மாகாணங்களின் நிலங்கள் மற்றும் நிதி நீதியான அதிகாரங்கள்:ஆலோசனை குழுவிடம் பரிந்துரை

மாகாணங்களின் நிலங்கள் மற்றும் நிதி நீதியான அதிகாரங்கள் போன்ற கொள்கைகளை முன் வைத்து தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி சர்வ கட்சி ஆலோசனை குழுவிடம் பிரேரனை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

இவ்வாறான இந்த யோசனை இன ரீதியான பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் ஊடக பேச்சாளர் அஸட் மௌளானா கருத்து தெரிவித்த போது கிழக்கு மாகான முதலமைச்சர் விவனேசத்துறை சந்திர காந்தன் அவர்களினால் சர்வகட்சி ஆலோசனை குழுவிற்கு கட்சியிலிருந்து ஒருவர் விரைவில் தெரிவு செய்யப்ப்ப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதுவரை சர்வகட்சி ஆலோசனை குழுவிற்கு தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படவில்லை இது தொடர்பான யோசனை அடுத்து நடைப்பெற இருக்கும் சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி அவர்களால் தீர்மானிக்கப்படும் என சர்வ கட்சி ஆலோசனை குழுவின் தலைவர் திஸ்ஸ் வித்தாரண தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.