதன் பின் நீர் எனக்கு எதிரியா நண்பனா என முடிவு செய்வோம்.
இது வரை நீர் என் எதிரிதான் .