09.12.2008.
உலகின் இனஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய சாத்தியம் காணப்படும் நாடிகளின் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. |
இனஒடுக்குமுறைகள் குறித்து ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஐந்து வெவ்வேறு நிறுவனங்களின் அறிக்கைகளிலும் இலங்கையின் பெயர் முன்னிலை பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மொத்தமாக உலகின் 33 நாடுகளில் இனஒடுக்குமுறை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் மோசமான இனஒடுக்குமுறை இடம்பெறக் கூடிய நாடுகளின் வரிசையில் சூடான், கொங்கோ, மியன்மார், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் இலங்கை ஆகியன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இனஒடுக்குமுறை இடம்பெறும் நாடுகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பின் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதாரத் தடைகளோ அல்லது இராஜதந்திர அழுத்தங்களின் மூலமாகவோ மட்டும் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாதென ஐக்கிய நாடுகளின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. |