மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலக் கோரிக்கையான நாளொன்றுக்கு ஐநூறு ரூபாவுக்கான சம்பளப் போராட்டத்துக்கு இன்று வெற்றிகிட்டியுள்ளது.
இன்று மாலை கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய தொழிற்சங்க ஒப்பந்தத்தின் பிரகாரம் மலையகத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 380 ரூபாவும், அனைத்து ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய நாட்சம்பளமாக 515 ரூபாவும் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அடிப்படைச் சம்பளமாக நாளொன்றுக்கு 285 ரூபாவும், அனைத்துக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய சம்பளமாக 405 ரூபாவுமே மலையகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருந்தது.
இன்று மாலை கைச்சாத்திடப்பட்ட தொழிற்சங்க ஒப்பந்தத்தின் பிரகாரம் புதிய சம்பள முறைமை எதிர்வரும் இரண்டு வருடங்கள் வரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் தானே போட்டிருக்கிறார்கள்,நடைமுறைப்படுத்த வேண்டுமே?எத்தனை ஒப்பந்தங்கள் கிழித்து எறியப்பட்டன?எத்தனை ஒப்பந்தங்கள்”தூங்குகின்றன”?