உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் பல விதமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இந்தியாவில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் பிரிட்டனின் கோவிஷீல்ட்,ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என மூன்று தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியின் தரம் பற்றி எந்த தரவுகளும் இல்லை. அரசு இதன் பரிசோதனை முடிவுகளை முழுமையாக வெளியிடாத காரணத்தால் இந்த தடுப்பூசிக்கு பெரிய அங்கீகாரம் எதுவும் இல்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை இந்தியாவில் மக்களுக்குச் செலுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதை சிப்லா என்ற நிறுவனம் அமெரிக்காவில் இருந்து வாங்கி மக்களுக்கு வழங்க அனுமதியளித்துள்ளது. மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவோம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளில் இரண்டாயிரம் ரூபாய் வரை வைத்து மக்களுக்கு போடப்படுகிறது. மரடானாவில் விலை குறித்து எதுவும் தகவல்கள் வெளியாகவில்லை.