மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வும் கூட்டு ஒப்பந்தமும் நடந்து முடிந்த சில நாட்களுக்குள் இலங்கை தோட்ட முகாமையாளர்களின் சங்கம் டிக்கோயா தரவளை விளையாட்டு கழக கேட்போர் கூடத்தில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 2013.05.19 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு மேற்படி செயலமர்வில் தோட்ட முகாமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் டிரஸ்ட் நிறுவனத்தின் நுவரெலியா பிராந்திய முகாமையாளர், வைத்தியர் ரவியும் உரையாடினர்.
வைத்தியர் ரவி தனது உரையில் மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும், சுகாதார வசதிகள், பிள்ளை பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பாகவும் உரையாற்றினார். அவரது உரையில் தோட்டத் தொழிலாளர்களின் மலசல கூட வசதிகள் நவீன மயப்பட்டிருப்பதுவும் அவை 90 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் வழங்கிய தரவுகளையும் 2013 ஆம் ஆண்டின் நுவரெலியா பிரதேச செயலகம் தயாரித்து வழங்கியுள்ள தரவுகளையும் நோக்கும் போது பாரிய வித்தியாசத்தினை காணக் கூடியதாக உள்ளது.
100 வீதம் அனைத்து மக்களுக்கும் தனியான மலசல கூடங்கள் இருக்கக்கூடிய பிரதேசங்களாக நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் பெரகும் புர பிரதேசமும், ருவன்எலிய பிரதேசமும், மீபிலிமான பிரதேசமும், பட்டிபொல பிரதேசம், கந்தபலை கல்பாலம பிரதேசமும், நுவரெலியா நகர பிரதேசமும், புளு எல பிரதேசமும் இனங்காணப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் அதிகமாக தனியான மலசல கூடங்கள் இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில் திம்புல பிரதேசம் 621 குடும்பங்களும், டயகம பிரதேசத்தில் 494 குடும்பங்களும், வொவெல் பிரதேசத்தில் 362 குடும்பங்களும் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மொத்தத்தில் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவில் 5182 குடும்பங்கள் தனி மலசல கூட வசதியில்லாமல் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்படி தரவுகளின் படி தோட்டம், நகரம், கிராமம் என்னும் அடிப்படையில் நோக்குமிடத்து தோட்ட பிரதேசங்களிலேயே அதிக மலசல கூட வசதி இல்லாமை இனங்காணப்பட்டுள்ளது. மேற்படி தரவுகள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட மத்திய நகரப் பகுதியை தவிர்ந்த பம்பரக்களை பிரதேசமும் அங்கு கண்டி, நுவரெலியா பிரதான பாதைக்கு கீழ் காணப்படும் தோட்ட குடியிருப்புக்களாய் இருந்து P.று.னு தொழிலாளர்கள் வாழும் லயன் அரைகளில் வாழும் மக்கள் பல வருடகாலமாக மலசல கூட வசதியில்லாமல் வாழ்வதுவும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 41 குடும்பங்களுக்கு பொது மலசல கூட வசதி இல்லாமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை, லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளான தலவாக்கலை, லிந்துலை, ஹொலிவூட், பெயார்வெல் போன்ற பிரதேசங்களில் மொத்தமாக 235 குடும்பங்களுக்கு தனியான மலசல கூட வசதிகள் இல்லாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களில் 11510 பேர் பொது மலசல கூடங்களை பாவித்து வருவதுடன் 34859 மலசல கூடங்களின் கழிவுகள் பொதுவான நதிகள், பொது வடிகால்கள், வாய்க்கால்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இவ்வாறான துர்பாக்கிய நிலைமை காரணத்தினால் மலையகத்தில் கடுமையான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன் மலையக மக்களின் இருப்பின் ஸ்தீர தன்மைக்கும் அச்சுறுத்தலாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
தனியான வீடு, வீட்டிற்கு தேவையான மலசல கூடம், வீட்டுரிமை என்பவை இன்னும் எத்தனை ஆண்டு காலத்திற்கு கனவாகவே இருக்கப் போகின்றது என மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஏங்கித் தவிப்பது.
Late Chandrasekaran as the Leader of the Up Country Peoples Front provided an alternative to the Thondaman Family dominated Ceylon Workers Congress. Who has filled that vaccum?
னம் மக்கள் குடிபோதைக்கு செல்வழிக்கும் பணத்தை அவர்கள் ஒரு வருடம் சேமித்தாலே இது போன்ற வசதிகளை அவர்களாகவே அமைத்து கொள்ளளாம்,
That is right Mr. Premaraj tobacco and alcohol are bad. I hear about the Tamasha that Honourable Arumugam Thondaman had some where in India.