மவுரிட்டானியாவில் ராணுவப் புரட்சி!

08.08.2008.
ஆப்பிரிக்க அரபு நாடான மவுரிட் டானியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி ராணுவம் ஆட்சியைக் கைப் பற்றியது.

ஜனாதிபதி சிதி அவுத் அப்துல் லாஹி, பிரதமர் யஹியா அவுத் அகமத் வகிப் ஆகியோர் சிறையில் அடைக் கப்பட்டனர். படைத் தலைவர் முகமத் அவுத் ஷேக் முகமத், ஜனாதிபதியின் மெய்க்காப்பு படைத் தலைவர் ஜென ரல் முகமத் அவுத் அப்துல் அசீஸ் ஆகியோரை பதவி நீக்கம் செய்து ஜனாதிபதி புதன்கிழமை காலை உத் தரவிட்டார். இதைத் தொடர்ந்தே அப் துல் அசீஸின் தலைமையில் கவிழ்ப்பு நடத்தப்பட்டது. அப்துல் அசீஸைத் தலைவராகக் கொண்ட ராணுவ ஆட் சிக் கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.

1960-ல் பிரான்ஸிடமிருந்து சுதந் திரம் பெற்ற மவுரிட்டானியாவில் அதன் பின் பத்து கவிழ்ப்புகளும், கவிழ்ப்பு முயற்சிகளும் நடந்துள்ளன. இஸ்ரேலுடன் தூதரக உறவு உள்ள மூன்று அரபு நாடுகளில் ஒன்றான இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப் பட்டது. இதோடு நாட்டின் முக்கி யத்துவமும் அதிகரித்தது. 21 ஆண்டு கள் நீடித்த ஜெனரல் மவ்யாஸித் அக மத் தாயாவின் ராணுவ எதேச்சதிகார ஆட்சியைக் கவிழ்த்து நாட்டில் ஜன நாயக ஆட்சியை நிறுவுவதில் முக்கி யப் பங்கு வகித்தவர்தான் இப்போது ராணுவ ஆட்சிக்குத் தலைமை தாங் கும் அப்துல் அசீஸ்.

அல்கொய்தா வுடன் ஜனாதிபதி சமரச முயற்சியில் ஈடுபட்டதும் முன் னாள் ராணுவ எதேச்சதிகார ஆட்சிக் காலத்தில் ஊழலில் மூழ்கித் திளைத்த சிலரையும் உட்படுத்தி மந்திரி சபையை மாற் றியமைத்ததும் இவர்க ளுக்கு மேலும் கோபமூட்டியது.

இது ஒரு அமைதியான கவிழ்ப்பு என்று செய்திகள் கூறுகின்றன. ஜனா திபதி அவரது அரண்மனையிலேயே சிறை வைக்கப்பட்டார்.