மாணவர் போராட்டங்களின் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிகவும் கடினமான போராட்டத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையை சீர் குலைப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தீய சக்திகளின் பெறியில் மாணவர்கள் சிக்கிவிடக் கூடாதென அவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஒழுக்கம் சீர் குலைந்துள்ளதாகவும், இதன் ஓர் கட்டமாகவே ருஹூணு பல்கலைக்கழக துணைவேந்தர் தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான விடயங்களை பெற்றோர் பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ரன்தெம்பை கெடட் கல்லூரியில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மயமாக்கலுக்கு எதிராகவும், மாணவர்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட்டங்கள் தீவிரமடைவதை இலங்கை அரசு தீவிரமாக ஒடுக்க முனைகிறது. முன்னதாக இலங்கை உயர்கல்வி அமைச்சர் ஆயிரம் மாணவர்கள் வரை சிறையிலிடத் தயாராகவிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணத்து அசல் தமிழில் கோத்தபாயா என்னோடு கதைத்தார் அவர் சொன்னார் மாயா நந்த சாமியிடம் சுளயாக பவுண்டுகள் கொடுத்ததாகவும் அவையள் இந்த மாணவர மடையராக்காமல் விசராக்குவதாகவும் கவலைப்பட்டார்.