சரியான திசை நோக்கித் திட்டமிடப்படாத நியாயமான போராட்டம் ஆயிரக் கணக்கான உணர்வுமிக்க போராளிகளை மண்ணோடு மண்ணாக்கியிருக்கிறது; ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரச பயங்கர வாதத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள்; ஊனமுற்ற, அங்கவீனர்களின் சமூகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது; சிறைவைக்கப்பட்ட மக்கள் போக அனைத்துத் தமிழ் பேசும் சிறுபான்மையினரும் இலங்கை எங்கும் ஆயுத முனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சரத் பொன்சேகா என்ற போர்க்குற்றவாளியை அரசியல் சின்னமாக முன்னிறுத்தி தமிழ்ப் பேசும் மக்கள் குறித்துப் பேச முனைகின்ற ஜே.வி.பி யும் , 50 ஆயிரம் மக்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்றொழித்த மகிந்த ராஜபக்ச அரசும் இன்னும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் குறித்துப் கொண்டிருக்க உலகமெல்லாம் மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இத்தனைக்கும் புலிகளின் புலம்பெயர் தலைமை எந்தத் தார்மீகப் பொறுப்பும், குற்றவுணர்வும் இல்லாதது போல் கம்பீரமாய் மேடை போட்டுப் பாட்டுப்பாடி இன்னொரு தீபாவழி போல்,27ம் திகதி நவம்பர் அன்று மாவீரர் தினம் கொண்டாட அததனை ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கிறது.
இலங்கையில் நிறுவன மயப்பட்ட சிங்களப் பெருந்தேசிய வாதம் என்பது அதன் உச்சநிலை அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கெல்லாம் துணை போகின்ற அரச துணைக் குழுக்கள், அதன் புலம் பெயர் அங்கங்கள், அவற்றின் சித்தந்தக் கூறுகள், அரச சார் தன்னார்வ நிறுவனங்கள், இந்திய மேலாத்திக்க அடக்குமுறை அனைத்துமே இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமிலாதவாறு உணர்த்தி நிற்கிறது.
புலிகளின் தோல்வியிலிருந்தும், போராட்டங்களின் தோல்வியிலிருந்தும் அனுபவங்களைப் பெற்றுக்கொண்ட ஆயிரமாயிரம் தமிழ்பேசும் மக்கள் இலங்கையிலும் உலகம் முழுவதும் பரந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டில் தமிழர்கள் அதிகார வர்க்கத்தின் அரசியல் நலன்களுக்கும் மக்கள் நலன்களுக்கும் இடையேயான வேறுபாட்டை இனம் காண ஆரம்பித்துள்ளார்கள்.
ஈழப் போராட்டத்தின் தோல்வி என்பது இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு பிரச்சனைகளின் புதிய நிலைகளிற்கும் உரைகல்.
ஆயினும், பெருந்தேசிய ஒடுக்குமுறாக்கெதிரான தமிழ் பேசும் மக்களின் 60 ஆண்டுகள் நீண்ட வரலாற்றைக் கொண்ட போராட்டம் புலம்ம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரை இன்னும் புலிகளின் சிந்தனை முறையின் வரம்புகளுக்குள் தான் தேங்கியிருக்கின்றது என்பதை மாவீரர்தின ஏற்பாடுகளும் அதன் உணர்ச்சி அரசியலும் வெளிப்படுத்துகின்றன. அதிர்ச்சியளிக்கும் பெரும் பணச்செலவும், பணச் சேகரிப்பும், உணர்ச்சி அரசியலும் புலிகளின் புலம் பெயர் ஆதரவுத் தலைமை இன்னமும் மக்களின் உணர்வுகளை தமது சுயலாப நோக்கங்களிற்காகப் பயன்படுத்துகின்ற அவல நிலையே காணப்படுவதை உணர்த்தி நிற்கிறது.
ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களின் பக்கத்திலும், ஒடுக்கப்படுகின்ற மக்கள் கூட்டங்களின் சார்பிலும் தான் அதிக வலிமையும் பலமும் அமைந்திருக்கிறது. இலங்கையில் மட்டுமல்ல, மொத்த உலகத்திலும் அவர்கள் தான் பெரும்பான்மை. இந்தப் பெரும்பான்மைக்கு எதிரான சிறுபான்மை ஒடுக்கும் அரச பயங்கரவாதம் ஒவ்வொரு நிமிடமும் அடக்குமுறைக்கான வியூகங்களை வகுத்துக்கொண்டிருக்கிறது.
புலிகள் என்ற எல்லைகளைக் கடந்து மரணித்துப்போன அனைத்து மக்களதும் போராளிகளதும் எழுச்சி நாளாக ஒரு நாள் பிரகடனப்ப்படுத்தப்பட வேண்டும். அந்த நாளில் பாலஸ்தீன மக்கள் அழிக்கப்படும் போது தெருவிற்கு வந்து போராடிய ஐரோப்பிய மக்களும், உலகெங்கும் பரந்து வாழும் மனிதாபிமானிகளும் எங்களோடு கைகோர்த்துக் கொள்வர். அந்த நாளில், ஒடுக்கப்பட்ட தேசிய இனமான எமது போராட்டம் உலகத்திற்கு உணர்வுபூர்வமாக அறிவிக்கப்படும்.
தேய்ந்த தமிழா இன்னமும் திருந்த மாட்டாயா???????
இதை எழுதிக் கொண்டிருக்கிற போது போட்டிபோட்டுக்கொண்டு வானொலிகளும் தொலைக்காட்சிகளும் மாவீரர்நாள் நடக்குமிடங்களை பலத்தகுரலில் ஒரு வெற்றிவிழாவிற்கு அழைப்பு விடுமாப்போல அறிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக்குழுவின் மாவீரர் நாள், இந்தக்குழுவின் மாவீரர் நாள் என்று மூலைக்கு மூலை தெருவிற்குத் தெரு முழங்குகிற இவ் அழைப்பில் எதில் பங்குபற்றுவது என உண்மையாய் தேசத்திற்காய் உறவைப் பறிகொடுத்த தமிழுறவுகள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.. புதிய உத்திகளில் பெரும்பணச்செலவில் இந்தியாவின் பிரபலங்களைவிட்டுப் பாடிய புதிய கீதங்கள் மாவீரர் நாளிற்காக இசைக்கப்படுகின்றன. ஒரு குழுவின் பாடலை நாம் பாட மாட்டோம் என ஆளுக்காள் வித்தியாசமான பாடல்களோடு பாடலிசைக்கின்றார்கள். பத்திரிகையடிக்கின்றார்கள் பல்லான பல நிகழ்வுகளிற்காக மேடை போடுகின்றார்கள். அடா இத்தனை இழப்புகளின் பின்னும், இத்தனை இழவுகளின் பின்னும் எரிகிற வீட்டில் பிடுங்கி எடுப்பது தான் நியாயம் என மாவீரர்களின் விபரங்களைத் திரட்டி அவர்களின் உறவுகளிடையே இறந்தவர்களின் அனுதாப அலைகளிலே பணத்தைத் திரட்டி சொகுசுவாழ்வில் திளைத்துப் பிழைக்கின்ற இந்த தேசாபிமானிகளை இன்னமும் எத்தனை காலத்திற்கு இவர்கள் நம்பிக் கொண்டிருப்பார்கள்.உண்மையில் நாட்டுக்கரிசனையில் இறந்து போன அந்த நல்ல உள்ளங்கள் போற்றப்பட வேண்டியன என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்களின் மரண வீட்டை தங்களின் சுகபோக வாழ்வுச் சொர்க்கமாக மாற்றமுயல்கிற இந்த வியாபாரப்புல்லுருவிகளை இனங்காண இன்னமும் இவர்களால் முடியவில்லையா????????புலிகள் என்ற எல்லைகளைக் கடந்து மரணித்துப்போன அனைத்து மக்களதும் போராளிகளதும் எழுச்சி நாளாக ஒரு நாள் பிரகடனப் படுத்தப்பட வேண்டும். அந்த நாளில் உலகெங்கும் பரந்து வாழும் ஒடுக்கபடுவோரும்,மனிதாபிமானிகளும் கைகோர்த்துக் கொள்வர் என்கின்ற நாவலனின் கருத்து இங்கு கூர்ந்து நோக்கப்படவேண்டியதொன்றாகும்.
போராட்டம் என்பது நவீன துப்பாகிகளும் குண்டுகள் விமானங்கள் கப்பல்களுடன் உள்ளக்
கப்படுவதில்லை.வேறுயொரு இனத்திற்கோ மற்ற உயிர்களுக்கு பங்கமேற்படாமல் ஒன்று
இணைந்த கோரிக்கைகளால் நிறைவேற்றப் படும் போதுமட்டும் தான் அது போராட்டமாக
உலகில் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்கு நல்ல உதாரணங்கள். மகாத்மா காந்தி.நெல்சன் மண்டேலா இன்னும் பலரைக் குறிப்பிடமுடியும்.
ஆகவே ஆயுதம் என்பது வன்முறைக்கே வழிவகுக்கிறது.இதை தமிழ்மக்கள் பல அழிவுகளையும் இழப்புகளையும் கொடுத்து தான் கற்றுக் கொள்ளுகிறோம் என்பதும் கற்றுக் கொண்டோமா? என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.
விடுதலையை தேட புறப்பட்ட ஆயுதயியக்கம் ஆயுதம் இல்லாதவர்களையும் போட்டு தள்ளினார்கள்.அறிவாளிகள் ஆசிரியர்மார்கள் பேராசியர் ஏன்? ஐயர்மார்களும் தப்ப முடியவில்லை.
தமிழினம் முதல் மனிதஉயிர்களுக்கு மதிப்புக் கொடுக்க கற்றுக் கொள்ளவேண்டும்.மனித உயிரை மிஞ்சித்தான் பிறகு வருவது உரிமை இனம் மதம் போராட்டம்.முப்பது வருடங்கள் எமது பொன்முலாம் பூசிய கைகளை ஓடுகிற தண்ணீரில்கழுவிக் கரைய விட்டோம்.ஒழுக்கம் கட்டுப்பாடு மனிதஉயிர்களை மதிக்கிற
உயர்ந்த இலட்சியம் இவையே எந்த இனத்தையும் மேல்நிலைப்படுத்தும்.
விபச்சாரியையும் பிச்சைக்காரயும் மதகுருக்களையும் கொல்வதற்கு அனுமதியளிக்கிற இனமும் ஆமோதிக்கிற இனமும் ஒருபோதும் உருப்படப்போவதில்லை.லட்சக் கணக்காணவர்கள் பிரபல நகரங்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவர்களின் கண்ணீர்கள் இந்த ஊர்வலங்களை கலைத்து இருந்த இடம் இல்லாமல் செய்து விடும்.
இதுவே தமிழினம் கண்டு கொண்ட காட்சி.
இனத்திற்கெதிராக இனத்தை நிறுத்துவதும் வெறுப்பைக் கக்குவதும் முதாலித்துவ-அரசியல்வாதிகளின் செயல்பாடு.இனத்தின் அமைதி வாழ்வைவிட தம்முடைய வாழ்வே
இவர்களுக்கு முக்கியமானது.இதுவே இதுவரைகாலமும் இலங்கையில் கண்டோம்.
சிலவேளைகளில் இனியும் காண நேரிடலாம்.அரசியலை விழித்துப் பார்ப்பதைவிட வேறு வழியேதும் இல்லை.
தங்கள் கருத்துடன் இணைவான சிந்தனை கொண்டோரே இன்று பரவலாகக் காணப்படுகின்றனர். தமிழுக்காக> தமிழர்களுக்கதகப் போராடி வீரகாவியமாகிய போராளிகள்> தமிழர்கள் என்பதற்காகப் பேரினவாத அடக்குமுறைகளுக்குப் பலியான தமிழர்கள் அனைவருக்குமாக ஒரேநாளில் வணக்கம் செலுத்தப்பட வேண்டும். அது மாவீரர் நாளிலோ அல்லது அனைத்துப் போராளிகளுக்கும் மூத்தவரான சிவகுமாரன் மறைந்த நாளிலோ அல்லது வேறொரு நாளிலோ அமையலாம். இரண்டு மாவீரர்நாள் கொண்டாடினால் கூட ஆச்சரியப்பட முடியாத இன்றைய சூழலில் இது சாத்தியமா? அறிவுபூர்வமாகச் சிந்திக்கப்பட வேண்டிய இன்றைய நாளில் உணர்வுபூர்வமாகவல்லவா சிலர் சிந்திக்கின்றனர்.
மூத்த பத்திரிகையாளர் சொன்னார் இந்தியாவை வீழ்த்த வேணூமாம் நான் கேட்டேன் இமயமலையை வீழ்த்த முடியுமா என்றூ.கடைசி யுத்தம் நடந்த காலத்தில் வெள்ளீ முள்ளவாய்க்காலில் இருந்து நடேசன் அறீக்கை விட்டதை அவர் பெருமையாகப் பேசும் போது இன்னும் அங்கேயே இருந்தால் எல்லோரும் ஒன்றாக போகப் போகிறார்களே என கவலைப்பட்டேன் அவரோ அவங்கள் ரொக்கட் விடுவாங்கள் என்றார்.அதே நேரம் அவர் வீட்டு ரேடியோவில் மாவீரர் பாடல் போய்க் கொண்டிருந்தது நான் சொன்னேன் இறந்து போன போராளீகளீல் யாரும் இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் இனியாவது விசர்க் கதை கதைத்து நாம் வீணாகப் போக வேண்டாம்.நாவலன் கட்டுரைக்கு நன்றீ.
இன்னொரு நாள் தேர்வுக்கு போவதைவிட இந்த நாளையே பொதுவாக எல்லா போராளிகளுக்கும் சேர்த்து மரியாதை செலுத்தலாம். எண்ணிக்கை அடிப்படையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மிக அதிகம் அத்துடன் பலகாலம் பலரால் அனுஷ்டிக்கப்பட்ட ஒரு தினத்தை மாற்றுவது நடைமுறை சாத்தியமில்லை. அப்படி மாற்றினாலும் மற்றையதும் கொண்டாடப்படும். ஆனால் தலைவனுக்கே மரியாதை செலுத்தாத புலம்பெயர் அதிகார மஃபியாவை மீறி மற்றைய போராளிகளுக்கு மரியாதை செலுத்திட முடியுமா?
மாற்றம் என்பதுவவே மாறாதது. பிற அனைத்தும் மாறுவன.
எனவே “புலிகள் என்ற எல்லைகளைக் கடந்து மரணித்துப்போன அனைத்து மக்களதும் போராளிகளதும் எழுச்சி நாளாக ஒரு நாள் பிரகடனப்ப்படுத்தப்பட வேண்டும்”. கோரிக்கையை முன்வைப்போம். அதிலிருந்து தொடர்ந்து செல்வோம்.
இறந்தவர்களை நினைவு கூரவும் இறப்புகக்ளால் தவிப்பவர்களுக்கு உதவமுமாக அந்நாளை பிரகடனம் செய்வோம். நாளையும்> அந்நாளை அனுஷ்டிக்கும் ஒரு முறைமையை இனங்கண்டு கொள்ள பரந்த ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கலாம். நிலைமைகளை வெற்றி கொள்ள இதுவே வழிகாட்டும்.
ஆரோக்கியமான ஒரு ஆலோசனை.
வென்றவனுக்கும்,போராடுபவனுக்குந்தான் நாளும் கிழமையும்.
மற்றவனுக்கு கிழித்தெறியும் நாட்காட்டி மட்டுமே.
“ஒடுக்கப்பட்ட
தேசிய இனம்” என்பது நாள்பட்டுப் போனதும்,நாறி நிற்பதுமான விடையம்.
தத்துவங்களை விட்டுட்டு,நாம் யார் பக்கம் என்பதில் மட்டுமே நம் எதிர்காலம் தங்கியுள்ளது.
சொல்லுங்கள் நாங்கள் எந்தப் பக்கம்?
ஆதிஷேஷனா? அல்லது ட்ராகனா?
“ஒன்று
இணைந்த கோரிக்கைகளால் நிறைவேற்றப் படும் போதுமட்டும் தான் அது போராட்டமாக
உலகில் அங்கீகரிக்கப்படுகிறது. இதற்கு நல்ல உதாரணங்கள். மகாத்மா காந்தி.நெல்சன் மண்டேலா இன்னும் பலரைக் குறிப்பிடமுடியும்”.
மகாத்மாகாந்தியாலா உலகப்போரின் விளைவாலா அந்த நிலமைகள் ஏற்பட்டது? நெல்சன்மண்டேலா தனது மக்களுக்கு என்னதான் செய்து விட்டார்? புலி எம்மை அழித்து விட்டது என்பதற்காக வரலாற்றுப் பொய்களை எழுதலாமா?
துப்பாக்கியை நிராகரிக்கும் சந்திரன்ராஜா அகிம்சையை வரவேற்கும் சந்திரன்ராஜா நீங்கள் எப்படி ஒரு மார்க்ஸிஸ்டாக இருக்க முடியும்? பிடல்காஸ்ரோவும் பொல்லாதவர்தான் போலும்.
ஃபிடல் காஸ்ரோ மார்க்ஸ்ட் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்.
பலாத்காரம்-பலாத்காரமாக என்பதை எப்படி விளங்கிக்கொண்டீர்கள்?.நான் ஒரு மாக்ஸிட்டாக என்னை அறிமுகப்படுத்தியோ எழுதியதாகவோ இதுவரை இல்லை. மனிதகுலம் ஈடேறவேண்டும்மென்றால் மாக்ஸியத்தை தவிர இனியொரு தத்துவம்
தோன்றியதும் இல்லை தோன்றபோவதும் இல்லை.இதை ஒவ்வொரு இடத்திலும் அறைந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதற்காகவே கூடியிருந்து விவாதிப்போம்.தொழிலாளர்கள் ஐக்கியப் படுவோம் என்று அழைப்புவிடுக்கிறேன். நிற்க…….
மார்க்ஸ்சும் எங்கல்ஸ் உடைய புகழ்பூத்த கம்யூனிஸ்கட்சி அறிக்கையில் பலாத்காரத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். வரலாற்றுரீதியில் நிலபிரபுவத்தை முதாலித்துவம் பலாத்காரமாகவே அப்புறப்படுத்தி அந்த இடத்தில் அமர்ந்து கொண்டது.முதாலித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாமல் பிரசவிக்கப் பட்டதே
நவீன உடமையில்லாத போர்குணமிக்க தொழிலாளவர்க்கம் எப்படி முதாலிது;தவம்
பலாக்காரமாக நிலப்பிரவுத்தை வீழ்தியதோ அதேபோல தொழிலாளவர்க்கம் முதாலித்துவத்தை பலாத்காரமாக வீழ்த்துவதும் தவிர்க்க முடியாதது. ஆகவே அந்த
மேதைகள் குறிப்பிட்டது போர்குணம்முள்ள தொழிலாளர்ஐக்கியத்தை தான். நீங்கள்
கருதுகிற கொலைக்கருவிகளை அல்ல.
தன்னை கொல்லவருகிற பசுவையும்கொல் என்று காந்தி சொன்னால் பலாத்காரகாரத்தையா? அகிம்ஸையையா? எடுக்கப் போகிறீர்கள்?? இதயம்.
“தன்னை கொல்ல வருகிற பசுவையும் கொல்” என்று காந்தி எங்கே எப்போது சொன்னார்?
“நம்பினால் நடராஜா நம்பாவிட்டால் உனக்கு ஜமன்தான் ராஜா” இப்படியும் எமது இனத்தில் ஒரு முதுமொழியிருக்கிறது முகமூடி அவர்களே!.
பின்னூட்டம் பத்தும் முத்துக்களே
சொல்லி விட்டீர்களல்லவா!
மேலே ஒரு முத்துக் கூட வராமல் இப்போது பார்த்துக் கொள்ளுவார்கள்.
//இலங்கையில் நிறுவன மயப்பட்ட சிங்களப் பெருந்தேசிய வாதம் என்பது அதன் உச்சநிலை அடக்கு முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதற்கெல்லாம் துணை போகின்ற அரச துணைக் குழுக்கள்இ அதன் புலம் பெயர் அங்கங்கள்இ அவற்றின் சித்தந்தக் கூறுகள்இ அரச சார் தன்னார்வ நிறுவனங்கள்இ இந்திய மேலாத்திக்க அடக்குமுறை அனைத்துமே இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும்இ வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமிலாதவாறு உணர்த்தி நிற்கிறது.// மிகவும் சரியான கருத்து.. ஆனால் நமது மக்கள் இன்னும் நமக்குள்ளேயே மோதிக் கொள்வதை விடவில்லையே.. தமிழ்-முஸ்லிம் என்றும் தமிழ்-சிங்களம் சிங்களம்-முஸ்லிம் என்றும் இன்றும் நமக்குள்ள ஆயிரம் பிரிவிவினைகள். இப்படியான நிலைமையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையில் நமக்கான உரிமைகளை வெனெறெடுப்பதது எங்கனம்? அதற்கான வழிமுறைகைளை இனியொரு போன்ற நடுநிலை ஊடகங்ள் தான் காட்ட வேண்டும். வகுத்துக் கொடுக்க வேண்டும்.
“அனைவரும் ஒன்றிணைவோம்” – அதிகாலை; காலை; மதியம்: பின்மதியம்: மாலை: பின்மாலை: முன்னிரவு:பின்னிரவு என்று … கனவுகண்டுகொண்டே இருங்கள் ஐயா!!
நாட்டு யதார்த்தம் புரியாமல்…
தன்னை கொல்லவருகிற பசுவையும்கொல் என்று காந்தி சொன்னால் பலாத்காரகாரத்தையா? அகிம்ஸையையா? எடுக்கப் போகிறீர்கள்??
எனக்கு இந்த வார்த்தை ஜாலங்களில் ஆர்வமோ நம்பிக்கையோ இல்லை.
முதலில் காந்தி சொன்னாரா என்று விசாரியுங்கள்.
ஆ-சாமி ஏற்கெனவே உருவெடுத்து ஆடுகிறார். கவனம்.
தர்மதாசா
விடுதலைப்போராட்டம் தோல்வியில் முடிந்தது என்று உரக்கக்கூறும் மன்னிக்கவும் எழுதும் உணர்வாளர்களே! இந்தத்தோல்வியில் நீங்களும் பங்கு தாரர் என்பதை மறந்து எழுதுகிறீர்களா? அல்லது மறைத்து எழுதுகிறீர்களா? முப்பது ஆண்டுகள் ….. ஒற்றுமைப்படுவோம் உரிமைகளை வென்றெடுப்போம் என்ற போதிலும் ஒன்று படவில்லை. துரையப்பாக்களும் அருளம்பலங்களும் தியாகராஜாக்களும் எனப் பலர் தோற்றம் பெற்றார்கள் என்பது தங்கள் எல்லோருக்கும் தெரிந்த செய்திதான். ஈழத்தமிழினத்துக்கு ஒரு விடியலைப் பெற்றுத்தரவல்லதாகவிருந்த உன்னதமான போராட்டம் தோற்கடிக்கப்பட்டதிலே பெருமிதமும் சந்தோசமும் அடைகின்ற பெருந்தகைகளே நீங்கள் உண்மையைப்பேசும் நாள் வெகு தொலைவில் இல்லை அதனையும் மகிந்த நிச்சயம் ஏற்படுத்தித்தருவார் அப்போதாவது நீங்கள் உணர்வு பெறுவீர்களா? பிரகடணப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கும் நாளில் அனைத்து சாவடைந்த போராளிகளையும் நினைவுகூர்ந்து மதிப்பளிப்போம் என்று சிந்திக்க மனது இடம் கொடுக்கவில்லையே? ஏ தமிழ் இனமே! ஈழத்தமிழினமே! உன் விடியல் பற்றி நீ எப்போ சிந்திக்கப்போகிறாய்?
துரையப்பாக்களும் அருளம்பலங்களும் தியாகராஜாக்களும் தமக்கான நிலைப்பாடுகளை கொண்டிருந்தார்கள். யாரையும் ஏமாற்ற முயலவில்லை
அமிர்தலிங்கங்கள் இளைஞர்கட்கு உசுப்பேற்றி விட்டு என்ன செய்தார்கள்?
தென்னிலங்கையில் சொத்துக்களை அப்படியே வைத்துக் கொண்டு செல்வநாயகங்கள் சமஷ்டியும் தமிழீழமும் கேட்டன.
SJV செல்வநாயகத்தின் மருமகன் ஜே.ஆர். தாசனாகவும் அமெரிக்க அடிவருடியாகவும் வாழ்ந்தார். “அரசியல் வரிசு” உரிமை கோரிய மகன் இந்திய முகவராக 25 வருடம் பணியாற்றி இப்போது வடக்குக்கு வந்திருக்கிறார்.
அந்தப் பாதாளமுண்ட அரசியலை விடுங்கள். எங்கள் வீர விடுதலைப் புலி நாயகர்கள் என்ன செய்கிறார்கள்? உள்ளே இருந்த “துரோகிகளின்” பட்டியல் வெளியே இருந்த அனைத்தையும் மிஞ்சி விட்டதே!
மக்களுக்காகவும் தாங்கள் நம்பிய கொள்கைக்காகவும் உயிர் கொடுத்த எவரும் மெச்சத் தக்கவரே.
. துரையப்பாக்களுக்கும் அருளம்பலங்களுக்கும் தியாகராஜாக்களுக்கும் துப்பாக்கியை பாவித்ததுதான் தோல்வியின் தொடக்கப்புள்ளி.
புரிகிறது எங்கே நிற்கிறீர்கள் என்பது. இனத்தின் விடுதலை சுதந்திரம் என்பது மலிவானது அல்ல, அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பது நீங்கள் இப்போதுதான் புரிந்து கொள்ளும் விடயம் என்று நான் நம்பத்தயாரில்லை. எல்லாம் தெரிந்தும் புரிந்தும் உண்மைக்காகப் பேசாமல் எழுதாமல் துரோகத்தனங்களுக்குத் துணைபோவதுதான் ஒட்டு மொத்த தமிழினத்தின் பின்னடைவுக்கான காரணமாக இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து இயங்குவதன் மூலமே விடிவைப்பெறமுடியும் என்பதுஎனது தாழ்மையான அபிப்பிராயம்.
ஐயா,
நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்று முதலில் புரிந்து கொள்வது நல்லது.
துரோகத்தனங்களைப் பற்றிப் பேசுவதானால் எல்லாத் துரோகத்தனங்களையும் பற்றிப் பேசுவோம்:
40,000 பேரை இழுத்த்க் கொண்டு போய்ப் பலியிடக் காரணமாயிருந்த புலம் பெயர் கூட்டம் ஒன்றைப் பற்றியும் உள்ளூர்த் தலைமை ஒன்றைப் பற்றியும் பேச வேண்டும்.
விடுதலையின் பேரால் பாதியை மூடி மீதியைப் பேச முடியாதல்லவா!
விடிவைத் தேடுவதனால் முழு உண்மையையும் பார்க்கக் கண்களைத் திறக்கவேண்டும்.
ஐயா,
ஓற்றைக் கண்ணை மூடிக் கொண்டு மற்றக் கண்ணால் பக்க வாட்டாகப் பார்த்துப் பாதையை அறிய முடியாதையா!
40000 பேர் பலியானதுக்கு புலியை மடடும் சொல்லாமல் – அரசுடன் சேர்ந்து இயங்கிய ஈ.பி. டி.பி. : புளொட்: ஈ.பி.ஆர். எல்.எவ்.: கருணா: மற்றும் அரச ஆதரவுக் கருத்துகளை முன்வைத்துப் பரப்புரைப் போர் செய்த ஆனந்தசங்கரி ஐயா போன்றோரையும் சேர்த்துச் சொல்லுங்கள்
‘கரம் மசாலா’ / இல்லாவிடின் உண்மையின் “காரம்” உறைக்காது!!!
ஒரு சிறங்கு அரிசி போட்டு ஒருபானை கஞ்சி காய்ச்சி
ஏங்கபெருமூச்சு விட்டு ஈழத்து ஏழைகள் பசியாறுகிறார்கள் என்றால்… அது புலிகள் துடைத்தெறியப் பட்டதால் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய ஏக்கபெருமூச்சுகள் ஏல்லாம் சிறகு முளைக்காதா. ..?வானத்தில் பறப்போமா? என்பது பற்றியே. அந்த ஏழைகளுக்கும் நாளையொரு உலகம் மலரும் பொன்யுலகம் தோன்றும்.அதனை நினைவில் வைத்து வன்முறைக்கு உருகொடுக்காதீர்கள். பசியாற கஞ்சி குடிக்க அனுமதி அளியுங்கள். பழைய புராணங்களை ஓதாதீர்கள்.
ஐயா! கஞ்சி வீரரே மாக்சிசத்தை எண்ணி மூச்சுவிட்டு லெனினிசத்தில் வாய்கொப்பளித்து வாழும் உஙகளைப்போன்ற அறிவாளிகள் மாக்சிசத்தின் மூலம் கற்றுக்கொண்டதுதான் என்ன? மக்கள் இன மொழி அடிப்படையில் கொன்றொழிக்கப்பட்டாலும், இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலும் அதனை பேசுவதை தவிர்த்து ஒரு பிடி அரிசியில் எவ்வாறு சுவையான கஞ்சி காய்ச்சுவது என்ற விவாதம் அவசியமென உணருகின்றீர்கள? வன்னியில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கே போராடவேண்டியிருக்கின்றது. இந்தவகை மாக்சிசத்தின் மூலம் கார்ல் மாக்ஸை தனது சமாதியில் மறுபக்கம் புரளவைக்கின்றீர்கள்.
வென்றால் புலிகள் மட்டும் தோற்றால் 25 வருடங்களின் முன் ஓரம்கட்டப்பட்டவரையும் இழுத்து வந்து சிரச்சேதம் செய்வீரோ?
“ஓரம்கட்டப்பட்டவர்கள்”ஆயுதங்க ளுடனும் கூலிப்பணத்துடனும் அரசுடன்தானே ஐயா நின்றார்கள்! :
மறந்துவிட்டீர்களா? மக்கள் மறக்கவில்லை இன்னும் !!
தத்துவங்கள் பொதுவானவை அவை ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. அவற்றை உள்வாங்கிக்கொள்வதும் செயற்படுவதிலுமிருந்துதான் அந்தத்தத்தவங்களின் மகிமை தெரியவரும்.புலிகள் என்ற அமைப்பு தனியாக 30 வருடங்கள் போராடியதே! இதனை நீங்கள் எத்தனை கண்கள் கொண்டு பார்த்தீர்கள்? உலகமே திரண்டு வந்து வஞ்சம் தீர்த்த செயலை அந்நியன் பக்கத்தில் நின்று வாதிட்டு அவனுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பதில் இவ்வளவு தூரம் குறியாக இருக்கிறீர்களே இது போதாதா தமிழினம் வெட்கித் தலைகுனிவதற்கு? நீங்கள் சொல்லியிருப்பதுதான் உங்கள் இரு கண்களையும் திறந்து உண்மைகளைப்பாருங்கள். அந்த உண்மைகளைப் பேசுங்கள். தமிழன் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறான். எனவே அவன் தலை நிமிர்வது எப்படி? வேளை வரும் போதெல்லாம் வேசம் கட்டத் தெரிந்தவனாகத் தமிழன் தரணியிலே பவனிவருகிறான். தனது ஆற்றலையும் அனுபவங்களையும் ஒருங்கமைத்து இனத்தின் விடுதலைக்காகச் செயற்பட முன்வருவதே உங்களைப்போன்ற அறிவாற்றலுடையோர் ஆற்றக்கூடிய பணி. நான் சொல்லி நீங்கள் எல்லாம் கேட்கவா போகிறீர்கள்?
புலிகள் 30 வருடங்களகத் தனியே போராட வேண்டி வந்தது ஏன்? வித்தியாசமாக யோசித்த அனைவரையும் எதிரிகளாக்கியதால் அல்லவா.
எல்லாரையும் எதிரிப் பக்கம் தள்ளி அல்லது ஒதுக்கி வைத்து “ஏகப் பிரதிநிதி” வேடம் போட்டதாலல்லவா இந்த அனர்த்தம்.
வன்னியிலும் புலிகளுக்குக் கீழ்ப்பட்ட பகுதிகளிலும் மக்கள் முன்னால் என்ன தெரிவு இருந்தது? இராணுவத்தை ஆதரிப்பதா?
மாற்று வழி ஒன்று இருந்திருந்தால், புலிகள் தம்மைத் திருத்திக் கோன்டிருப்பார்கள் அல்லது ஒதுங்கிப் போகநேர்ந்திருக்கும்.
தவறு புலித் தலைமையினது மட்டுமல்ல. கண்மூடித்தனமாக ஆதரித்தோரினதும் தான்.
அரசாங்கத்துடனும் இந்தியாவுடனும் அண்டிப் போனோரதும் தான். அமரிக்க எடுபிடிகளதும் தான்.
உருப்படியாக் இப்போது ஆலோசனை சொல்வோர் பலர் அப்போது தொட்டுச் சொன்னவர்கள் தான்.
புலிகளையும் தலைவரையும் வழிபட்டோரின் குருட்டுப் பக்தி எதையும், எவரையும் காண முடியாமல் கண்ணை மறைத்தது.
தயவு செய்து அறிவாற்றலுடையோர் என்பதால் யாரையும் நம்பாதீர்கள்.
மேற்கில் இருந்த அறிவாற்றலுடையோரும் பிற ‘நிபுணர்களும்’ தான் 2009 அவலம் வரை போகப் புலிகளை ஊக்குவித்தார்கள்.
முற்றுமுழுதாக உடன்படுகின்றேன்.
நீர் உடன்பட்டால்தான் என்ன, உடன் கட்டை ஏறினால்தான் என்ன. நீர் என்ன ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் தலைவனா..அல்லது குறைந்தது ஆயிரக்கணக்கான கிராமத்து மக்களை பிரதிநிதிப்படுத்தும் பஞ்சாயத்துப்போர்ட்டுத் தலைவரா, அல்லது நகராட்சி மன்றத்தைலைவரா. புலிகள் வென்றபோதெல்லாம் அது ” தமிழரின் வெற்றி( அவெற்றில் சில- தவளைப் பாய்ச்சல்,ஓயாத அலைகள் ஒன்று,வோட்டர்ஜெற்,புலிப் பாய்ச்சல், வன்னிவிக்கிரப, ஓயத அலைகள இரண்டு , மூன்று ,நான்கு)என்று ஆனந்தக்கூத்தாடி கொடி ,குடை பிடிச்சுட்டு, இப்ப இங்க வந்துநிண்டு கொண்டு அரைச்ச மாவையே அரைக்கிறியள், மாமன் படுகொலை , மச்சான் படுகொலை, சகோதரப் படு கொலை எண்டு.நீங்கள் புலிகளை அழிக்கிறோம் என்று கொண்டு, 30 வருசமாய் சிங்களாஆமியோடு சேர்ந்துகொண்டு எங்களுக்கு செய்த அனியாயம் என்ன ஒன்று , ரெண்டா..?உங்கட தலைமைகள் ஒழுங்கா செயல்பட்டு இருந்தா ஏன் புளட்டிற்கும், டெலோவுக்கும் , ஈபிஆர்லெவ்பிற்கும்ப பின்னால்நின்றவர்கள் புலிகளிர்குப் பின்னால் போகிறார்கள்.முதலில்நீர் தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் , தமிழ் மண் மீட்கப்பட வேண்டும் என்று மனதார விரும்புபவராய் இருந்தால்நீரும்நிற்க வேண்டிய இடம் புலிகள் பினாலேயே , துரோகிகள் பின்னால் அல்ல. இவைற்றை எல்லாம் என்றோ தமிழ் மக்கள் அறிந்து , தெரிந்ததனால்தான் அவெர்கள் போலிகளின் பின்னாலும் பினாமிகளின் பின்னாலும்நிக்காமல் புலிகளின் பின்னால் நிற்கிறார்கள்.
வன்னியன்
Pஒச்டெட் ஒன் 11/30/2010 அட் 9:40 அம் தெரிந்ததனால்தான் அவெர்கள் போலிகளின் பின்னாலும் பினாமிகளின் பின்னாலும்நிக்காமல் புலிகளின் பின்னால் நிற்கிறார்கள்.
அதில் ஏதாவது ஒரு புலித்தளபதியின் பெயரை அல்லது கிளை அமைப்பின் பெயரை தங்களால் கூற முடியுமா?இலங்கை அரசுக்கு தெரிந்த விடயங்களை நீங்கள் இராணுவ இரகசியம் என்பீர்கள் அப்படியான பீலா பதில் வேண்டாம்.
´ஹலோ! முள்ளிவாய்காலில் எல்லோரையும் பலி கொடுத்து விட்டு முள்ளுகம்பி வேலிக்குள் அனுப்பிவிட்டு “சயினட்” இறக்கி வைத்த இடமும் இந்த இடம் தான். ஞாபகப்படுத்துகிறேன்.இந்தமாதிரி வீரப்பிரதாபங்களை இனியாவது விடலாம் தானே! வன்னியன்.
மதநம்பிக்கையாளருடன் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்பது என் துணிபு. நீங்கள் உங்கள் சூரியதேவனுக்காக காத்திருப்பது உங்கள் சுதந்திரம். பல அண்ணைகளும், அம்மான் களும், மாஸ்ரர்களும், தங்கள் புதிய சூரியதேவனாக கோத்தபாய வை ஏற்று மெய்சிலிர்க்கின்றார்கள்.. காட்டிக்கொடுப்பும், கூட்டிக்கொடுப்பும் உள்வீட்டுவிவகாரமாகவே பல காலமாக நிலவிவந்த போதும் மதநம்பிக்கையாளர் புரிந்துகொள்ளப்போவதில்லை.
இதற்கு மேல் தர்மராசாவிற்கு விளக்கம் தேவையில்லை. கடைசியாக தர்மராசாவிடம் ஞாபகப்படுத்தலாம் என நினைக்கிறேன். மட்டக்களப்பு ஆரையம்பதியில் நவீனா என்றொரு குழந்தையும் தந்தையும் ,கனகம்புளியடியை சேர்ந்த கைக்குழந்தை வதனன் அவனது பெற்றோர், வங்காலை மார்டின் குடும்பம் என்ன துரோகம் செய்தார்கள்?அவர்களைப்பற்றி நாம் எப்போது பேசுவது?
தமிழ் ஈழம் ஒருநாள் அமையும்….
ஈழம் தனி நாடாக மலர வேண்டும் என்பதே இந்திய தமிழர்களில் பெரும்பாலோரின் விருப்பம். இறைவா!! ஈழத்தமிழர் தலைவர்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்து!!! வீண் வாதமும் சண்டையும் வேண்டாம், அன்பர்களே!!!
புலம்பெயர்வாளர்கள் எம்மக்களைப் பற்றிய சிந்தனையற்றவர்கள். அல்லது ஓர் துயர் பகிரும் நாளில் கேக் வெட்டுவார்களா?
வம்புக்கு இழுப்பதாக இருந்தாலும் மனிதன் கற்ற கல்வியை பிரமஅஸ்திரமாக பாவிப்பதாக இருந்தாலும் கீழ்தரமான வாதமாக இருந்தாலும் அவரை சந்திக்கிழுத்து
அவரின் அறிவுத்துகிலை உரிந்து மானபங்கப் படுத்தாவிட்டால் எனக்கு நின்மதி…?
இன்றைக்கு எனது ஜீரணத்திற்கு கிடைத்தவர் திருவாளர் ரா
மு.
தங்களுக்கு புல்லு எந்த பிரச்சனைம் இல்லாமல் வயிற்றை நிறப்ப வசதியாக இருக்கிறது. உங்களுக்கு தேவையானது எல்லாம் கும்புடு போடத் தெரிவது தான்.
கடவுச்சீட்டு எடுக்கும் போதும் ஒரு கும்புடு. விமானத்ல் ஏறும்போதும் இருக்கிற பல்லை தெரியகாட்டி அதற்கும் கும்புடு. வந்திறங்கியதும் எதற்கும் வந்திறங்கினோம்
என்பதை சொல்லத் தெரியாமல் அதற்கும் ஒரு கும்புடு. இப்படி எல்லாவற்றையும் கும்புடுவாகப் பழகிவிட்ட ராமுவுக்கு…. பொங்கின புக்கையிலும் பார்த்து தண்டல் புக்கை அதிகமாக இருக்கும் போது வயிற்றை பற்றி
என்ன கவலை இருக்கிறது. பசியைப் பற்றி என்ன கேள்வி இருக்கிறது..!?. மாக்ஸ்சியம் இந்த எல்லோரும் பசியாறுவது பற்றியே அலுப்பு சலிப்பில்லாமல் தொடர்ந்து முன்பிருந்த தத்துவத்வாத்தைகளை எல்லாம் முகத்திலை குத்திவீழ்த்தி குப்பற வீழ்த்தி சம்பியன் பட்டத்தை எடுத்திருக்கிறது. இதுவெல்லாம் பசியைப் பற்றிய கேள்வி வந்ததாலேயே! ஏன் அது மற்றவருக்கு துன்பத்தை வரவழைக்கிறது என்கிற கேள்வியை எழுப்பியதாலேயே! பசி ..கஞ்சி.. கலயம்… வானத்தை மறைப்பதற்கு ஒரு கூரை.. ஒரு துண்டு நிலம்.. இது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதைப் பற்றி தான் விடியவிடிய கதை பேசுகிறது.நீங்களோ ராமு உங்களுக்காக ஏன் எம்மினத்தவர் பலியாகக் கூடாது என கேள்வி எழுப்புகிறீர்கள்? பசிதான் உலகத்தை முன்னோக்கி உருளப் பண்ண தத்துவங்களை படைக்க கேள்வி எழுப்பியது. இதுவே தான் மனித வரலாறு.அதில் ஓடிவந்த கோகணுர் வயிரவே மாக்ஸியம். ராமு நீங்கள் என்னமா? சோற்றை சிந்துகிறீர்கள்.கஞ்சிக் கலயத்தை உடைக்கிறீர்கள்
ஒரு வெறிகாரன் போல பசியை எப்படி அவமதிக்கிறீர்கள் ஒரு ஊதாரியைப் போல…இதே போல் ஒரு கோகணுர் வயிரத்தை எப்படி அலட்சியமாக குப்பை மேட்டில் தூக்கி எறிகிறீர்கள். நீங்கள் யாரையும் அலட்சியப் படுத்தலாம் தூக்கியெறியலாம் ஆனால் பசியை யாரும் மறுக்க முடியாது. சோற்றை வீசமுடியாது. கலயத்தை உடைக்க முடியாது. அதற்கு எதிராக வேறு ஒரு தத்துவத்தை நிறுத்த முடியாது.
எமக்கு சோறு இருப்பது போல உருளைக்கிழங்கு இதுபோன்ற மாறுபாடனவகையும் உண்டு.இவையெல்லாம் மனிதக்குரிய பசியைப் ஆதாரமாக திகழ்பவையே! அதே போல்தான் மாக்சியமும் பசியைப் பற்றியும் மனிதகுலத்தை பற்றியும் தான் தனது ஆய்வை முன்வைக்கிறது. ஆதலினால் தான் நாடுகள் கண்டங்களை கடந்தும் வெற்றி சூடக்கூடியதாக இருக்கிறது. இனியும் சிகப்பு கொடியை உலகமும் முழுக்க பறக்க விடப்போகிறது. இதுவெல்லாம் பசியை பற்றி
ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்ததால் மட்டுமே!. ராமு உங்களை போல ஒரு சிலர் தான் பசியைப்பற்றி கஞ்சி கலயத்தைபற்றி விபரீதமான முடிவுக்கு வரமுடியும். மனிதநேயம் உள்ளவர்கள் ஒருபோதும் எதிர்குரல் எழுப்ப மாட்டார்கள்.
அம்மாடியோவ், ப்ரொவெசர் பசி, பசி பற்றி இப்படி ஒரு விளக்கம் முன்பு ஒருபோதும் முழங்கவில்லை. எனக்கு மார்சீசமும் வேண்டாம், மண்ணாங்கட்டியும் வேண்டாம், நான் பிச்சை எடுக்கப்போகிறேன். அம்மா பசி….
அதை தானே செய்கிறீர்கள் சூரியா! ஒரு வித்தியாசம் குரல் மாற்றி வேறு ஒரு தொனியில் எழுப்பப் படுகிறது.வேறு ஒன்றுமில்லை.
“முற்போக்குவாதி” என்ன சந்தோசம் மற்றவன் பிச்சை எடுப்பதையிட்டு!
மற்றவர்களை மானபங்கம் செய்வதாக எண்ணித் தன்னை மட்டுமன்றி இந்த இணயத்தளத்தையுமல்லவா மானபங்கம் செய்கிறது இப் பிறவி.
இவ் விதமான பின்னூட்டங்கள் பற்றிப் பலரும் பல முறை சொல்லியும் பொறுப்பாளர்கள் கவனிப்பதாகத் தெரியவில்லை.
மனிதனுக்கு வரகூடிய பசியை மறுக்கிறவனையும் அவனுக்கு உரிய கூரையை உடமையில்லாமல் செய்பவனையும் மானபங்கப் படுத்துவது மட்டுமல்ல புடுங்கியும் அடுக்குவோம். தமிழன் என்கிற பெயரால் நீங்கள் செய்கிற “ஜில்மால்”களையும் என் பெயரால் அல்ல பாட்டாளிவர்க்கசர்வாதிகாரத்தை பெயரால் இல்லாமலும் செய்வோம். முடிந்தால் உங்கள் வழமையான முறைப்படி இணையத்தள ஆசிரியர்களுடன் பின் கதவால் அலுவல் பார்த்தால் மட்டுமே காரியத்தை சாதிக்க முடியும். இதுவெல்லாம் நான் சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. கதைப்பது நீங்கள் அல்ல வர்க்கப் புத்தியே என்பதை உங்களில் இருந்து தான் கற்றுக் கொண்டேன் திருவாளர் முகமூடி அவர்களே!.
பசியை மறூக்க முடியுமா தோழரே உணவைத்தா மறூக்க முடியும்?நீங்கள் நிறய சினிபிட்ஸ் படித்து களவாக மசாலா படங்கள் பார்க்கிறீர்கள் போலிருக்கிறது.மனிசி வரும்போது பேந்த,பெந்த முழிப்பதால் குழபிப் போய் உள்ளீர்கள்.
உங்கள் ஆசான் வ.அழலிங்கம். ஐயோ! ஐயோ!
ராமுவா? சோமுவா? என்ற இந்த
உலகத்தில் சொந்தப் பெயரில் கருத்து சொல்லுகிற ஒரு நேர்மையான மனிதன் நீங்கள் குறிப்பிட்டவர் தான். அவருடைய நேர்மையுடன் உங்களை ஒப்பிடும் போது….சல்லி..?
மாக்சிச சிந்தனா சிற்பிகளாக பிதற்றியபடி கொலைகாரர்களுக்கு வால்பிடிப்பதை விட சல்லிகள்? ..குறைந்தனவாக தெரியவில்லை.
“மனிதனுக்கு வரகூடிய பசியை மறுக்கிறவனையும் அவனுக்கு உரிய கூரையை உடமையில்லாமல் செய்பவனையும் மானபங்கப் படுத்துவது மட்டுமல்ல புடுங்கியும் அடுக்குவோம்.”
முதலாளித்துவம் பசியை மறுக்கவில்லையே, மேலும் அதன் கொடுமையை அதிகரிக்கிறதல்லவா!
இலங்கையில் “மனிதனுக்கு …உரிய கூரையை உடமையில்லாமல் செய்கிறவன்” ராசபக்ச அல்லவோ.
அன்னானுக்கு வால்பிடிப்போர் அவரது பங்காளிகள் ஆகாரோ?
இந்தக் காரணங்களல் தான், “தவறே செய்யமாட்டாத” தளபதியார் சந்திரன் இராசா அவர்கள் தன்னைத்தானே மனபங்கஞ் செய்கிறர் போலும்.
இப்படியே நீங்கள் எழுதிக்கொண்டு போனால் சந்திரன் ராஜா தனது முகமூடியைக் கழற்றிவிட்டு உங்களைப் புடுங்கி அடுக்கப்போகிறார். இவரின் எழுத்தில் இருக்கிறது பயங்கரவாதம். கையில் கிடைத்தால் என்ன செய்வாரோ? பிய்த்து எறிந்து விடுவார் தமிழ்படக் கதாநயகன் போல்.
ஐயா! நீஙகள் தெய்வம். அரசன் அன்று அறுப்பான். தெய்வம் நின்று அறுக்கும் என்று சொல்வார்களே அது இதைத்தானா? சும்மா அறுஅறு என்று அறுத்து தொலைக்கிறீர்கள். உஙளுடைய எழுத்தை நீஙகளே படித்துபாருங்கள், மாக்சிசத்தின் பேரால் பிதற்றுகின்ற உதிரிகள் மாக்சிசத்தினதும் தொழிலாளவர்க்கத்தினதும் எதிரிகள் என்பது திண்ணம்.
சிப்பியா? சோகியா?? என்பதை விட்டு நீங்கள் யாருக்கு குடைபிடிக்கிறீர்கள் என்பதை சொல்லிவிட்டு உங்கள் அலறல்களை தொடர்ந்து நடத்துங்கள்.
தமிழ்மக்களின் வாக்குரிமையை ஆயுதமுனையில் தடுத்து நிறுத்தி மகிந்தாராஜ பக்சாவை சிம்மாசனத்து கொண்டு வந்தவர்கள் புலிகள் தானே! இப்படியிருக்கும் போது இப்பொழுது யாரைக் குறிவைத்து தாக்குகிறீர்கள்?. அல்லது குறி இலக்கு என்று எதாவது உங்களுக்கு இருக்கிறதா? உங்களைப்போல இன்னும் பலர் இருக்கவே செய்கிறார்கள். இவர்களுக்கு நாடு அமைதியாக இருப்பது பிடிப்பதே இல்லை. யாராவது குண்டு எறிந்து கொண்டேயிருக்க வேண்டும். மக்கள் அவலப் படவேண்டும்
அந்த அவலத்தை சொல்லி இங்கு பிழைப்பு நடத்த வேண்டும்.இப்படியான சிந்தனை
களை எந்த இஸத்தில் சேர்த்துக் கொள்வது ராமு. இயங்கியல் வரலாற்று பொருள்முதல் வாதத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.மகிந்தராஜபக்சா இல்லாது விடத்து அந்த இடத்தில் யாரை அமர்த்துவது என்கிற விவஸ்தையாவது உங்களுக்கு இருக்க வேண்டாமா? என்னைப் பொறுத்தவரை மேற்குலக முதாலித்துவத்தின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்ற சரத்பொன்சேகரா வந்திருப்பார் இல்லையே ரணில்க்கு வாய்ப்பாக இருந்திருக்கும் இதை விடுத்து வேறுஒன்றும் நடத்துவிடுவதற்கு வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் தூரம்கடந்து நீங்கள் சிந்தித்து இருப்பீர்கள் என்று நான் நினைக்க வில்லை. இல்லை அப்படிச் சிந்தித்தோம் என்றால் விளக்கம் தரவும்.அப்படியெல்லாம் எங்களுக்கு சிந்திக்கிற பழக்கம்மில்லை.எங்களுக்கு வாரிசு முறையில் தோன்றிய பழிவாங்குகிற பழக்கதோஷம் தான் காரணம் என்றால் ஆம்
என்கிற கெளரவ பதிலையாகுதல் தரவும் இதைவிட்டு சிப்பி…சோகி கதையெல்லாம் உங்களுக்கு தேவையா? இயங்கியல் வரலாற்று பொருள்முதல் வாதம் எங்கள் மண்டைக்கு ஒருமுழம் கட்டையென்று சொல்லவேண்டியது தானே ராமண்ணா!.
விளம்பர அறிவித்தல்
மகிந்த ராஜபக்சவுக்குக் குடை பிடிக்கிற முகமூடிக்காரர் ஒருவருக்கு அவசரமாக ஒரு குடை தேவைப்படுகிறது.
மகிந்தாவுக்கு குடை பிடிப்பது,ஆலவட்டம் பிடிப்பது இன்னும் பல்லக்கு தூக்குவது என பல் இளீக்கும் தமிழன் உயிர் வாழ கெஞ்சுகிறான்.குழந்தைகள போருக்கு அனுப்பி அவர் உயிரோடு பிடிபடக் கூடாது என உயிரை எடுத்தவன் கெஞ்சுகிறான்.இந்த பிரியா எனும் குழந்தை வழுந்து கிடக்கும் காட்சி கண்டு நான் அழுகிறேன்.ஆழுமைகளூம்,ஆற்றல்களூம் அவமானப்பட்டு,சிதறப்பட்டு.நெஞ்சே வெடிக்கிறது.நாம் எல்லாம் அகதியாய் ஓடி வந்து அதிக சாப்பாடு செமிக்கவில்லை என அழுகிறேன். ஆனால் எத்தனை வருடம் கடந்தாலும் ஒரு பிழையான தலைமையால்,தமிழ் இனம் அழிந்தது மாறாத வடுவாய்,ரணமாய் இருந்து கொண்டிருக்கும்.இராவணனால் அவன் குடும்பம் அழிந்தது தமிழனுக்கு மட்டும் ஏன் கிட்லர்கள் தலைவராக வருகிறார்கள்?
>> ந்த நாளில் பாலஸ்தீன மக்கள் அழிக்கப்படும் போது தெருவிற்கு வந்து போராடிய ஐரோப்பிய மக்களும், உலகெங்கும் பரந்து வாழும் மனிதாபிமானிகளும் எங்களோடு கைகோர்த்துக் கொள்வர். அந்த நாளில், ஒடுக்கப்பட்ட தேசிய இனமான எமது போராட்டம் உலகத்திற்கு உணர்வுபூர்வமாக அறிவிக்கப்படும்.
பலஸ்தீன மக்கள் இப்போதும் அளிக்க பட்டு கொண்டு இருக்கிறார்கள் தோழரே.
..>>>ரியான திசை நோக்கித் திட்டமிடப்படாத நியாயமான போராட்டம் ஆயிரக் கணக்கான உணர்வுமிக்க போராளிகளை மண்ணோடு மண்ணாக்கியிருக்கிறது; ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரச பயங்கர வாதத்திற்குப் பலியாகியிருக்கிறார்கள்; ஊனமுற்ற, அங்கவீனர்களின் சமூகம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது; சிறைவைக்கப்பட்ட மக்கள் போக அனைத்துத் தமிழ் பேசும் சிறுபான்மையினரும் இலங்கை எங்கும் ஆயுத முனையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.>>
ஆனால் ஹமாஸ் ஐ அதற்க்கு காரணமாக ஏன் சொல்ல வில்லை. ஹமாஸ் இஸ்ரேலோடு பொருந்தி போய் இருந்தால் காஜா மக்களுது இந்த பிரச்னை வந்து இருக்காது என்று சொல்ல வேண்டியது தானே. hizbulla இஸ்ரேலி காவலரை கடத்தாது இருந்தால் லேபேனன் மீது போர் நடந்து இருக்காது என்று சொல்லலாம் அல்லவா? …இஸ்ரேலை தடுத்து நிறுத்தியது அந்த போராளிகள் என்பதை நாம் வசதியாக மறந்து விட்டு , போராளிகள் தடுத்தால் தான் விமான தாக்குதலால் நகரம் அளிக்க பட்டது என்று சொல்லலாம் அல்லவா. இஸ்புல் போராளிகளை ஏன் நீங்கள் பேசுவது இல்லை. …. ஹமாஸ் ஐ ஏன் பேசுவது இல்லை.
சபா அவர்களே நீங்கள் கட்டுரை எழுதும் நேரத்தில் ஏதேனும் செயலை செய்யுங்கள். ஒரு மாற்று வழியை உருவாக்கி காண்பியுங்கள். இல்லையென்றால், காந்தி கோட்பாட்டின் படி வன்முறை தான் இதனை அழிவிற்கும் காரணம் , அமைதியாய் போராடி இருக்க வேண்டும் என்று பெரிய பெரிய கட்டுரைகளை எழுதலாம்.
சரியான திசை நோக்கி திட்டமிடப்பட்ட சீன புரட்சி எங்கு போய் நிற்கிறது ? தேசிய இனபிரச்சனை பற்றி பேசிய ருசியா புரட்சி எங்கு நிற்கிறது, அதன் தேசிய இனங்கள் என்னவாகினா? … இவ்வளவு கடுமையான விமர்சனம் உங்களால் சீனாவின் மீதோ , ரஷ்ய புரட்சின் மீதோ வைத்து எழுத முடியுமா. செய்யுங்கள் அந்த வரலாற்றையும் தெரிந்து கொள்கிறோம்…. வரலாறு மிக அவசியம்………. கட்டுரை எழுதுவது சுலபம் தோழரே.
நல்ல சிந்தனை.