ஜூலியன் அசான் இற்கு எக்குவாடோர் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ள போதிலும் பிரித்தானிய அரசு அவரைக் கைதுசெய்ய முனைப்புக் காட்டுகிறது. லண்டனில் உள்ள ஏக்குவாடோரியன் தூதரகத்தை விட்டு வெளியேறினால் அவரைக் கைதுசெய்வோம் என்று தூதரகத்தின் முன்பாக பெரும் பணச்செலவில் போலிஸ்படைகளோடும் கண்காணிப்புக் கருவிகளோடும் நிலைகொண்டுள்ளது.
அமரிக்கா குறித்க உண்மைகளை வெளியிட்டமைக்காக அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரித்தானியா, சுவீடன் ஊடாக அமரிக்கா அவரை நாடுகடத்த முற்படுகிறது.
தற்போது அசாஞ்ச் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்து எக்குவாடோர் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் மார்கோ அல்புஜா மார்டினஸ் கூறுகையில், ”அசாஞ்ச் மிகவும் மெலிந்து வருகிறார். அவரது உடல் நிலை மோசமாகியுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவரை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கு பிரிட்டன் அரசு அனுமதிக்க வேண்டும்” என்று கூறினார்.