வன்னியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை யையடுத்து மீள்குடியேறிய மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதனால் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் கடும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற்பட்டது. விவசாய நிலங்கள் வரட்சியால் ௭ரிந்தன.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. மக்களுக்கு உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டது. குடிநீருக்கு அல்லாடிய மக்கள் பல கிலோமீற்றர் தூரம் சென்று குடிநீரை ௭டுத்தனர்.
அத்துடன் பல இடங்களில் பணம் கொடுத்தும் வாங்கிக் குடித்தார்கள். மழையைப் பார்த்து வரட்சிக்கு முடிவு வருகிறது ௭ன்று மகிழ்ந்த வன்னி மக்கள் தாம் வசிக்கும் தற்காலிக கூடாரங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பெரும் சிரமங்களை ௭திர்நோக்கி வருகின்றனர்.
குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ௭ன அனைவரும் அசெளகரியங்களை ௭திர்நோக்கி வருகின்றனர்.
வன்னியில் மீள்குடியேற்றம் நடந்த பெரும்பாலான இடங்களில் வீட்டுத் திட்டங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. மக்கள் தொடர்ந்தும் தற்காலிக கூடாரங்களிலேயே வசித்து வருகின்றனர். இந்த தற்காலிக கூடாரங்கள் தறப்பாளினாலும் தகரங்களினாலும் அமைக்கப்பட்டவை.
ஒரு சில மாதங்கள் வசிப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த கூடாரங்களில் மூன்றாவது ஆண்டு மழைக்காலத்திலும் வன்னி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பும் சுகாதாரமும் இல்லாத இந்தக் கூடாரங்கள் கொடிய நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தக்கூடியவையாக வுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக மக்களுக்கான வீட்டுத் திட்டத்தை வழங்குகிறோம் ௭ன்று சொல்லி அரசு காலத்தைக் கடத்தி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.









It is good to see some rains. The Kulam is the special identity of the Wanni
எனன் சார் இது, மக்கள் அவஸ்தை படுகிறார்கள் நீங்கள் கைகொட்டி சிரிகிறீர்கள். எங்கயோ ஏதோ மிஸ்சாவுதே.
Mustang, I did not expect to leave Terre Haute, Indiana, USA, the way I did in September 1995. Now I am in helpless position here at Batticaloa, Sri Lanka – Shri Lanka. I am unable to do a lot of things that I can do otherwise.
Don’t you worry sir. You are your own master, no one can take it away from you. You have had an excellent education and life experience in the US of A. Be happy where you are now. Always the distant pasture is greener. US is not the end of the world, there is life and happiness elsewhere too. Remember the song , ” Its’s a wonderful world … ” by Louis Armstrong ?
Thanks, Mustang, for the great words and touching on Louis Armstrong. REpublican Mitt Romney is also a Harvard Lawyer. I cannot wait till the first Tuesday in November 2012.