யாழப்பாணத்தின் காரைநகர் பகுதியினில் மாவீரர் தின நிகழ்வுகள் முடியும் வரை ஆலயங்களில் மணி ஒலிக்கவோ தீப ஆராதனை செய்யவோ படைத்தரப்பு தடைவிதித்துள்ளது. ஆலய குருமார் முகாமிற்கு அழைக்கப்பட்டு இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தினம் வியாபாரச் சச்சரவுகளுக்குள் உட்படுத்தப்பட்ட நிலையில் இலங்கை ராஜபக்ச பாசிச அரசு வரலாற்று நிகழ்வுகளை அழிக்கும் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் இராணுவத்தினரின் மாவீரர் தின நெருக்குவாரங்கள் தொடர்கின்றது. மக்கள் கூட்டமாக நிற்கவோ மற்றும் பொது நிகழ்வுகள் நடாத்துவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நிகழ்வு ஒடுக்கு முறைக்கு எதிரான எழுச்சி நிகழ்வாக, பாசிச அரசிற்கு எதிராகப் போராடி மரணித்துபோன அனைத்துப் போராளிகளும் விதைக்கபட்ட நாளாக, வியாபாரிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு தொடரப்பட வேண்டும் என்பதை இனப்படுகொலை அரசு மக்களுக்குக் கற்பிக்கிறது.








இது ஒரு உன்மையான மாவீரர்கலின் தினம். தமிலர்கலிம்ன் உனர்வுனால்