வடபகுதியில் இலங்கை அரசின் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன. மானிப்பாய் அச்சுவேலி ஆகிய பகுதிகளில் நேற்று முதல் பதினைந்து பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கிழ் பிடியாணை இன்றி கொழும்பில் இருந்து சென்ற புலனாய்வு பிரிவினர் கைதுகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
கைதாகும் அனைவரும் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரிகிறது. கைதானோரில் முன்னை நாள் புலி உறுப்பினர்கள் சந்தேகத்திற்குரிய ஏனையோரும் கைதானதாகத் தெரிகிறது.
இலங்கை அரசோ கைதாவோரை புலிகள் என்று அடையாளமிட முயற்சிக்கிறது. இலங்கை அரசிற்கு ஆதரவாக புலம் பெயர் புலி சார் அமைப்புக்களும் அவர்கள் புலிகள் தான் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இடையில் துவம்சம் செய்யப்படுவது அப்பாவி மக்களே.
உலகம் முழுவதும் புலனாய்வுப் பிரிவுகளோடு நெருங்கிய உறவை பேணிவரும் புலி சார் அமைப்புக்களின் காட்டிக்கொடுப்பு நடவடிக்கையா இது என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
President Ranasinghe Premadasa said that there is only one government in this country.