கொரோனா இரண்டாம் அலைத் தொற்றின் வேகம் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் கடந்தசில தினங்களாக கொரோனா தொற்றின் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இரண்டாம் அலை தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மருத்துவமனை படுக்கை எண்ணிக்கைகளை அதிகரித்த போதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அரசுக்கு சங்கடத்தை உருவாக்கி உள்ளது. இதனால் முதல்வர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மூன்றாவது அலை காரணமாக கேரள அரசு வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல் படுத்தி விட்ட நிலையில் தமிழக அரசும் முன்கூட்டியே நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
இதனால் சென்னை திநகர் உட்பட மக்கள் அதிக அளவு கூடும் 9 சந்தைப் பகுதிகளை அரசு சீல் வைத்து விட்டது. தி.நகர் ரெங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, ஜாம்பஜார் மார்க்கெட் சாலை பகுதிகள், பாரிமுனை குறளகம், என்.எஸ்.சி. போஸ்சாலை பகுதிகள், ராயபுரம் மார்க்கெட், கல்மண்டபம் சாலை பகுதிகள், அமைந்தகரை மார்க்கெட் புல்லா அவென்யூ சாலை பகுதிகள், செங்குன்றம் மார்க்கெட் சாலை பகுதிகள் ஆகியவை மூடப்பட்டன.
இதனால் அதிருப்தியடைந்த வணிகர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய போதும் அரசு வருகிற 9-ஆம் தேதிவரை கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ளது.
அதிரடியான இந்த உத்தரவால் சென்னை திகரம் உட்பட பல இடங்கள் வெறிச்சோடின. கொரோனா தாக்கத்தின் பாதிப்பை கருத்தில் கொண்டு வரவிருக்கும் நாட்களில் ந் ஊரடங்கு தமிழகல் விரிவு படுத்தப்படலாம்.Attachments area