மியன்மார் அரசாங்கம், ஜனநாயக கட்சி தலைவரான அங் சான் சுகியை வீட்டுக்காவலிலேயே வைத்திருந்தது, எனினும் இலங்கை அரசாங்கம் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் வைத்து தண்டனை வழங்கியுள்ளது .
சரத் பொன்சேகாவை நேற்று வெலிக்கடை சிறைச்சாலையில் சென்று பார்வையிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜெயசூரிய இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்
சரத் பொன்சேகா உடல் நலக்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ளார், எனவே அரசாங்கம் புதுவருடத்திலாவது அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கரு ஜெயசூரிய கேட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒழித்த சரத் பொன்சேகா சிறையில் வருந்தும் அதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்கள் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக கரு ஜெயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மியான்மார் தேசிய இனப்பிரச்சனையைத் அடக்குவதற்கான இராணுவ ஒழுங்கமைப்புக்களை சரத் பொன்சேகா தலைமை வகித்த இலங்கை இராணுவத்தின் ஆலோசனையுடன் அவ்வரசு உருவாக்கி வருவதாக மியான்மார் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒன்றூக் கொன்றூ துண இருக்கும் உலக்த்திலே அன்பு ஒன்றூதான் அனைதையாய்…………..