மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல.
ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து பல உயிர்கள் தியாகங்கள் செய்து, வீரகாவியம் படைத்து எம்மை விட்டு துறந்தும் இன்றும் எத்தனையோ பெற்றோருக்கு தம் பிள்ளைகளின் உயிர் அகன்ற உடல்களை பார்க்கவோ… அவர்களின் நினைவு கல்லறை பார்க்கவோ கிடைக்காமல் தம் துயரை தம்மினுள்ளே அமிழ்த்தி… துயரும் வேளை, புலம் பெயர்ந்த நாடுகளிலோ பரநாட்டியம் பயிலும் தம் பிள்ளைகளின் நடனத்தை மேடையேற்றி பார்ப்பதற்கும்… ஓர் மாவீரர் திருவிழா…!!!
தாயகத்தில் பாடசாலைக்கு சென்ற பிள்ளை வீடு திரும்பாமல் விடுதலை என்னும் பிள்ளை பிடித்த கூட்டத்தால் கூட்டிச்சென்று வயிற்றில் குண்டை கட்டி குற்றுயிராக்கப்பட்ட வேளை… புலம் பெயர்ந்த நாடுகளிலோ பாடசாலை செல்லும் பிள்ளைகளை தவறான வழியில் வழிநடத்தி வளரும் சமுதாயத்தை மரமண்டையக்குவதர்க்கு… ஓர் மாவீரர் திருவிழா…!!!
தாயகத்தில் தாம் பெற்ற பிள்ளைகளின் சம்பாத்தியத்தை காணாமல்… தம் புருஷர்களின் சம்பாத்தியத்தை காணாமல்… பிள்ளைகளின் தாய்மார்… கணவனை இழந்த விதவைகள் துன்பத்திலும்… துயரத்திலும்… பாதுகாப்பில்லாமல்… ஏழ்மையில்… ஏங்கித் தவிக்கும்போது… புலம் பெயர்ந்த நாடுகளிலோ BMW… INFINITI… LEXUS… ஓடுவதற்கும் பட்டாடைகள் உடுத்துவதற்கும் மாவீரர் பெயரால் விழாவெடுத்து வருவாய் தேட… ஓர் மாவீரர் திருவிழா…!!!
மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல…!!!
புலம் பெயர் நாடுகளில் மாண்ட பினாமி வீரர்களே… 2008 மட்டும் மாவீரர் கணக்கு சொல்லி மாவீரர் திருவிழா எடுத்தவர்களே… 2009 இலிருந்து கணக்கு எங்கே…???
நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்டவர்களை மாவீரர்களாக்கிய… நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட குடும்பங்களை மாவீர குடும்பம் என்ற நாமத்தில் அழித்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
தன்னை மகா மாவீரனாக்காமல் தப்புவதற்கு நாற்பதினாயிரத்திர்க்கு மேற்ப்பட்ட அப்பாவி குழந்தை… கர்ப்பிணித் தாய்மார்கள்… முதியோர்…என்று கிளிநொச்சி தொடக்கம் முள்ளிவாய்க்கால் மட்டும் நாலாம் கட்ட போர் என்று பலி கொடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
தன்னை சூரிய தேவனாக காட்டுவதற்கு பற்குணம், மைக்கேல் தொடக்கம் தோழர் சுபத்திரன், பாறுக் தோழர் வரை நாலாயிரத்திற்கு மேற்பட்ட மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த தோழர்கள் மட்டுமல்லாமல்… சகோதரி ரஜனி தினரகம, செல்வி தொடக்கம் சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வரை எமது தாய் நாட்டின் தாய்க் குலத்தை பலி எடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
மண்ணை மீட்கும் போர்… தாயக விடுதலைக்கான போர் என்று தன்னை தானைத் தலைவனாக நிலை நிறுத்தி… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்தவர்களின் நாமத்தால் மாவீர் உரை என்று ஓர் உரை வாசிக்கும்… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
நாலு பேர் என்று தொடக்கி… நாற்பது பேராக பண்ணையில் பயிற்சியெடுத்து… நாலாயிரம் பேராக அந்நிய மண்ணில் பயிற்சியெடுத்து… நாற்பதினாயிரம் பேரை மாவீரராக்கி… மேலும் நாற்பதினாயிரம் பேரை நாற்பது நாட்களில்… தான் சயனைட் விழுங்காமல் தன் உயிரை காப்பற்றுவதற்க்காக பலி கொடுத்து… நாலு இலட்சம் பேரை தம் மண்ணிலேயே உடுத்த உடைகளுடன் முள்ளுக்கம்பிகளுக்குள் அகதிகளாக்கி… எண்ணிலடங்காத ஆயிரக்கானவர்களை அங்கவீனர்களாகி… குழந்தைகளை அனாதைகளாக்கி… தாய்மாரை விதைவைகளாக்கி… தன் குடும்பத்தையே… தன் குடும்பத்தின் மனைவி பிள்ளைகள் நாலு பேரையும் காப்பாற்றமுடியாமல்… பலி கொடுத்த… மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…??? மகா மாவீர புருஷனிற்கு மாவீர் பட்டம் எங்கே…???
மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த தோழர்கள்… தியாகிகளாகட்டும்… வீர மக்களாகட்டும்… எழிமைக்கும்… உறுதிக்கும் இலக்கணமாக இருந்து அரசு இராணுவ இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழர் கனகுலசிங்கம் தொடக்கம்… வீர வணக்க பட்டியலிடாமல் இன்றும் காந்தியம், வங்கம் தந்த பாடம் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் சந்ததியார் மட்டுமல்லாமல்… இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட டாக்டர் இராஜசுந்தரம், அரபாத்… என்று முகம் தெரியாமல் மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த… பட்டியல்களில் அடங்காத அனைவரும் தியாகிகளே…! வீரமறவர்களே…!! மாவீரர்களே…!!!
என்று எம்மண்ணில் மரணித்தவர்கள் அனைவருக்கும் ஒருமித்து பாகுபாடில்லாமல் நினைவுகூறுகிறோமோ, அன்றுதான் எம்மை ஓர் இனம் என்று இலங்கை அரசு தொடக்கம்… உலக இன மக்கள் வரை அங்கீகரிப்பார்கள்…!!!
மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…!!!
உங்களால்… உங்களின் தீர்க்கதரிசனமில்லாத போராட்டத்தால்… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த/ தங்களால் படுகொலை செய்யப்பட்ட சக போராளிகளை… அரசியல்வாதிகளை… நினைவுகூர பக்குவப்படுங்கள்…!!!
மாவீரர் திருவிழா நடாத்தும் மாவீர மானிடர்களே…!!!
உங்களால்… உங்களின் தீர்க்கதரிசனமில்லாத போராட்டத்தால்… மண்ணுக்காகவும்… மக்களுக்காகவும்… தம்மை அர்ப்பணித்த மாவீரர் குடும்பங்களிற்கு உதவிகளை செய்யுங்கள்…!!!
இனியொரு விதிசெய்வோம்…! என்று இனியும் நீங்கள் திருந்தாவிடில், நீங்கள் மானிடர்களே அல்ல…!! திருந்துங்கள்…!!!
மாவீரர்களை விற்காதீர்கள்…!
விற்பனர்களே…!! மாவீரர்களை விற்காதீர்கள்…!!!
பலர் தேவையில்லை,அலெக்ஸ் ரவி அவர்களே!நீவிர் ஒருவரே போதும்!!!!!!!மகிந்தர் வீணாக முரளிதரன் முதல் சங்கரியார் வரை புல்லுக் கொடுத்து வளர்க்கிறார்!!!!!!!!!!
நீங்கள் உண்மையை எழுதினால் வியாபாரிகளுக்கு சட்டென கோபம் வருமென தெரியாதா?
இரவி!
மாவீரர் நாளை கொண்டாடுவது தவறா? அல்லது உங்களுக்கு பிடிச்ச ஆட்களையும் சேர்த்துக் கொண்டாடினால் சரியா?
புலி பிழை,அதற்குப் பின்னால் வந்த புளொட் சரியென நினத்தபடி எழுதும் வரைதல்கள்தான்,என்ன கல்வெட்டுகளா?
முதலில் மதவழிச் சிந்தனைகளான நினைவு கூரல்கள்,சாதியமைப்பின் தொடர் கூறான “இயக்கம் பெரிசு,சிறிசு” சிந்தனைகள் முதலில் அழிய வேண்டும்.
வென்றவனுக்கும்,போராடுபவனுக்கும் மாவீரர் நினைவு வேணும்;மற்றவர்களுக்கல்ல,
வென்றவனுக்கும் போராடுபவனுக்கும் மாவீரர் நினைவு வேணும்; மற்றவர்களுக்கல்ல-விளங்காமுடி. இதில் யார் வென்றது? யார் போராடுபவன்? அதை முதலில் சொல்லுங்கள்
ஏன் நீங்களே 16 மே 2009 இற்கு பின்பு மரணித்த எவருக்கும் மரியாதை செலுத்துவதில்லை. அவர்கள் எதிரியிடம் மண்டியிட்ட துரோகிகள் என்பதாலா?
வென்றவனுக்கும் போராடுபவனுக்கும் மாவீரர் நினைவு வேணும்;மற்றவர்களுக்கல்ல ஆம் நிட்சயமாக மனிதாபிமானம் அற்ற கொலைகாறர்களுக்கு அல்ல.
Those who don’t learn from their past are condemned to repeat their mistakes.
இதோ..கலியுக-நக்கீரன் கோவப்பட்டு சொல்லிட்டார், இனி அவெர் சொல்லுறது எல்லாம் ” திருவாசகம்”,நாம் சொன்னால் அது “வெறும்வாசகம்”. ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, மனிசனைக்கடிச்ச கதையாய்…போராளிகளைக் குறைசொல்லி, தலைவரைக் குறைசொல்லி,ஒட்டுமொத்தப் போராட்டத்தையும் குறை சொல்லிக் கடைசியில எங்கள் காவல்தெய்வங்களாம் மாவீரர்கள் தினத்தையும் விட்டு வைக்கிறார்கள் இல்லை. சும்மாவா சொன்னார்கள் ” கழுதைகளுக்கு தெரியுமா கற்பூரவாசனை என்று”: இதுனாள் வரை சிங்கள எஜமானர்களின் வேட்டிக்குபின்னால் ஒளிந்துவிட்ட இவெர்களின் வீரப்பிரதாபச் செயல்களைப் பாத்தால் எமக்கு வைகைப்புயல் வடிவேலின் “நான் ரவுடிடா , டேய் நம்புங்கடா” என்ற காமெடிதான்நினைவுக்கு வருகிறது.
வேட்டிக்குப்பின்னால் அல்ல : வெள்ளைச் சாறத்துக்குப் பின்னால் என்று
சொல்லுங்கள் – அதுதான் சரி!
போராடி இறந்தவர்களுக்கு மாவீரர் தினம் கொண்டாடுகிறார்கள். ஆனால் எந்த அமைப்பில் இருந்தாலும் விடுதலையை முன்னெடுத்தவர்களை நீங்கள் அவமானப்படுத்தும்போது எப்படி நீங்கள் மதிப்பவர்களை மற்றவர்கள் ஏற்றுகொள்வர்.
ஏன் நீங்களே 16 மே 2009 இற்கு பின்பு மரணித்த எவருக்கும் மரியாதை செலுத்துவதில்லை. அவர்கள் எதிரியிடம் மண்டியிட்ட துரோகிகள் என்பதாலா?
இரவி சொன்னது கேள்வியாக கேட்டுஇருப்பது எல்லாம் சரி.
மாவீரர்களை மதிப்போம் ஆனால் மாவீரர் ஆக்கியவர்களையும் அப்படி வணங்க வேண்டும் என்பதில் நியாயம் இல்லை!
நினைவு நாட்கள் என்பது சமூக மேற்கட்டுமானங்களில் ஒன்று. அனைத்து இயக்கங்களுமே போராட்டங்களில் உயிர்நீத்த போராளிகளுக்கான அஞ்சலிகளை, நினைவுகளை வெகு சிறப்பாகவே கொண்டாடி வந்தனர். இதன்மூலம் போராட்டத்தில் இணைகின்ற ஒவ்வொரு போராளியும் மரணத்தின் பின்னரும் தங்களது நினைவுகள் தொடரும் என்பதையும் தங்களது சமூக மதிப்பையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதனால் அவர்கள் தங்களது உயிர்கள் மிக உன்னதமான நோக்கத்திற்காக இழக்கப்படுவதை பெருமையாகவும் கருதினர்.
உயிரிழந்த போராளிகளின் பட்டியல் மிக நிளமானது. ஆனால் துரதிஸ்டவசமாக இந்த இயக்கங்களிடமே தங்கள் அமைப்பில் இருந்து கொல்லப்பட்ட போராளிகளின் விபரங்கள் முழுமையாக இருக்கவில்லை. விடுதலைப் போராட்டம் ஒரு உன்னத நோக்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போதும் அது ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே தடம்புரண்டது. போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள், உன்னத நோக்கத்திற்காக தங்கள் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருந்தனர்.
ஒவ்வொரு இயக்கத்தில் இருந்தும் உன்னத நோக்கங்களுக்காகச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர்.
ஆனால் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப் போராட்டத்தின் எதிரியாகக் கருதப்பட்ட, இலங்கை அரச படைகளினால் கொல்லப்படவில்லை. கணிசமானவர்கள் தங்கள் இயக்கங்களில் இடம்பெற்ற உட்படுகொலைகளிலும், இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதல்களிலும் கொல்லப்பட்டனர். அதனை விட இவ்வியக்கங்கள் தமிழ் மக்கள் மீதும், சகோதர மக்கள் மீதும் படுகொலைத் தாக்குதலை நிகழ்த்தி உள்ளனர்.
அதனால் போராட்டத்தின் நினைவுகூரல் என்பது போராளிகளின் நினைவுகூரலாக மட்டுமல்லாமல் இந்தப் போராட்டத்தில் உயிரிழந்த அனைவரினதும் நினைவாகக் கொல்லப்பட வேண்டும். விடுதலைப் போராட்டத்திற்காகச் சென்ற போராளிகள், அவர்கள் எந்த விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நினைவுகூரப்பட வேண்டும்.
மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டியவர்கள் என்பதில் யாரும் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. தலைமைகள் தவறான அரசியலை முன்னெடுத்ததற்காக, உன்னத லட்சிம் ஒன்றிற்காகப் போராடுவதாக எண்ணி, தம் இன்னுயிரை ஈர்ந்தவர்களை உதாசீனம் செய்வது மிகத் தவறு. ஆனால் அவர்களை எவ்வாறு நினைவுகூருகிறோம் என்பது மிகவும் முக்கியம். பல இலட்சக்கணக்கான செலவில் ஒரு பணச்சடங்காக மாவீரர் தினம் ஆக்கப்படுவது எந்த நோக்கத்திற்காக என்ற கேள்வி தவிர்க்க முடியாது.
அதேசமயம் மே 18 2009ல் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் பல நூறு ஆயிரம் போராளிகள் மரணத்தின் விளிம்புவரை சென்று தப்பியுள்ளனர்.
இவர்களில் பலநூறு ஆயிரம் பேர்கள் அங்கவீனர்களாக காயம் பட்டவர்களாக உறவுகளை இழந்தவர்களாக உள்ளனர். இவர்களைப் போராட்ட களத்திற்கு அனுப்பியதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு முக்கிய பங்கு இருந்தது. இன்று இவர்கள் அனாதரவாக யாருக்கு எதிராகப் போராடினார்களோ, அவர்களின் பாராமரிப்பிலும், அவர்களின் உதவியிலுமே முழுமையாகத் தங்கி இருக்க வேண்டிய நிலையுள்ளது.
இவ்வாறான போராளிகளை இந்தப் போராட்டத்திற்குள் தள்ளிய, மேற்குநாடுகளில் வாழ்ந்த ஆதரவாளர்கள் சிலருக்கு மே 18 2009ல் ‘ஜக் பொட்’ – லொட்ரி விழ்ந்தது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதியான ஆண்டு வருமானமும் 50 பில்லியன் வரை பெறுமதியான சொத்துக்களும் இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. லொட்ரியில் வென்றவர்கள் தங்கள் தங்கள் தொகையைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் கோட்டை விட்ட பலரும் உள்ளனர்.
‘தலைவர்’ கேட்டுக் கொண்டதற்காக, திருப்பித் தருவார்கள் என்ற நம்பிக்கையில், தங்கள் வீடுகளை வைத்து கடன்பெற்று (லோன் அல்லது ரீமோட்கேஜ்) வசூல் ராஜாக்களிடம் பணம்கொடுத்த பலருக்கு நாமம் போடப்பட்டு உள்ளது. மே 18க்கு சில தினங்களுக்கு முன்னாகக் கூட பல ஆயிரம் பவுண்களை, இந்த வசூல் ராஜாக்களிடம் வழங்கியவர்கள் உள்ளனர்.
இது இப்படியிருக்க மீண்டும் வசூல் ராஜாக்கள் நிதி சேகரிப்பிற்குப் புறப்பட்டு உள்ளனர். தற்போது மாவீரர் தினத்துக்கான நிதி சேகரிப்பு. தாயகத்தில் அரச படைகள் மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகளை பெயர்த்தெடுத்தனர். ஆனால் புலம்பெயர் உறவுகளோ மே 18 2009 வரை தொப்புள்கொடி உறவென்றனர் ஆனால் இப்போது அந்த உறவுகளின் உணர்வுகளையும் பெயர்த்தெறிகின்றனர்.
நன்றி! டீவடை