இதுவரை இருந்த எங்களது போராட்டத்தை வழிநடத்திய சிந்தனை முறையில் மாற்றம் தேவை என்பது எல்லோராலும் உணரப்படுகின்றது. அப்படியாயின் எங்களிடமிருந்த ஒரு பொதுவான சிந்தனைமுறை, அதாவது எம்மக்களின் விடுதலைக்கான இதுவரை இருந்த அணுகுமுறைகளின் சிந்தனைமுறைதான் என்ன?
இந்த கேள்வி எழும்போதே அப்படியோரு சிந்தனைமுறை இருந்ததா என்றுகூட சிந்திக்கத் தோன்றுகின்றது. அப்படி பார்க்கும்போது எங்கள் மத்தியில் பெயர் தெரியாமலே பெரும்பான்மையான மக்களின் சிந்தனைமுறை புலிகளின் சிந்தனைமுறையாகத்தான் இருந்திருக்கின்றது. இதன் அடிப்படை எது?
இந்த சிந்தனைமுறை எங்களுக்குள்ளிருந்த சிந்தனைமுறைதான். இந்த சிந்தனைமுறைதான் எம்முரிமைக்கான போராட்டத்தில் பெரும்பின்னடைவையும், பெரியமனித அழிவையும் கொண்டுவந்துவிட்டது. ஆகவே இந்த சிந்தனைமுறையில் மாற்றங்காணவேண்டும்.
வன்னியில் போராட்டத்தலைமை அழிந்தபின்பும் பழைய சிந்தனை முறையுடன் சில முன்னெடுப்புக்களை தொடர்வது மீண்டும் எங்களை அழிவுக்குத்தான் கொண்டுபோகும். ஆகவே எங்களிடம் இருக்கின்ற இந்த சிந்தனைமுறை அடியோடு மாறவேண்டும். கடந்துவந்த முற்பது வருட அரசியல்போராட்டத்திலும் பின்வந்த முற்பது வருட ஆயுதப்போராட்டத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட சிந்தனைமுறைதான் இது.
இந்த சிந்தனைமுறை உருவானதின் காரணம் இதுவரை இருந்த போராட்ட தலைமைகளின் மையச்சிந்தனைதான். இந்த சிந்தனைகளுக்கெல்லாம் ஒட்டுமொத்த அடிப்படை யாழ்மையவாத சிந்தனை ஆகத்தான் இருந்திருக்கின்றது.
இதுதான்தான் புலிகளின் சிந்தனைமுறையும் கூட.
ஏன் இதுவரையிருந்த அனைத்து போராட்ட தலைமைகளின் சிந்தனையாகவும் இருந்திருக்கின்றது. இன்று புலம்பெயர் நாடுகளில் பெரும்பான்மையானவர்கள் இந்த யாழ்மையவாதசிந்தனை உடையவர்கள்தான். ஆகவே இந்த சிந்தனைமுறையை புரிந்து கொள்வதின் மூலமே எங்களது போராட்டசிந்தனையில் மாற்றம்வரும்.
புலம்பெயர் நாடுகளில் இந்த யாழ்மையவாதசிந்தனை முழுமையாக பேணிக்காக்கப்படுகின்றது. சில வேளை தளத்தில் கூட புலம் பெயர் நாடுகளில் உள்ள முழுமையான யாழ்மையவாதசிந்தனை இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் அங்கு மக்களின் வாழ்நிலை தொடர்ச்சியாக மாறுதலுக்கு உட்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் புலம் பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்கள் அங்கு உச்சத்தில் உள்ள யாழ்மையவாதசிந்தனையுடன் எந்தமாற்றமும் இல்லாமல் வாழ்கின்றார்கள். உதாரணமாக புலம் பெயர் நாடுகளில் உள்ள கோவில் நிர்வாகத்தில், தமிழ்பாடசாலைகளில், பழைய மாணவர்சங்கங்களில், சில கட்டமைப்புகளில் இந்த யாழ்மையவாதசிந்தனையின் அதிகாரத்தையும் சீரழிவையும் கண்கூடாக பார்க்கமுடியும்.
ஆகவே இந்த சிந்தனைமுறை மாறவேண்டும். இந்த அதிகார அரசுகளும், அதன் கூட்டாளிகளும் சேர்ந்து நிகழ்த்திய வன்னிமக்களின் அழிப்புக்கள் அனைத்திற்கும் காரணம் புலிகளின் போராட்டமுறைக்கு கிடைத்த தோல்விமட்டும்மல்ல. எங்கள் அதிகாரம் சார்ந்த கருத்தியலுக்கும், சிந்தனைமுறைக்கும் கிடைத்த மாபெரும் தோல்விதான். ஆகவே இந்த சிந்தனைமுறை ஆய்வு செய்யப்படாமல், அதன் அடிப்படையான யாழ்மையவாதசிந்தனையின் உள் நடைமுறை தெரியாமல் அடுத்தகட்ட முன்னெடுப்பு ஆரோக்கியமாக அமையாது. ஏனெனில் புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புத்தான் தளத்தில் உள்ள மக்களுக்கு பெரும்பங்கு ஆற்றவேண்டிய தேவையுள்ளது.
மிகவும் இழிவான நிலைக்குவந்தநிலையில், எம் இனத்தின் அடையாளங்கள் எல்லாம் நசுக்கப்படுகின்ற நிலையில் இருந்து இதை நாங்கள் ஒவ்வொருவரும் உணரவேண்டும். இது ஒரு முக்கியமான காலகட்டம் . ஒரு புதிய தளத்திற்கு போகவேண்டிய இந்தக்கட்டத்தில் இதுவரை இருந்த சிந்தனைமுறை தூக்கி எறியப்படவேண்டும். அப்படியாயின் இந்த யாழ்மையவாத சிந்தனை கொண்ட புலம் பெயர் மக்கள் இதை தெளிவாக உணரவேண்டும். இதன்முலம் தான் இந்த சிந்தனையில் மாற்றம் வரும் .
யாழ்மையவாதசிந்தனைமுறையில் இருந்து வெளியே வந்தால்த்தான்
1 ) புலிகளின் சிந்தனை முறையின் தொடர்ச்சியை ஏற்கமாட்டோம்.
2 ) உலகில் எங்களைப் போல் ஒடுக்கப்படுகின்ற மக்களுடன் உறவை வளர்ப்போம்.
3 ) சில ஊடகங்கள், சில ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் தெரிந்துகொண்டும் மீண்டும் புலிகளின்
சிந்தனையை வேறு வழியில் வளர்க்க முற்படமாட்டார்கள்.
4 )இப்போது உள்ள கட்டத்தில் ஏதோவிதத்தில் போராட முற்படுபவர்களை பெயரைக் கொடுத்து ஒதுக்கி வைக்கின்ற வேலையையும் செய்யமாட்டார்கள்.
5 ) தங்களை மட்டும் புனிதமானவர்கள் என்று மையப்படுத்தி கருத்துக்களை விதைக்க மாட்டர்கள்.
6 ) புலம்பெயர் நாடுகளில் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூறுவதை ஒரு வழிபாடாக, வியாபாரமாக மாற்றிக்கொண்டிருக்க மாட்டார்கள்.
ஏன் எல்லோருமே ஒரே தளத்தில் இயங்கக்கூடியதாக இருக்கும்.
எங்கள் எல்லோரிடமும் இருக்கின்ற அதிகாரம் சார்ந்த இந்த சிந்தனைமுறை தகர்க்கப்படவேண்டும். இதனால்தான் கடந்த காலங்களில் தங்களின் அதிகாரத்தை மட்டும் சார்ந்த கருத்தியல் என்பது புலிகளின் அரசியலாக எல்லா இடங்களிலும் அதிகாரம் செலுத்தியது. இதுதான் புலம் பெயர் மக்களின் சிந்தனை முறையிலும் ஆதிக்கம் செலுத்தியது. இதன் வளர்ச்சிப்போக்குத்தான் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் அழிக்கும் சக்தியாக மாற்றியது. இப்போது தளத்திலும், புலத்திலும் உள்ள அனைத்து போராட்டக் கூறுகளையும் அடியோடு அழித்து விட்டது. ஒட்டுமொத்த சமூகக் கூறுகளெல்லாம் நசுங்கிப் போய் விட்டது.
ஏன் எம்முரிமையைக்கூட பேச இருந்த தளத்தையும் அழித்துவிட்டது. இதற்கு எல்லாம் காரணம் இந்த யாழ்மையவாதசிந்தனையாகும்.
யாழ்மையவாதசிந்தனை என்ற குறியிட்டு சொல்லின் பின்னே உள்ள அதன் உள் நடைமுறையை புரிந்துகொண்டால்தான் நாங்கள் ஒவ்வொருவரும் இந்த சிந்தனைமுறையின் ஆதிக்கத்திலிருந்து வெளியே வரலாம். மேலும் எங்கள் சிந்தனைமுறைகளிலும் மாற்றம் வரும். இதன்மூலம் தான் புலிகள் உட்பட மற்றைய போராட்டசக்திகளும் இதுவரை இருந்த சிந்தனைமுறையில் இருந்து வெளியே வரலாம். இது தான் ஒரு பலமான தளத்தை உருவாக்கும் .
கடந்த காலங்களில் நிறைய விடயங்களுக்கு குறியிடும் சொல்லை (யாழ்மையவாதசிந்தனை )கொடுத்து ஒதுக்கிவிட்டோம். அதன் உள் நடைமுறையை பார்க்க முற்படவில்லை. இப்போது ” யாழ்மையவாதசிந்தனை” என்ற குறியிடும் சொல்லை உடைத்துப் பார்ப்பத்தின் மூலம்தான் எம் சிந்தனையை மாற்றி அமைக்க முடியும்.
யாழ்மையவாதசிந்தனை என்பதின் பொருளை நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்வோமாக!!
Could you please explaine JAALMAIYAVATHAM?
மாற்றூச் சிந்தனையாளர் சிவநாயகம் அய்யா காலமானதும் இங் கு பதிவுக்குரியது.அவரது வீச்சான சிந்தனைகள் கொட் ஸ்பிறீங் இல் சொல்லி வந்த அவரை வியாபாரிகள் ஏற்றூக் கொள்ளவில்லை அதிர்ந்து பேசத் தெரியாத இனிய மனிதர்.அவரது இழப்பின் கனம் இதயத்தை அழுத்த மனம் பாரமாகிறது.
1. “யாழ்மையவாதசிந்தனை என்ற குறியிட்டு சொல்லின் பின்னே உள்ள அதன் உள் நடைமுறையை புரிந்துகொண்டால்தான் நாங்கள் ஒவ்வொருவரும் இந்த சிந்தனைமுறையின் ஆதிக்கத்திலிருந்து வெளியே வரலாம். ”
2. “கடந்த காலங்களில் நிறைய விடயங்களுக்கு குறியிடும் சொல்லை (யாழ்மையவாதசிந்தனை )கொடுத்து ஒதுக்கிவிட்டோம். அதன் உள் நடைமுறையை பார்க்க முற்படவில்லை. இப்போது ” யாழ்மையவாதசிந்தனை” என்ற குறியிடும் சொல்லை உடைத்துப் பார்ப்பத்தின் மூலம்தான் எம் சிந்தனையை மாற்றி அமைக்க முடியும்.”
3. “யாழ்மையவாதசிந்தனை என்பதின் பொருளை நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்வோமாக”
ஞானசுந்தரம் மனோகரன் குறிப்பிட்ட மேலே சொல்லப் பட்ட மூன்று விடயங்களும் பிற்போக்கான முறையில் கட்டிவளர்க்கப்பட்ட வளர்க்கப்படுகின்ற யாழ் மையவாத சிந்தனை முறைகளை விளங்கி கொள்ள முற்படுவோருக்கான எத்தனமாகும்.
யாழ்மையவாதசிந்தனை குறித்த எனது பார்வையானது இப்படிச் செல்கின்றது ….. கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்கின்ற போது குதர்க்கமாகவும் தாமே அறிவில் சிறந்தவர்கள் நான் சொல்வதை கேள் என்கின்ற முட்டாள்தனமான, முரட்டுத்தனமான , விட்டுக்கொடுப்பற்ற, வரட்டுத்தனமான சிந்தனை போக்குகள் என்பன யாழ் மையவாதத்தின் ஒரு கூறாக இருக்கின்றது.
யாழ் மையவாதத்தின் மிக மோசமான கூறாக இருப்பது புறமொதுக்குதல் அல்லது தீண்டாமை என்பதை நான் அடையாளமாக பார்க்கிறேன். அவையாவன,-
• உறவுகளை புறமொதுக்குதல்
• பிரதேசரீதியாக (ஊர்/கிராமம்/வட்டாரம்/பிரதேசம்) புறமொதுக்குதல்
• சாதீய ரீதியாக புறமொதுக்குதல்
• பொருண்மிய அடிப்படையில் புறமொதுக்குதல்
• பல்வேறு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் புறமொதுக்குதல்
நீங்கள் யாழ்மையவாதசிந்தனை முறைமையை எப்படி பார்கிறீர்கள் வாசகர்களே நீங்களும் விளக்குங்கள்.
யாழ்ப்பாணன் பின்பற்ற ஏதோ ஒரு நாட்டு மக்களை உதாரணத்திற்குச் சொல்லுங்களேன்!
இயேசு சொன்னார், உங்களில் குற்றமில்லாதன் எவனோ அவன் முதல் கல்லை வீசட்டுமென்று.
புலிகள் சிந்தனையில் செயலில் பிழை விட்டிருக்கலாம், ஆனால் தமிழரின் போராட்டம் தோற்கவில்லை, முற்றாக திட்டமிட்டு அழிக்கப்பட்டது.
சூர்யா நாங்கள் யாரையும் பார்த்து திருந்த வேண்டியதில்லை நாங்களாகவே சரி தவறுகளை எடை போட்டு மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். எங்களது குழந்தைகளை வீட்டிலும் பாடசாலைகளிலும் நாம் வளர்க்கும் முறைமைகளில் இருந்தே சந்ததி சந்ததியாக நாம் சில வியாதிகளை எமக்கு தெரியாமல் அல்லது தெரிந்தும் தெரியாமல் வளர்த்து வருகிறோம் அதுவே இன்று பலர் சொல்லும் யாழ் மையவாதம் என்ற சிந்தனை முறையாக கருதலாம். அது நிறுவன மயப்பட்டு இருப்பதாக நான் கருதவில்லை, ஆனால் யாழ் சமூக கூற்றில் இருக்கும் இந்நோய் தமிழர் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்தி நிற்கின்றது. ஆனால் சிலர் உண்மையில் இச் சிந்தனை முறைமையை சமூக மாற்றம் ஒன்றின் மூலம் மாற்ற முடியும் என்பதை கவனத்தில் எடுக்காது, காழ்புணர்ச்சியை கொட்டுவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.
//ஆகவே இந்த குறியீட்டு பெயர்களை கொடுத்து விடுவதாலோ அல்லது அந்த வார்த்தகளை புரியாமல் சொல்வதாலோ நாங்கள் சரியான நடைமுறையை புரிந்து கொண்டதாக இல்லை. இப்போதுள்ள தளத்திலிருந்து மக்களின் பிரச்சனைகளை சரியாகப் புரிந்துகொண்டால் எந்தவித வார்த்தைகளும், குறியிட்டு பெயர்களும் தேவைப்படாது. பிரச்சனையை மட்டும்தான் பார்ப்போம். இதுதான் எங்கள் எல்லோரையும் பொதுத் தளத்திற்கு கொண்டுபோகும்// என்று குறியிடும் அரசியல் பற்றி மனோகரன் அவர்கள் சென்ற கிழமைதான் எழுதி இன்னமும் ஈரம் காய நிலையில் தானே யாழ் மைய வாதம் எனக்குறிசுட்டு வைப்பது எவ்வகையில் நியாயம். குருக்கள் செய்தால் குற்றமில்லை என ஊருக்குத்தான் உங்கள் உபதேசங்கள் நடக்கிறதா????பெரும்பான்மையான மக்களின் சிந்தனைமுறை புலிகளின் சிந்தனைமுறையாகத்தான் இருந்திருக்கின்றது என்ற வாதம் கூட புலிகளின் ஆயுதப் போராட்டதிலிருந்தே கணிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக இருந்த சுமார் 50 வருடத்திற்கு மேலான தமிழர்களினுடைய உரிமைக்கான குரல்கள் இவ்வகையான கருத்து மட்டிறுப்பில் துடைத்து வீசப்பட்டிருக்கிறது.
யாழ் மையவாதத்தின் மிக மோசமான கூறாக இருப்பது புறமொதுக்குதல் அல்லது தீண்டாமை என்றே வகைப்படுத்தினால்கூட இவைகளை அழித்து விடவே நாமும் துடித்தோம் அதுவே எங்களின் தாரக மந்திரம் என்றோதிய புலிகளின் வாதம் சரியென்றாகிவிடுகிறது. அவசர அவசரமாக நீங்கள் நிறுவ முனைகிற கருத்து நாவலருக்கு முற்பட யாழில் மட்டுமென்றில்லாமல் இலங்கையின் குறுநில மன்னர்களின் காலத்திலிருந்தே தொடர்கிறது. மாற்றுமத மக்கள் அக்காலத்தில் வெட்டி வீசப்பட்ட சம்பவங்கள் வீரப்பிரதாபங்களாக தமிழர்வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. இப்படியே போனால் வர்ணம் பிரித்த மனு மீது எங்களின் குற்றத்தைப் பதிவு செய்யலாம். இப்போது அவசியம் தேவை குற்றத்தைப் பதிவு செய்வதற்கான ஒரு இடமல்ல.ஆகவே எங்களிடம் இருக்கின்ற சிந்தனைமுறை அடியோடு மாறவேண்டும். என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவரிவர் என்று இப்போதும் குறிசுடுவதில் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதே என்கருத்து.
The author of this article is absolutely right. We Thamils have to adopt a new approach for our struggle. We have to understand the mistakes happened in the past and a new approach should be a ‘learnt’ approach. Name of the leader is not important, but characteristics of the leadership are important. The new leadership should not be a follower of LTTE, TNA, PLOTE or any of the past organisations. The leadership is for whole Thamil population and aim of the leadership should be to achieve Thamils political aspirations. I firmly hope time will find a right leadership with good qualities to take Thamils struggle forward. Leaders are like passing clouds, but leadership is like a Everest mountain.
> யாழ்ப்பாணத்தானுக்கு மற்ற ஊர்க்காரனை இளப்பமாகக் கதைப்பதில் தனிக்குஷி.
> வன்னியான் மட்டக்களப்பான் மன்னாரான் வடக்கத்தையான் இப்படி மற்ற
> ஊர்க்காரர்களை பட்டப்பெயர் கொண்டு அழைத்து தன்னை ஒரு மேன்மையானவனாகக்
> காட்டிக்கொள்வதில் அவனுக்கு நிகர் இல்லைதான். ஆனால் ஆயுதப்போராட்டம்
> தொடங்கியபோது யாழ்ப்பாணத்தான் செய்த வேலை ஐரோப்பா நாட்டிற்கு
> பறந்துபோனதுதான் அதன் பின் போராட்டத்தை நடாத்தியவர்கள் வன்னி இளைஞர்களும்
> கிழக்கு மாகாண இளைஞர்களும்தான். யாழ்ப்பாணத்தான் ஐரோப்பிய நாட்டில்
> கக்கூசு முதற்கொண்டு அனைத்தையும் கழுவிக்கொண்டு காசு சம்பாதிப்பதில்
> கவனமாக இருந்தான். அரைவேற்காடு பிரபாகரனை உசுப்பேத்தி புலிஇயக்கத்தை
> வீங்கச்செய்து பெருமை கொண்டாடிய யாழ்ப்பாணத்தான் வீரபாண்டிய
> கட்டப்பொம்மன் பாணியில் வீர வசனம் பேசிக்கொண்டிருந்தான்.
> 2004ல் கிழக்கு மாகாணம் புலிகளிடம் இருந்து விலகியபோது புலிகளுக்கு
> வீழ்ச்சியும் அழிவும் தொடங்கியது. வெளிநாடுகளில் இருந்து வீரவசனம் பேசிக்
> கொண்டிருந்த யாழ்ப்பாணத்தான் களத்திற்குப்போய் சண்டைபோடத்தயாரில்லை.
> வன்னி இளைஞர்கள் அநியாயமாக யுத்தத்தில் அழிந்துபோக புலம்பெயர்நாடுகளில்
> காசு சேர்ப்பதில் யாழ்ப்பாணத்தான் குறியாக இருந்ததான். புலிகளுக்கு
> எதிராக இந்தியா இலங்கை பாகிஸ்தான் சீனா என கூட்டு சேர்ந்து அடியைப்போட
> ஐரோப்பிய கனடா அவுஸ்திரேலிய தெருக்களில் விழுந்து புரண்ட
> யாழ்ப்பாணத்தானால் பிரபாகரனைக் காப்பாற்ற முடியவில்லை.
> முள்ளிவாய்க்காலில் கோவணத்தோடு பிரபாகரன் கிடந்தபோது சேர்ட்டும் ரவுசரும்
> போட்டு போய் பார்த்த கிழக்கான் கருணா கண்கலங்கியதும் பத்திரிகைகளில் வந்த
> செய்திகள்.
> அப்போதும் யாழ்ப்பாண்த்தானுக்கு தெரிந்திருக்கவேண்டும். எல்லொரையும்
> அணைத்துப்போகின்ற அரசியல் இல்லாட்:டி என்ன நடக்குமென்று. கிழக்கு
> பிரிந்தால் யாழ்ப்பாணத்தானுக்கு கோவணம்தான் மிஞ்சும் என்கிற வரலாற்று
> உண்மை அது.
> இதில் பிரதேசவாதம் இல்லை. ஆனால் யதார்த்த உண்மை இருக்கிறது. வீரவசனம்
> பேசுவது மட்டும் விவேகமில்லை. யாழ்ப்பாணத்தான் அதை மட்டும்தான் பேசி
> வந்திருக்கிறான். புலிகள் கடைசிக்காலத்தில் வன்னி மக்களை
> துன்புறுத்தியிருக்காவிட்டால் அந்த மக்கள் புலிகளுக்கு நல்லதொரு அரணாக
> இருந்திருப்பார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தான் மாவிலாறில் கைவைத்து
> மடுமாதாவை தூக்கிக்கொண்டு ஓடி சிறுவர் சிறுமிகளை பலாத்காரமாக
> இயக்கத்திற்கு கடத்தி மக்களை ஆயுதமுனையில் முள்ளிவாய்க்கால் வரை கடத்தி
> கடைசியில் யாருமே காப்பாற்ற முடியாதவாறு அழிந்துபோனார்கள்.
> சிந்திப்பதில்லை. மற்றவர்களின் கருத்துக்களை ஏற்பதில்லை. முற்று முழுக்கு
> சுயநலப்புத்தி கடைசியில் சர்வதேசமும் கைவிட்ட நிலையில் உலகின் நான்காவது
> பெரிய ராணுவத்தை விரட்டிய வீரர்கள் உலகின் சிறிய ராணுவத்திடம்
> தோற்றுப்போனார்கள்.
> துலைஞ்சுபோயம் புத்தி வரவில்லைப்பாருங்கள். இன்னும் வீரவசனத்திற்கு
> குறைவில்லை. 12000 பேரோடு தலைவர் வரப்போகிறாராம். உருப்படுமா
> இந்தக்கூட்டம். உலகத்தில் எந்தவொரு விடுதலைப்போராட்ட தலைவரும்
> பிரபாகரனைப்போல் கோவணத்தோடு போய்ச்சேர்ந்த வரலாறு இல்லை. வீரமரணம்
> எய்தாமல் சரணடைந்த பிரபாகரன் மக்களுக்காக தன் உயிரை தானே மாய்க்கத்தயராரக
> இருக்கவில்லை. அதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்த தமிழ்ச்சமூகமே தயராக
> இருக்கவில்லை. பிரபாகரன் தமிழ்மக்களுக்காக விட்டுச்சென்றது சீரழிந்த ஒரு
> வரலாற்றைத்தான். இந்த உண்மை இருக்க இன்னும் அரைகுறை யாழ்ப்பாணத்தான்
> வரலாற்றுவீரன் தேசியத்தலைவன் என இன்டநெட்டுக்களில் வசனம் பேசிக் கொண்டு
> இருக்கிறான்.
> கருணா பிள்ளையான் அரசியல்களில் முரண்பாடுகள் விமர்சனங்கள் இருக்கின்றன.
> ஆனால் அவர்கள் அன்று எடுத்த முடிவால் பல ஆயிரம் கிழக்கு இளைஞர்கள்
> காப்பாற்றப்பட்டுள்ளனர். கிழக்கு மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 95ல்
> புலிகளால் வன்னிக்கு யாழ்ப்பாணத்தான் பலவந்தமாக
> அழைத்துச்செல்லப்பட்டாலும் கொஞ்ச நாட்களில் திரும்ப
> இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த குடாநாட்டிற்கு அவன் ஒடி வந்துவிட்டான்.
> ஆனால் புலிகளிடம் மாட்டுப்பட்ட வன்னி மக்களுக்கு இறுதியில் கிடைத்தது
> துன்பமும் துயரமும்தான்.
> வீரவசனம் பேசிக்கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்தானுக்கு சொல்கிற புத்திமதி
> இதுதான். அரவணைத்துச்செல்கின்ற அரசியலுக்கு போகாமல் இருந்தால் இன்னமும்
> தலைவர் வருவார் புடுங்குவார் என்று ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டிருக்காமல்
> கால மாற்றத்திற்கேற்ப சிந்தனைகளை மாற்ற வேண்டும் இல்லாவிட்டால் மாறாத
> வரட்டுச்சிந்தனைகளுக்கள் நீயும் துலைஞ்சு சமூகத்தையும் துலைச்சுப்போட்டு
> நிற்பதை தவிர வேறு வழியில்லை
கருணா பிள்ளையான் போல் மகிந்தவை அரவணைத்துப் போனால் பிரச்சினகளுக்கெல்லாம் தீர்வு தானகவே வந்துவிடும். கருணா பிள்ளையான் அன்று பல ஆயிரம் யாழ்ப்பாணத்தானினதும் மட்டக்கிளப்பானினதும் மண்டையில் போட்டுத்தான் முடிவு ஒன்று எடுத்தார்கள். அதன் பின்பும் பல மட்டக்கிளப்பானின் மண்டையில் போட்டார்கள். கிழக்கில் துப்பாக்கி இல்லாமல் தேர்தல் வைத்துப் பார்த்தால் தெரியும் கருணா பிள்ளையான் எத்தனை கிழக்கு மக்களைக் காப்பாற்றியுள்ளார்கள் என்று.
உங்களின் விமர்சனத்தில் அதி தீவிரமான பிரதேசவாதம் இருக்கின்றது. முதலில் யாழ்பாணத்தான் எனக் குறி வைத்து தாக்கும் பண்பாட்டை நிறுத்துங்கள். உங்களை போல சிலர் யாழ்பாணத்திலும் இருக்கின்றார்கள் அவர்களும் நீங்களும் சேர்ந்துதான் சந்தர்ப்பவாத பிரதேசவாதம் பேசுகின்றனர் அதனை தொடரவும் செய்கின்றனர். இனம் இனத்தோடு தான் சேரும். யாழ்பாண மையவாத சகதியில் சகல யாழ் தமிழர்களும் உழல்வதாக நான் கருதவில்லை. அத்துடன் அது நிறுவன மயப்பட்டதாகவும் இல்லை. பொறுப்பற்ற, காழ்புணர்வு கொண்ட சமூக உளவியல் யாழ் சமூகத்தில் மட்டுமல்ல ஏனைய இடங்களிலும் உண்டு, உதாரணமாக நீங்கள் இல்லையா!
ஈ-மெயிலில் வந்த்ததை விண்ணன் அப்படியே பிரதிசெய்து இனிஒருவில் படித்துவிட்டார். சொந்த புத்தி இருந்தால் ஓரளவேனும் சுய தணிக்கை செய்திருப்பார் புதிய பின்னூட்ட மன்னன்.
படைத்துவிட்டார் என்று வரவேண்டும்.
🙂 இதோ ஈழத்திற்கு அடுத்த பெரியார் கிடைத்து விட்டார். இனி இவெர் பின்னால் போனால் எமக்கு ஈழம்கிடைத்து விடும். “அடிக்க அடிக்க “அடியை வேண்டிக்கொண்டு,இவெர்கள் எவ்வளவுநல்லா அடிக்கிறார்கள் என்ற தாமு- சார்லி காமேடிபோல், சிங்களவன் எவ்வள்வு அடித்தும் திருந்தாமல் இந்தக் கழுதை இன்னும் பிரதேசவாதம், சாதி…
நம்மில் பலா் இன்னும் அறியாமை என்னும் குகைக்குள்ளேயே பயணம் செய்வதை அவதானிக்கமுடிகிறது,இவா்கள் ஒளியைக்காண்பதற்கு நிறய பயணம் செய்யவேண்டியுள்ளது.
மனித இனத்திற்கு பொதுவாக உள்ள சில குணாதிசயங்களை ஒரு ஊருக்கோ அங்கே வாழும் மக்கழுக்கோ உரியதாக குறிப்பிட முற்படுவது நகைப்பானது.
இத்தாலி என்ற நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கே வடக்கான் தெற்கான் என்ற வேறுபாடும் அதனால் நடக்கின்ற மனித உரிமை மீறல்கழும் அவமானப்படுத்தல்கழும் அங்கு வாழ்கின்றவா்களுக்கு மட்டுமே புரியும் இப்படி உலகம் பூராகவும் இறங்கி ஆராய்ந்து சென்றால் நாம் யாவருமே ஒரு தாய் வயிற்றில் பிறந்தவா்கள் என்பது புரியும்.