மவோயிஸ்ட் போராளிகளை ஒடுக்க விஷேட காவற்படை

நக்சலைட்-மவோயிஸ்ட் போராளிகளின் செயற்பாடுகள் அதிகமாக காணப்படும் 6 இந்திய மாநிலங்களில் 10 ஆயிரம் காவற்துறையினரை பணியில் அமர்த்த இந்திய மத்திய காவற்துறை (சிஆர்பிஎப்) திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிசா, மகாராஸ்டிரா, பிகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் விசேட பயிற்சிகளைப் பெற்ற காவற்துறையினரை பணியில் அமர்த்தத் திட்டமிட்டிருப்பதாக சிஆர்பிஎப் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த அதிரடிப் படைக்கு ‘கோப்ரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆயிரத்து 389 கோடி இந்திய ரூபா செலவில் இந்தப் படை அமைக்கப்படும். இதன் தலைமை அலுவலகம் புதுடெல்லியில் இருக்கும் எனவும் கோப்ரா படைக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 3 ஆண்டுகளுக்கு 491 கோடி செலவிடப்படும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். நக்சலைட் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அனுபவம் பெற்ற, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய பாதுகாப்பு சேவை அதிகாரி கே. துர்கா பிரசாத், கோப்ரா படைக்குத் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.