Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மீண்டும் மகிந்த ராஜபக்ச களத்தில்

இனியொரு... by இனியொரு...
01/12/2015
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

Mahinda-Rajapaksaஇலங்கையில் மீண்டும் அரசியல் குத்துவெட்டுக்கள் ஆரம்பித்துள்ளன. ராஜபக்ச சர்வாதிகாரத்திலிருந்து மைத்திரி-ரனில் குழுவால் முழுமையாக விடுபட இயலவில்லை. தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் ராஜபக்சவிற்கு சிங்கள பௌத்த பேரினவாதிகளின் ஆதரவு காணப்படுகிறது. இந்த நிலையில் ராஜபக்ச தனது புதிய அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். முதலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே என ராஜபக்ச கூறியுள்ளார்.

கட்சியின் மத்திய குழுவில் ராஜபக்சவிற்கே அதிகபடியான ஆதரவு காணப்படுகின்றது. அதனால் கட்சியின் மத்திய குழுவிற்கே தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு.

கட்சியின் யாப்பின் அடிப்படையில் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படும் ஒருவரே கட்சியின் தலைவாராவர் என்பதால் மைத்திரிபாலவே தலைவர் என அவரது அணியினர் வாதிடுகின்றனர்.

மைத்திரிபால சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடவில்லை என்பதால் அக்கட்சியிலிருந்து தெரிவான ஜனாதிபதியாக அவரை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதனால் அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மகிந்த அணி வாதிடுகிறது.

இதனால் சிறீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுற்றுள்ளது. பெரும்பான்மை மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக உள்ளது.

சட்டரீதியாகவும் பெரும்பான்மை அடிப்படையிலும் கட்சியின் தலைவராக மகிந்தவே நீடிக்கும் நிலை காணப்படுகிறது.

மேலும், பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவிற்கே அதிகபடியான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் ரனில் பிரதமர் என்ற முடிவு செல்லுபடியற்றது என மகிந்த ஆதரவுக் குழுக்கள் வாதிடுகின்றன.

மகிந்தவின் நண்பரான இலங்கையின் பிரதம நீதியரசர் மகிந்தவிற்கே ஆதரவான உள்ள நிலையில் சிக்கல்கள் மேலும் அதிகமாகியுள்ளன.

மகிந்தவின் நண்பரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னை நாள் பிரபல நடிகை மாலினி பொன்சேகாவைப் பதவியிலிருந்து நீக்கி அவரின் இடத்திற்கு மகிந்த பாராளுமன்ற உறுப்பினராகிப் பிரதமராகும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மகிந்தவின் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வருகின்றன.

மகிந்த பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டால் அவரே பிரதமராகும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

அதே வேளை கோட்டாபய ராஜபக்சவையும் பாராளுமன்றத்தில் அனுமதிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன என்ற செய்திகள் வெளியாகின.

இராணுவம் மற்றும் உளவுத் துறை போன்றவற்றில் மகிந்தவிற்குக் கணிசமான செல்வாக்குக் காணப்படுவதால் பாராளுமன்றத்தை மீட்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இலங்கையின் அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவி விலகினாலோ அன்றி, மரணமடைந்தாலோ பிரதமரே ஜனாதிபதியாவார்.

இவ்வாறான சூழலில் உடனடியாக மகிந்தவை அரசியல் உரிமைகள் அற்றவராக்கும் முயற்சிகளில் மைத்திரிபால குழு ஈடுபட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான வேளையில் மகிந்த இராணுவச் சதிப்புரட்சி மேற்கொள்ள முயற்சித்தார் எனக் குற்றம்சுமத்தி அவரின் அரசியல் உரிமைகளைப் பறிப்பதற்கு மைத்திரி அணியினர் முயற்சிக்கின்றனர்.

அதே வேளை பிரதம நீதிபதியை தெரிந்தெடுத்த முறைமை தவறானது என்ற அடிப்படையில் அவரைப் பதவி நீக்கி முன்னை நாள் நீதிபதியான சிராணி பண்டாரநாயக்கவைப் பதவியில் அமர்த்தத் திட்டமிடுகின்றனர்.

ஆக, இலங்கையின் உள்ளூர் அரசியல் அதிகாரக் குத்துவெட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளன. அதேவேளை ராஜபக்ச அருவருப்பான இனவாதக் கருத்துக்களைச் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். தேர்தலில் தானே வெற்றிபெற்றதாகவும் மைத்திரியின் வெற்றி தமிழர்களின் வெற்றி எனவும், பிரபாகரனின் கனவை மைத்திரி நனவாக்க முயற்சிக்கிறார் எனவும் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். தான் வெற்றிபெற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.

தவிர, மகிந்த ஊழல்கள் இன்றித் தேர்தலை நடத்தினார் என்றும் ஆபத்துக்கள் இருந்தும் நியாயமாகப் பதவி விலகினார் என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Sri Lanka to investigate alleged coup attempt by former president

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 23 ] : T.சௌந்தர்

தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 23 ] : T.சௌந்தர்

Comments 4

  1. Alex Eravi says:
    11 years ago

    Vinayagamoorthy Muralitharan (Karuna) the Vice President of SLFP give his support to MS…

  2. S.T.Selvan says:
    11 years ago

    தேர்தல் காலங்களில்  இனியொரு மட்டும்  தான்  சரியான ஆய்வுகளையும்  தகவ்ல்களையும்  தந்த்த  ஒரே தமிழ்  இணையம்.  இலங்கையில்  உணர்சி வசமான  னிலையில்  செய்திகள்  தாறுமாறாக  வெளிவந்த்தன.  இனியொரு  ஆய்வுகளையும்  செய்திகளையும்  அறிய  உதவியது.  வாழ்த்துக்கள்.

    • Parai player says:
      11 years ago

      கோத்தபாயா தீவை விட்டு வெளியேறியது என்பது இனியொரு-உம் பரப்பிய ஆதாரமற்ற முக்கிய வதந்தி.
      கோத்தபயா அவசர அவசரமாக கைது செய்யப்பட வேண்டியவன். அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் எந்த நாடும் தட்டிக்கேட்கப்படவேண்டியது பெயர்க்குவிக்கப்பட்ட தமிழரின் கடமை.

  3. a voter says:
    11 years ago

    நான் சட்ட அறிஞன் அல்ல. ஆனால் கேள்விப்பட்டவை இவைதான்.
    1.  தேர்தலிற்கு முன் மைத்திரி கட்சியால் நீக்கப்பட்டார். ஆனால் அது (அவர் செயலாளராக இருப்பதால்) கட்சி மகாநாட்டால் அங்கீகரிக்கப்படவேண்டும். எனவே அதுவரை தான் உறுப்பினர் எனவும் அத்துடன் ஜனாதிபதியாகி விட்டதால் கட்சியும் தனதே என்பது மைத்திரியின் வாதம். இது நீதிமன்றத்தால் தான் தீர்க்கப்பட வேண்டியது. இந்த விடயம் உச்ச நீதிமன்றம் வரை போக வேண்டியதில்லை. மேல் நீதிமன்றமே தீர்ப்பளிக்கலாம்.
    மகிந்தவின் பெயர் தேசியப்பட்டியலில் இல்லை எனவும் அதனால் அவர் பாராளுமன்றம் வர முடியாது எனவும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.
    ஜனாதிபதி விலகினால் மரணமடைந்தால் அல்லது செயற்பட முடியாதவாறு நோய்வாய்ப்பட்டால் பாராளுமன்றம் கூடி ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் என்றும் நான் கேள்விப்பட்டேன்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...