Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை!

இனியொரு... by இனியொரு...
11/29/2011
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல் மூலம் ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது என லங்காநியூஸ் வெப் இணையம் செய்திவெளியிட்டுள்ளது, மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டவை:

கேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

2009 மே 18ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றினது தலைவராக கேணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த பின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகே கிடந்த கேணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் 8ம் நாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சான்று : “Colonel” Nagulan’s silent burial; LTTE’s sanctimony over offering final rights

ஆனால், கேணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம் கொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கேணல் நகுலனை 2009 பிற்பகுதியில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கேணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டார் என்று ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும், புலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது பற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே வைத்திருந்தது.

ஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கேணல் நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.

சிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், கேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை.

இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.

கேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்தத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பும் பேரூர்ந்துப் பயணமும்

Comments 1

  1. kandaswami.c says:
    14 years ago

    டமில் மக்கல் இப்பபடி ஷிட்ட்ரவதி ஷெஇஊம் மக்கலுக்கு ஆன்டவன் ஒரு பொடும் மன்னிக மாடார் இதர்கு கான்ன்டிப்பாக்க ஆனுபவப்பாஇகல நான்ட்ரி வனக்கம் டாமில் வால்க வலமுடன் டாமில்ல இலம் .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...