மாநாட்டில் முன்னுரிமை:பயங்கரவாதத்தை ஒழிக்க !

[14 – July – 2008]
 
* திருப்பதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்த உபாயத்தை வகுப்பது தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.ஆகஸ்ட் 2, 3 இல் சார்க் உச்சிமாநாடு இடம்பெறும். இந்த மாநாட்டில் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒன்றிணைந்த புதிய தந்திரோபாயத்தை மேம்படுத்துதல் தொடர்பாக கலந்து ஆராயப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதியில் வைத்து நிருபர்களுக்கு சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

சார்க் உச்சிமாநாட்டுக்கு வருகை தரும் அதிமுக்கிய பிரமுகர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதேசமயம் சில அதிமுக்கிய பிரமுகர்கள் தமது சொந்தப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வருகை தருவார்களெனவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான விமர்சனங்களை நிராகரிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்திய அரசாங்கத்தினால் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் தனது சொந்தப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தான் திருப்பதிக்கு வருகை தந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க இந்தியாவுக்கான ஜனாதிபதியின் விஜயம் தனிப்பட்டதொன்றெனவே தெரிவிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்துக்கு சென்று திருப்பதி வெங்கடேஸ்வரரை தரிசித்த பின் சனிக்கிழமை இரவே ஜனாதிபதி நாடு திரும்பிவிட்டார்.

ஆனால், அவர் புதுடில்லிக்கு சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசவுள்ளதாக கொழும்பில் பரவலாக ஊகங்கள்