மஹிந்த ஓர் இராணுவ ஆட்சியாளர் அல்ல – ஜீ.எல்.பீரிஸ்

அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு யுத்தத்தை முன்னெடுத்த போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இராணுவ ஆட்சியாளராகக் கருத முடியாதென அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க அரசாங்கம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கு இடையில் ஓர் சமநிலை பேணப்பட வேண்டியது இன்றியமையாததென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
 
பொதுவாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஓர் இராணுவ ஆட்சியாளராகக் கருதப்படுகின்ற போதிலும் அவர் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.