18.12.2008.
ருவாண்டாவில் 1994ம் ஆண்டு நடந்த இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ருவாண்டா நாட்டு முன்னாள் மூத்த பாதுகாப்பு தியோனெஸ்ட் பகோசோரா மீது சர்வதேச நீதிமன்றம் ஒன்று விதித்த ஆயுள் தண்டனையை ருவாண்டா வரவேற்றிருக்கிறது.
இனப்படுகொலை மற்றும் மானுட குலத்துக்கு எதிராக குற்றம் இழைத்ததாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் இவருக்கு நியாயமான தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்று ருவாண்டாவுக்கான சர்வதேச கிரிமினல் தீர்ப்பாயத்தில் ருவாண்டா நாட்டுக்காக வாதாடிய அலோய்ஸ் முடாபிங்வா கூறினார்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக தான் மேல் முறையீடு செய்யப்போவதாக பகோசோரா கூறினார்.