இலங்கையின் வடகிழக்குத் தமிழ் மக்களின் இன விடுதலைக்கான போராட்டம் – புலிகளினால் தலைமை தாங்கி நடத்தப்பட்டு வரும் போராட்டம் – இன்று மாற்றமொன்றை எதிர்நோக்கும் முனைப்பானதொரு நிலையை அடைந்திருக்கிறது.
திட்டமிட்ட ராணுவத்தாக்குதல் உத்திமுறைகளைக் கையாண்டு அரச ராணுவத்தினை நிலை குலையச் செய்து இழப்புக்களையும், பின்வாங்குதல்களையும் ஏற்படுத்தும் புலிகளின் ராணுவத் தந்திரோபாய முறை, புலிகளின் முக்கிய தலைவர்களால் அரசுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசும் புலிகளின் இவ் இராணுவ உத்திமுறையை உணர்ந்து தனது யுத்தத்தினை வடிவமைத்து முன்னெடுத்துச் செல்கிறது: முன்னேறிவருகிறது.
புலிகளின் தாக்குதலுக்கு ‘ஈடுகொடுத்து நின்று பிடித்து’ தாக்குதலை தொடுப்பதில் அரச ராணுவத்தின் முன்னேற்றம் தங்கியிருக்கிறது. அரச ராணுவத்தின் ‘ஈடுகொடுத்து நின்று பிடித்திருத்தல்’ என்பது சர்வதேச அழுத்தங்களையும் நாட்டின் பொருளாதார நிலையையும் ராணுவத்தினரின் இழப்புக்களை தாங்கிக் கொள்ளக் கூடிய அரசத்தலைவர்களின் சக்தியையும் பொறுத்திருக்கிறது. மற்றொரு புறம் ஊடகங்கள் மீதான அடக்கு முறையை தொடர்ந்து பேணிக்கொள்ளுதல் திருப்பு முனையை ஏற்படுத்தும் ஒரு விடயமாக அமைந்திருக்கிறது. அரசு இவற்றில் பலவீனமான நிலையில் இருக்கின்ற போதும் தொடர்ந்து தனது நிலையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது !
புலிகள், போராட்டத்தினை ‘மக்கள் போராட்டமாக’ மாற்றியமைப்பதை விடுத்து, தொடர்ந்தும் தமது தலைமைத்துவத்தினை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் தமது இராணுவ உத்திகளை மாற்றியமைத்து தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருவார்கள் என்றே நம்பப்படுகிறது. தாக்குதலை தொடுத்து ராணுவத்தினை நிலை குலையச் செய்வார்கள்;, யுத்த நிறுத்தம் ஒன்றின் மூலம் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வார்கள் அல்லது நிலங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையில் கொரில்லா பாணியிலான தாக்குதல் நிலைக்குச் செல்வார்கள் எனவும் நம்பப்படுகிறது.
அரசு, புலிகளை அழித்து அவர்களிடமிருந்த ‘அதிகாரப் பகுதிகளை’ கைப்பற்றுதல் என்ற இலக்கிற்கு அப்பால் இனவிடுதலைக்கான போராட்டம் அது எந்த வடிவிலாவது முன்னெடுக்கப்படுதலை அழித்து விடும் வகையில் நீண்ட கால நோக்கிலான இலக்கில் செயற்பட்டு வருகிறது.
- · புலிகளை அழித்தல்
· தனது நோக்கத்தினை நிறைவேற்றக் கூடிய சக்திகளை இணைத்துக் கொண்டு பலம் பெறுதல்
· கைதுகள், விசாரணைகள், சித்திரவதைகள், தடுத்துவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
· இனந்தொரியா நார்கள் மூலமான கடத்தல்கள், கொலைகள் என்பவற்றை மேற்கொண்டு விடுதலைக்கான சக்திகளை அழித்தொழித்தல் , அடக்குதல்
· மக்களில் பெரும் தொகையினரை அகதிகளாக வைத்து நிவாரணங்களில் வாழும் நிலைக்கு உட்படுத்தல்
· திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் – அது இப்போது ‘வன்னியில் மீட்கப்பட்டவர்களில்’ 60 உட்பட்டவர்களை மூன்றாண்டுக்கு தடுத்து வைத்தல், தடுப்பு முகாம் கிராமங்களில் வாழவைத்தல் – மக்களை வைத்திருத்தல் என அரசின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.
புலிகள் ‘அழிக்கப்பட்டு வருகிறார்கள்’ என்ற நிலையில் இனவிடுதலைப் போராட்டத்திற்கான மாற்றுக் குழுவினர் பால் கவனம் திருப்பப்பட்டுள்ளது. அக்குழுக்கள் ‘முற்போக்குச் சக்திகளாக’ இனங்காணப்படுகிறது.
தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தில்; இளைஞர் ஆயுதக் குழுக்கள் (இயக்கங்கள்) தலைமையேற்ற காலத்தின் பின், அவர்களில் பலர் தங்களை ‘முற்போக்குச் சக்திகளாக’ இனங்காட்டத் தலைப்பட்டனர். ஆனால் வெகுவிரைவில் அவர்களுடைய ‘முற்போக்குத் தன்மை’ அம்பலப்பட்டு விட்டதைக் காண்கிறோம்.
1985 களின் (?) பின் இளைஞர் ஆயுதக் குழுக்களில் இருந்து, தமது தலைமைகளின் அராஜகப் போக்குகளுடன் முரண்பட்டுக் கொண்டு நின்ற குழுக்களின் தோற்றத்தைக் காணமுடிந்தது. முக்கிய இயக்கங்களில் ஈரோஸ் இயக்கம் தவிர்ந்த ஏனைய இயக்கங்களில் இருந்து இவ்வாறான குழுக்கள் தோன்றின. தீப்பொறிக் குழு ஒரு மாற்று இயக்கமாக வளரவும் முற்பட்டார்கள். மாற்று அமைப்பை ஏற்படுத்திப் போராடும் பணியில் சிலர் ஈடுபட்டனர். சிலர் குழுநிலையில் விவாதங்களை மேற்கொண்டு வந்தார்கள். சிலர் வேறு நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இயங்கினார்கள். சிறிய சில இயக்கங்கள் தொடர்ந்தும் தம்மை ‘முற்போக்குச் சக்திகளாக’ இனங்காட்ட முற்பட்டார்கள். இவர்களை இனவிடுதலைப் போராட்டத்திற்கான மாற்றுக் குழுவினர் என நாம் கருதுகிற போது முக்கியமான சில வினாக்கள் முன்னெழுகிறது.
இனவிடுதலைப் போராட்டத்திற்கான மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ இன விடுதலைப் போராட்டத்தில் பெற்ற, பெற்றிருக்கிற முக்கியத்துவம் யாது? ஓன்றுமில்லாமல் செயலிழந்து போனமையே வெளிப்படையானதும் பொதுவானதுமான அம்சமாகும்.
இதன் பின் மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ வட கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதனை அல்லது வெளியேறியதனை அவதானிக்கலாம். இப்பின்னணியில் வடகிழக்கிற்கு அப்பாலிருந்து மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ செயற்படலாயினர். மாற்றுக் குழு ஒன்றை அமைத்தல், மாற்று அரசியலுக்கான திறந்த அரசியல் விவாத அரங்கை ஏற்படுத்தல் என்ற வகையில் இவர்கள் செயற்பாடு தொடர்ந்தது. ஆயினும் இன்று வரை – இருபது வருட காலத்திற்கு மேலான காலமொன்றில் – ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்ன? என்ற வினா முன்னெழுகிறது. காத்திரமான விடயம் எனக் குறிப்பிடத்தக்கவை ஏதாவது செய்யப்பட்டிருக்கிறதா?
இவ்வாறானதொரு பின்னணியில் நின்றே மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ தொடங்கிய இடத்திற்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலையில் இருப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
- புலிகளை எவ்வாறு புரிந்து கொள்வது?
- இன விடுதலைப் போராட்டத்தை எவ்வாறு புரிந்து கொள்வது
பாட்டாளி வர்க்கப் புரட்சியுடன் தொடர்பு படுத்தி இன விடுதலைப் போராட்டங்களை எவ்வாறு நோக்குவது? - வட கிழக்குத் தமிழர்களின் சமூக அரசியல் நிலை யாது?
- சர்வதேச மற்றும் பிராந்திய அரசியல் எத்தகையது?
எனப் பல்வேறு விடயங்களை விவாதிக்க வேண்டிய ஒரு நிலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். இத்தகைய விவாதங்களை 1985 களிலிருந்து கேட்டு வருகிறோம். எனவேதான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் செல்ல வேண்டிய பூச்சிய நிலையிக்கு வந்திருப்பாதாக உணர்கிறேன்
அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் அதிகாரப்பிடிக்குளிருந்து – இலங்கையிலிருந்து இக்கட்டுரையை இனியொருவிற்காக அனுப்பிவைத்த வீ.ஆர் அவர்களுக்கு எமது நன்றிகள்.
Blacklegs among the Tamil Diaspora join the Mahinda bandwagon:
‘When the notorious Pol Pot regime was in power in Cambodia in the seventies, leftist leaning foreign dignitaries and intellectuals were invited to that South East Asian nation to see for themselves the success of the so-called silent revolution carried forward by the ‘Red Khmers’. They came out with glowing tributes praising the murderous Phnom Penh leadership. These foreign dignitaries were taken on conducted tours where the Khmer workers and peasants were shown as show pieces of the “red revolution” under the leadership of “Brother Number One”. These learned men and women mostly from the West never knew or never allowed to know that the notorious Cambodian leader Pol Pot was putting on a show to the outside world while engaged in killing thousands of his country men in the “Killing Fields” of Cambodia. The world learnt about the horror stories of Cambodia only much later.
In a similar fashion, last week, Sri Lanka’s notorious Rajapakse regime, invited a group of Sri Lankan Tamils from abroad for a ‘conducted tour’ of the concentration camps in Vavuniya where Tamil civilians who escaped from the Vanni battle zone are being held as captives under the watchful eyes of the Sri Lankan soldiers . These so-called Tamil intellectuals were specially chosen by the Sri Lankan Foreign Ministry because of their anti-LTTE record. Most of them are English speaking professionals practising as medical doctors or animal doctors who deserted Sri Lanka years ago in search of a comfortable life.
One such medical doctor by the name Dr Narendran had the audacity to give an interview to the BBC Tamil Service praising the conditions in the concentration camps. When the BBC journalist asked him about reports describing the camps as ‘concentration camps’ he animatedly denied the charges like what listeners used to hear from the Sri Lanka’s official spokesman Keheliya Rambukwelle or Sri Lankan army spokesman Brigadier Udaya Nanayakara. The fact that these are concentration camps like the ones Hitler set up to hold Jews before they were sent to gas chambers is vouched by such international human rights organisations as Human Rights Watch and Amnesty International.
People like Dr Narendran and the coordinator of the Tamil group Dr Noel Nadesan, an animal doctor from Australia, are blinded by their hatred towards the LTTE and its leader Prabaharan. Mahinda and his brothers are cleverly using these people to show to the world that all the Tamils are now behind him. This Rajapakse show is being put up at a time when the Eelam Tamils living all over the world are joining hands to save their brothers and sisters in Eelam and conduct mass rallies in the world capitals. Even those who do not subscribe to LTTE views have joined hands to protest the killings of innocent Tamils in the Vanni.
These medical doctors and animal doctors should realize that Mahinda Rajapakse and his brothers Gothabaya and Basil have embarked on a mission to finish off the Tamil liberation struggle and to wipe out the separate Tamil identity of the Eelam Tamils under the guise of ending LTTE terrorism. Their association with the Mahinda regime make them partners and associates in the genocide of the Eelam Tamils brazenly carried out by the Sri Lankan President and his racist Sinhala Armed Forces.
These medical doctors and animal doctors have no right to speak on behalf of the Tamil Diaspora. Has Dr Narendran or Dr Noel Nadesan any following among the Tamil Diaspora? Can Dr Nadesan organise a rally of ten Tamils in his Australian city in support of his call to support Mahinda Rajapakse? People like Dr Nadesan and Dr Narendran are petty individuals still nursing their grudges against the LTTE and desiring nothing but revenge against the LTTE for their own personal reasons. They have no qualms about the hundreds of poor innocent Vanni Tamils killed and maimed every day by the Sri Lankan Armed Forces in indiscriminate bombings and shellings.
‘Theepori’ is no lover of the LTTE or its leader Prabaharan. There is no denying that the Tamil Tigers have in the past killed cadres and leaders of other Tamil groups. But, that is no reason now to join the Mahinda bandwagon giving him a helping hand to accomplish his grand scheme to finish off the freedom struggle of the Eelam Tamils. Now is the time for all Tamil parties and Tamil Diaspora to join hands against the Rajapakse regime and the Sinhala extremists. Actions of these Tamil medical doctors and animal doctors in associating with the Rajapakse regime will only help confuse the international community which is now slowly realizing the genocidal tendencies of the Rajapakse regime and the atrocities committed against the Eelam Tamils.
தோழர் வியார் நீங்கள் சொல்கிற மாற்றுக் குழுவினர் அல்லது ‘முற்போக்குச் சக்திகள்’ இப்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?இலங்கை அரச பயங்கரவாதத்திற்கு முண்டுகொடுக்கிறார்கள். இதைவிடக்கொடுமை அரசின் கைக்கூலிகளாக நீங்கள் சொல்கிற இந்த சக்திகள் மாறிவிட்டார்கள். நீங்கள் சொல்வதுபோல்”அவர்களில் பலர் தங்களை ‘முற்போக்குச் சக்திகளாக’ இனங்காட்டத் தலைப்பட்டனர். ஆனால் வெகுவிரைவில் அவர்களுடைய ‘முற்போக்குத் தன்மை’ அம்பலப்பட்டு விட்டதைக் காண்கிறோம்” என்பது சரியான கணிப்பீடு. உங்களின் இந்த கணிப்பீட்டையும் மிஞ்சி அரச கைக்கூலிகளாக மாறியதற்குடாக எல்லா வேசங்களையும் களைத்துக்கொண்டுவிட்டனர்.
கருத்துரைக்கான பதிலைப் பார்த்தேன்.
நீங்கள் குறிப்பிடுவது முற்போக்குச் சக்திகளை அல்ல. அடக்கு முறைக்கு முண்டு கொண்டுக்கிற ஓன்றிரண்டு சனநாய விரோதிகளை. ஆயினும் முற்போக்குச் சக்திகள் அரசியல் மற்றும் இயங்கும் பலமற்று நிலையிலிருப்பதனை மறுக்க முடியாது. வடக்கிழக்குத் தமிழர்களின் – வன்னி மக்களின் பேரவல வாழ்வின் போது முற்போக்குச் சக்திகளின் குரல் ஒலிக்காமை குறித்த அவலத்தினையே எனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தேன்
தேசிய விடுதலைப் போராட்டத்தை மக்களின் விடுதலைப் போராட்டமாக முன்னெடுத்துச் செல்ல முற்போக்குச் சக்திகளின் தலைமைத்துவமானது அவசியமானது என்பது வரலாற்றிலிருந்து வரும் படிப்பினையாகும்.
முற்போ க்குச் சக்திகள் புலிகளின் அராஜகத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற நியாயத்தினடிப்படையில் மக்கள் அழித்தொழிப்பு நடவடிக்கைகளையும் தமிழ் தேசிய இன அழத்தொழிப்பையும் கண்மூடிக்கொண்டு ஆதரிப்பது எவ்வகையில் நியாயமானது. மக்களின் அவலம் குறித்த அக்கறையற்று ஒரு கையறு நிலையிலிருந்து கொண்டு மேற்கொள்ளும் விமர்சனமானது ஒடுக்குமுறைகளுக்கு சார்பானதாக அமைந்து விடுகின்றது. இவையிரண்டு விடயங்கள் குறித்தும் முற்போக்குச் சக்திகள் தமது பதிலுரையை வழங்கியாக வேண்டும்.
இன்றைய நிலையானது, தொடர்ந்தும் தேசிய விடுதலைப் போராட்டமானது இன்றைய அரசியல் நிலைக்கூடாகவே தொடர வேண்டிய நிலையில் இருக்கும் என்றே கருதவைக்கிறது. புலிகள் தமது எனது தலைமையிலே தொடர்ந்தும் போராட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்கள்.
இன்று ஒன்றில் புலிகளை சார்ந்து நின்று தேசிய இன விடுதலைக்காகப் போராடுதல் அல்லது அரசுடன் இணைந்து புலிகளின் அராஜகத்திற்கெதிராக செயற்படல் என்ற இரு முனைப்பட்ட நிலையே வலுவடைந்துள்ளது என்பதே யதார்த்தம்.
இதுவே பலருக்குப் பிரச்சினையின் ஆரம்பம் !
வியார்.
மக்கள் போராட்டங்கள்.
——————–
வரலாற்றில் ஒடுக்குமுறைகளுக்கெதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் பலவற்றை நாம் அறிந்துள்ளோம். அப்போராட்டங்கள் மூலமே பல சனநாயக உரிமைகள் பெறப்பட்டன என்பதையும் அறிகின்றோம். அப்பபோராட்டங்களே ஒடுக்குமுறைக்குட்படுகிற மக்களைப் போராடத் தூண்டுகிறவையாகவும் விளங்கின என்பதையும் அறிகின்றோம்.
ஆயினும் இரண்டாம் உலகப்போரின் பின் தோற்றம் மனித உரிமைகளுக்கான – உலகில் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கான அமைப்புக்களின் தோற்றத்தின் பின் ஒடுக்குமுறைகளுக்கெதிராக மக்கள் மேற்கொண்ட போராட்டங்கள் அவ்வமைப்புக்களின் ஆசிர்வாதங்களைப் பெறவேண்டிய நிலைக்கு அல்லது அவ்வமைப்புக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையினைக் காண்கிறோம்.
மக்கள் போராட்டங்களின் குத்தகைதாரர்களாக பல சர்வதேச அமைப்புக்கள் இன்று செயற்பட்டு வருகின்ற நிலையிலும் உலகில் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் மென்மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இவ்வமைப்புக்கள் வகுத்து முன்வைத்துள்ள சனநாயகக் கோட்பாடுகளை பல நாடுகள் – மக்கள் விரோதிகள் மிக இலகுவாக மீறிச் செயற்படுவதனையும் அவ்வேளைகளில் இச்சர்வதேச அமைப்புக்களினால் அவ்வொடுக்குமுறைக்கெதிராக செயற்பட முடியாதிருக்கிற நிலையினையும் காணமுடிகிறது. இங்கே மக்கள் மத்தியில் பேசப்பட்ட ஒரு விடயம் ஐ.நா தலையிடும் அளவிற்கு இன்னும் சாவு நடக்கவில்லை என்பது !!
இலங்கையில்,
யுத்தம் நடைபெறுகிற பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டபோது மௌனமாக வெளியேறியதில்,
இன்று வரை யுத்தப்பகுதியினுள் சுயாதீனக் கண்காணிப்பாளர்களை அனுப்ப முடியாது தடைவிதிக்கப்பட்ட நிலையில்,
அகதிகள் பராமரிப்பு ஒரு மக்கள் சமூகத்திற்கெதிரான அநாகரிக நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,
இன்று வெளியார், அகதிகள் வாழும் பகுதிக்குச் செல்லமுடியாது தடுக்கப்பட்ட நிலையில்,
அகதிகள் முகாமில் காணமல் போதல் நடைபெறுகிற நிலையில்
இனந்தெரியோதாரல் தீவெங்கும் கடத்தல்கள், கொலைகள் நடைபெற்று வருகிற நிலையில்
சனநாயக சக்திகள் மற்றும் ஊடகத்திற்கெதிரான ஒடுக்குமுறை நிலவுகிற நிலையில்
தொழிலாளர் உரிமை மற்றும் பொருளாதார உரிமைக்கான அனைத்துவகையான போராட்டங்களும் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில்
இச்சர்வதேச அமைப்புக்கள் மௌனமாக இருக்கிற ராஜதந்திரத்தைக் கடைப்பிடித்து வருகின்றதனைக் காண்கிறோம். இச்சர்வதேச அமைப்புக்களின் கவனத்தை ஈர்க்கவே மீண்டும் மீண்டும் மக்கள் போராட வேண்டியிருக்கிறது. அவ்வமைப்புக்களின் அங்கீகாரம் இல்லாத போராட்டங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன அல்லது தங்களின் கொள்கைகளுக்கு இணங்கி நடக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அதனூடாக மக்கள் போராட்டங்கள் இலகுவாக விழ்ச்சியடைச் செய்யப்படுகின்றன. மக்கள் மீதான ஒடுக்குமுறை சகிக்கப்படக்கூடியதொன்றாக சித்தரிக்கப்படுகின்றன. இச்சர்வதேச அமைப்புக்கள் ஒடுக்குமுறையாளர்களைப் பாதுக்கப்பதில் கொள்ளுகின்ற அதீத அக்கறையை மக்களின் துயரங்களை துடைப்பதில் காட்ட முடிவதில்லை.
புலிகள் பயங்கரவாதிகள். அவர்கள் அழிக்கப்பட்டு வருகிறார்கள். தென்னாசியப் பிராந்தியத்தில் அச்சுறுத்தல் நீங்கும். உலகில் அமைதி சனநாயகம் ஏற்படும். இதற்கு முன்னால் மக்களின் அழிவு ஒரு சாதாரண விடயமாகிறது. மக்கள் வாழும் பகுதியில் எந்த தார்மிக நெறிகளும் இன்றி யுத்தம் மேற்கொள்ளலாம். மக்களை எவ்வாறும் அடிமைப்படுத்தியும் நடத்தலாம். கொலைகளும் கடத்தலும் நடக்கலாம். இந்த நிலை கிழக்கிலிருந்து வன்னி வரை – கடந்த பல வருடங்களாக நடைபெறுகிறது. ஒரு இனத்தின் இன அடையாளம் அழிக்கப்படலாம் . இதுதான் சர்வதேச நிலை
இன்று வரை நடந்திருப்பது இதுதான். சொந்த மக்;களால் செல்ல முடியாத – சுதந்திரமாக நடமாட முடியாத இந்தப் பகுதிகளில் இருந்து இந்திய, உள்ளுர் மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன. பணியாற்றக் கூடிய சிறந்த நற்பிரசைகளைக் கோரி நிற்கிறார்கள். மற்றொரு புறம் தெற்கில் மக்களின் ஆதரவை வேண்டி நிற்கிறார்கள். தேசத்தைக் காப்பதற்கு வாக்களிக்குமாறு வேண்டுகிறார்கள்.
மீண்டும் மீண்டும் நம் கண்முன்னே மக்கள் ஒடுக்குமுறைகள் கொடிய முறையில் – சகிக்க முடியாத வiகையில் நிகழ்ந்து செல்கிறது.
சிறந்த பணியாளர்களாகவும் சிறந்த வாக்காளர்களாகவும் இருக்கப் பழகிக் கொண்டால் போதும்.
வியார்.
புலிகளின் அரஜாகத்தனம் நாமறிந்ததே. ஆயினும் அவர்கள் தேசிய இன விடுதலை என்கிற கோசத்தை உறுதியாய் முன்வைத்துப் போராடினார்கள் என்பதுவும், அவர்களின் பின்னால் தமிழ் மக்களில் பலர் இணைந்து இருந்தார்கள் என்பதனையும் யாரும் மறுக்க முடியாது. புலிகளின் நிலையும் மறுபக்கம் தமிழ் மக்களின் நிலையும் இதுதான்.
புலிகளின் அரசியல் – ராணுவ பலவீனங்களினால் அராஜகவாதிகளின் தலைமையிலான தேசிய விடுதலை கூட கிடைக்காமல் போயிற்று. அவர்கள் முற்போக்கு வாதிகள் இல்லை என்பதற்காக அது போராட்டமே இல்லை, மக்கள் ஆதரவு பெற்றிருக்கவுமில்லை, மக்களின் எந்த நலனும் சம்பந்தப்பட்டுப் போராடவில்லை என்று கூறமுடியாது.
மற்றொரு புறம் 1980 களின் பின் தோற்றம் பெற்ற தமிழ் இளைஞர் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் யாவுமே ( சில வேளை ஒருசிலவற்றைத் திவிர்க்கலாமோ தெரியாது ) முற்போக்குச் சகத்pகளாக இருந்ததில்லை.
கருணா தன்னுடைய பிரிவிற்கான காரணங்களை முன்வைத்தபோது, தனது தலைவரின் வரட்டுத்தனத்தை முக்கியமானதொன்றாகக் குறிப்பிட்டார். E..P.R.L.F, T.E.L..O, P.L.O.T. என்பன இந்த நோயினால் பீடிக்கப்பட்டடிருந்தன. தங்களின் ஒற்றுமையை, தங்களுக்கிடையிலான ஒற்றுமையை நிலைநாட்ட முடியாது போனமை வரலாறு.
தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்ற வகையில் போராட்டச் சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்து அரசியல் தலைமையை வழங்க முடியாமல் போன அரசியல் பலவீனம் அப்போரட்டத்தை அழிவுறும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
தமிழ் பாராளுமன்ற வாதிகளின் தலைமையிலான போராட்டம் 1983 கலவரத்தினூடக அடக்கப்பட்டது போல், இன்று இளைஞர் இயக்கங்கத்தின் தலைமையிலான போராட்டம் ஒரு பெரும் போரினூடாக சொந்த வாழிடத்திலேயே அடக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தேசிய இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் தான் வகிக்க வேண்டி வரலாற்றுப் பணிகளை எல்லவற்றையும் கைவிட்தனது மக்களையே அவர்களின் பாரம்பரிய வாழிடத்தில் இருந்து “மீட்கப்படு;ம் நிலைக்கு” இட்டுச்சென்றுள்ளது. இந்த ஒடுக்குமுறைக்கும் அழிவிறக்கும் பின்புலமாக இருந்து செயற்பட்ட சக்திகளை புலிகளும் ஆதரவாளர்களும் இனங்கண்டு கொள்ளாது, போரட்டச் சக்திகளையே இனத் துரோகிகளாக மாற்றி வைத்திருந்த அரசியல் அவலம் இன்று அம்பலமாகியிருகிறது.
மக்கள் போராட்டங்கள் தொடரும் என்பது சமூக நியதி. ஆயினும் இந்த இழப்புகள்…
மீண்டு எழுவதற்கும், மீண்டு எழ வைப்பதற்கும் ஆன அரசியல் நமக்குத் தேவை.
வியார்
ஒரு குறிக்கோளை அடைய ஒரு தலைமை தான் சரி.
இது நிர்வாக சூத்திரம்.
இல்லையேல் பலர் சேர்ந்து ஒரு பரியை கெடுத்த கதைதான்.