தமிழீழ விடுதலைப்புலிகள், மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக வருவதை விரும்பினார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி தன்னுடைய பதவியிலிருந்து விலகிச்செல்லும் போது, ராஜதந்திரிகளுக்கு வழங்கிய விருந்துபசாரத்தின் போதே அவர் இவ்வாறு கூறியதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவானால், தாம் 11 வருடங்களாக மேற்கொண்ட அனைத்து காரியங்களும் அழிந்துப்போய் விடும் எனவும் அவர் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமெரிக்காவின் அப்போதைய தூதுவர் ஜெப்ரி லக்ஸ் டெட் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு கேபிள் மூலம் அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் 2005 வசித்த மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரான இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர், படைகளில் இருந்து தப்பிவந்த 300 படையினரைக் கொண்டு யாழ்ப்பாணத்தின் தேர்தல் பணிகளுக்காக செல்லவிருந்ததாகவும் அதனை தாம் தடுத்ததாகவும் சந்திரிகா இந்த விருந்துபசாரத்தின் போது குறிப்பிட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க,தேர்தலில் வெற்றிப்பெற்றால் தமது பொதுவாழ்க்கை தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் சந்திரிகா இதன் போது கூறியதாவும், அப்போதைய அமெரிக்க தூதுவர் ஜெப்ரி லக்ஸ் டெட் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இது ஏற்கன்வே தெரிந்த விடயமே, 275 கோடி பணமும் கொடுக்கப்பட்டது, அத்தோடு வன்னி புலிகலின் கட்டுப்பாட்டில் இருக்க அனுமதிக்கப்படும் என்றும், கிழக்கு மாகானத்தை அரசு கைப்பற்றும் என்றும் ஒப்பந்தம் செய்த்தாக தகவல் உண்டு, ஆனால் கடைசியில் பொல்லை கொடுத்து அடிவாங்கி புலி ஒழிந்தது மட்டும் அல்ல, தமிழ் மக்களை காட்டிக்கொடுதது விட்டே ஒழிந்த்து