ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளிட்டோருக்கு களனி பல்கலைக்கழகம் இன்று கௌரவ டொக்டர் பட்டங்களை வழங்க உள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் படிப்பிற்கான பட்டமளிப்பு வைபம் இன்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வெலமிட்டியாவே குசலதம்ம தேரர் மற்றும் வேந்தர் டொக்டர் சரத் அமுனுகம தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.
இந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட விமானப்படைத் தளபதி ரொசான் குணதிலக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன மற்றும் சிவில் பாதுகாப்புப் படைப் பிரிவின் தலைவர் ஜெனரல் சரத் வீரசேகர ஆகியோருக்கு கௌரவ டொக்டர் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
120000 tamil makkalai kontru koviththu 300000 makkalai mutkampikalil vattuvabarkaluku doctor pattam.
evan evan, ethu ethukku ellam intha pattam kodukkanum entra arukathiya illmal poivittathu.